அவர்கள் மார்ச் 12ம் தேதி திமுக எழுப்பிய மாஸ்க் அனைவரையும் போட வைக்கனும் என்ற விவாதத்திற்கு பதில் அளித்தபோது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் immune suppressive drugs அதாவது நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் மட்டப்படுத்தும் மருந்துகளை எடுப்பவர்கள்(இல்லை எனில் அந்தபுதிய வேறு உறுப்பை உடல் நிராகரித்துவிடும்) ,புற்றுநோயாளிகள்(immune suppressive drugs), சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் கட்டடற்று இருப்பவர்கள்(நோயினாலும் நோய்க்கு எடுக்கும் அலோபதி மருந்துகளும் இவர்களது நோய் எதிர்ப்பாற்றலை வெகுவாக பாதிக்கும்) , வயதானவனர்கள், இவர்காள் தான் உண்மையில் இந்த நோயினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவரகள். இவர்கள் மாஸ்க் போடுவது வேண்டுமானால் சற்று அவர்களுக்கு பலன் தரலாம் என்கிறார்.
நூற்றுக்கு நூறு தனது மருத்துவ அறிவை மிகச்சரியாக, அறிவியலுக்கு உண்மையாய், மக்களுக்காக அன்று பேசியிருக்கும் அமைச்சருக்கு நமது வாழ்த்துகள் சொல்லும் அதே வேளையில், இங்கு ஒரு விசயம் நாம் கவனிக்கவேண்டும். இந்த நிலையில் இருந்து பின்வாங்கி இப்போது மாஸ்க் கட்டாயம் என அறிவியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு விதியை தமது மக்களிடையே சொல்லவேண்டிய நிலைக்கு அவர் ஏன் சென்றார் என்று யோசிக்கவேண்டும். இப்போது அவரது மருத்துவ அறிவியல் அறிவு என்னாயிற்று?
இன்னொன்றும், இதை அதிமுக ஆரம்பத்தில் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டி இந்த காணொளியை தவறு எது, சரி எது என வெளியிடத்தெரிந்த திமுக,
அனைவரும் மாஸ்க் போடவேண்டும் என்று ஆரம்பத்திலேயே தொற்றுக்காக அவ்வளவு பயந்த திமுக, பின் ஏன் , நோய் தொற்றின் அதிக ஆபத்து இருந்த உடல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்து அதற்காக நோய் எதிர்ப்பு மட்டப்படுத்தும் மருந்து எடுத்துவரும் ஒரு மக்கள் பிரிதிநிதியை தனது கட்சியின் கொரோனா களப்பணியில், அவரது உயிருக்கு ஆபத்து என தெரிந்தே களமிறக்கவேண்டும்?
என்ன அரசியல்வாதிகளோ..சே..
ஆக மொத்தத்தில்......
அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் மேலும் மேலும் குணிந்து கொடுக்கும் மக்களே இங்கு கோமாளிகள் !
நன்றி: Dr பிரேமா கோபாலகிருஷ்ணன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக