கேரளாவின் பெரிந்தல்மண்ணா
காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார் . அவருடைய நடை , உடை, பாவனை எல்லாம் தமிழ்நாட்டுப் பெண் போலிருக்கிறது .
அவருக்கு சானிடைசர் கொடுத்து
உள்ளே அனுப்புகிறார்கள் .
உள்ளே சென்றவர் காவல்
நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான (PRO) ஷாஜியை சந்திக்கிறார் ....
ஷாஜியிடம் , தான் ஒரு ஜவுளி
நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் ,
கேரள அரசு பஸ்ஸில்
பயணிக்கும்போது ,
தன்னுடைய பர்சும் , பர்சிலிருந்த
பத்தாயிரம் ரூபாயும் தொலைந்து
விட்டதாகவும் , அதற்காக புகார் அளிக்க
வந்திருப்பதாகவும் கூறினார் .
அதற்கு ஷாஜி புகாரை எழுதித்
தருமாறு கேட்டுள்ளார்..
புகார் எப்படி எழுத வேண்டும் என்று தனக்குத் தெரியாது என்று கூற , ஷாஜி ஏற்கெனவே அங்கு இருந்த ஒரு புகாரைக் காட்டி அதை மாடலாக கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறார் .
அதோடு பிற அதிகாரிகளுக்கு
தகவலும் சொல்லியிருக்கிறார் . அந்த பெண்ணும் புகாரை எழுதிக் கொடுத்துள்ளார்.
ஷாஜி புகாரில் போன் நம்பரையும்
எழுத சொன்னபோது புகார் இருக்கட்டும்...
ஆனால் இதை வளர்த்துக் கொண்டு போக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் .
பெண் தமிழ்நாட்டுக்காரர்
என்பதால் மலையாளம் தெரியவில்லை .
அதனால் அவரிடம் ஷாஜி
எளிமையான மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் உரையாடியிருக்கிறார் .
மேலும் ஷாஜி , கேரள அரசுப்
பேருந்து டெப்போவுக்கு போன் செய்து விபரங்களையெல்லாம் கூறியிருக்கிறார் .
ஆனால் அங்கிருந்து எந்தத்
தகவலும் கிடைக்கவில்லை .
பணத்தைத் தவிர வேறெதுவும் போகவில்லை என்பதால் பணத்தை யாராவது திருடியிருக்க வேண்டும் .
இல்லையென்றால் பணப்பை நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
காவல் நிலையத்தில் பெண்ணை
அமர வைத்து நல்லவிதமாகத்தான் நடத்தியிருக்கிறார்கள்....
பயணம் செய்யும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறார்கள்..
இடையில் பெண் அனுமதி பெற்று பாத்ரூமுக்கும் போய் வந்திருக்கிறார் .
தொடர்ந்து புகாரை பதிவு செய்யப் போகிறோம் , ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல ,
அந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
அவர்கள் மீண்டும்
வற்புறுத்த அந்தப் பெண் சொல்லியிருக்கிறார் ....
"நான் ASP ( உதவி காவல் கண்காணிப்பாளர்) யாக முதல் முறையாக சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன்" என்று கூறுகிறாா் .
அவா் சொன்னதை
யாரும் கண்டு கொள்ளவில்லை .
யாரும் நம்பிய மாதிரியும் தெரியவில்லை .
பக்கத்தில் இருக்கையில் அமர்ந்து இருந்த ஷாஜியிடமும் எந்த அசைவும் இல்லை .
பெண் மீண்டும் ,
"நான் ஹேமலதா IPS---ASP யாக
சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன்" என்று பெயரோடு சொன்னதும் , ஷாஜி உட்பட எல்லோரும் படாரென்று எழுந்து சல்யூட் அடித்திருக்கிறார்கள் .
தமிழ் நாட்டைச் சேர்ந்த ஹேமலதா
IPS-க்கு முதல் முறையாக ASP-யாக
போஸ்டிங் பெரிந்தல்மண்ணா-வில்
கிடைத்திருக்கிறது ....
சார்ஜ் எடுப்பதற்கு முன்னால்
காவல் நிலையம் எப்படி இருக்கிறது , அங்குள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் , புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் ,
என்றெல்லாம் தெரிந்து கொள்ள
சார்ஜ் எடுப்பதற்கு முதல் நாள் காவல் நிலையம் சென்றபோது நடந்தது தான் இதெல்லாம்.
ஹேமலதா , எல்லோரையும் வெகுவாக பாராட்டுகிறார் .
சாதாரண தமிழ்நாட்டுப் பெண்ணாக புகார் கொடுக்கச் சென்ற தனக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்பியது ,
உள்ளே சென்ற பிறகு உட்கார
வைத்துப் பேசியது , மலையாளம் தெரியாத தன்னிடம் ஷாஜி எளிமையான மலையாளமும், ஆங்கிலமும் கலந்து பேசியது ,
தேவையில்லையென்றாலும்
பாத்ரூம் போக அனுமதி கேட்டபோது அனுமதித்தது .
பணத்தைத் தொலைத்ததற்காக புத்திமதி கூறியது .....
மொத்தத்தில் புகார் அளித்தவரை மரியாதையாக நடத்தியது என்று எல்லோரையும் பாராட்டியிருக்கிறார்.
குறிப்பாக PRO ஷாஜியை கை தட்டி பாராட்டியிருக்கிறார் !
இதேபோல் நமது பட்டுக்கோட்டை சேர்ந்த ஒரு தமிழச்சியும் கேரள வனத்துறையில் ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஆக சேர்ந்து வனவிலங்குகளை காப்பதில் குறிப்பாக யானைகளை வேட்டையாடுபவர்களை வேட்டையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
கேரளாவை கலக்கும் நமது தமிழ் பெண்மணிகளுக்கு.....
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
மனிதம் போற்றும் அரசும் & வழிமுறைளும் & திறமையான ஆளுமைகளும்.
தலைவணங்குகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக