கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த செவிலியரான தோழர் கமலா தேவி அவர்களின் அனுபவம்:👇
நிறையபேர் கொரோனா அனுபவம் பத்தி எழுதுங்கனு கேட்ருந்தீங்க அதுக்காகத்தான் இந்த பதிவு..
நான் செவிலியர்ன்றதால வார்ட்டுல பேசன்ட் கிட்ட நெருங்கி போய்தான் ஆகனும் அப்படின்ற சூழல்ல தான் தொற்று ஏற்பட்டது. நான் நோயாளிக்கிட்ட எக்ஸ்போஸ் ஆகி மூனாவது நாளே அறிகுறி வந்துடுச்சு. ஆனால் முதல் டெஸ்ட் நெகடிவ் வந்தது. அறிகுறி குறையல. 10 வது நாள் மீண்டும் எடுத்த டெஸ்ட்ல தான் பாசிட்டிவ் வந்தது.
அறிகுறி:
காலையில் எழுந்திரிக்கும் போதே தலைவலி
காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு ( டெம்ப்ரச்சர் நார்மல் காட்டுச்சு)
இரவு தூக்கமின்மை( காலைல 4 மணிக்கு தான் தூக்கமே வந்தது)
சதை வலி ( கால் கைகளில் உள்ள சதை மட்டும் பயங்கர வலி)
10 நிமிசத்துக்கு மேல நிற்க முடியல. கால் சோர்வா இருந்தது. வாக்கிங் போக முடியல..
உடல் சோர்வு..படுத்தே இருக்கனும் போன்ற உணர்வு
அரிப்பு கைகளில் அலர்ஜி மாதிரி வந்துச்சு
முதுகு பக்கத்தில் வலி
சளி
இருமல்
குரல் மாறியிருந்தது( நிறைய பேரோட போன் அட்டன்ட் பண்ணாததுக்கு இதான் காரணம்)
அறிகுறிகள் ஆரம்பித்து இதெல்லாம் ஓரளவு சரியாக எனக்கு 20 நாட்கள் ஆச்சு😔
அட்மிசன் 11ம் தேதி ஆனேன்.
அரசு கொடுத்த உணவு;
காலை 6.30மணி - கபசுர குடிநீர் கசாயம்
காலை 7 மணி - டீ
காலை 8 மணி- இட்லி2 தோசை-1 பொங்கல்/கிச்சடி/உப்புமா - (எதாவது ஒன்னு)
சட்னி சாம்பார்
முட்டை 1
11 மணிக்கு - லெமன் இஞ்சி எல்லாம் போட்ட புதினா எல்லாம் கலந்த டீ
11.30 - ஆரஞ்சு பழம் தினமும் 1
1மணிக்கு -மதிய உணவு சாப்பாடு சாம்பார் ரசம் தயிர் இரண்டு வகை கூட்டு
(சுண்டல் பயிரு கண்டிப்பாக கூட்டில் கலந்திருக்கும் )
வாழைப்பழம் -1
வாரத்தில் இரண்டு நாட்கள் சிக்கன் பிரியாணி
மாலை4.30 மணிக்கு- டீ (சுண்டல்/ பயிறு)
6மணிக்கு - வெஜிடபுள் கிளியர் சூப்
இரவு 7 மணி - இடியாப்பம் -2 கடலை கறி சிறுதானிய உப்புமா/கிச்சடி தோசை - 1
தினமும் இதே முறைதான் 14 நாட்களும்
5 லிட்டர் தண்ணீர் அளந்து வச்சு குடிச்சேன். வெண்ணீர்
மருத்துவம்;
அலோபதி மருந்துகள் -ஆன்டிபயாடிக் +சத்து மாத்திரைகள்+ அறிகுறிக்கு தகுந்தால் போல. தினமும் இரண்டுமுறை வந்து பாத்துடுவாங்க. நேரடியா நம்மளோட குறைகள கேக்குறவங்க இவங்கதான்.
ஹோமியோபதி- போன்ல பேசுவாங்க தினமும். அறிகுறிகளுக்கு தகுந்த மாதிரி மாத்திரை சிரப் கொடுத்தனுப்பினாங்க. அந்த சிரப்லாம் சாப்டு தான் இருமல் சரியாச்சு.
சித்தா- காலையில் எழுந்த உடனே கபசுர குடிநீர் கசாயம்
மருந்துகளை விட உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தனிமைப்படுத்துவது தான் மிகவும் அவசியம். நான் ரூம் விட்டு 14 கழித்து தான் வெளில வந்தேன். மருத்துவர்கள் செவிலியர்கள் எப்போதும் பணியில் இருப்பாங்க. நம்பர் குடுத்து எதாவதுனா போன் பண்ணிடுங்கனு சொல்ற அளவுக்கு கவனிச்சுகிட்டாங்க. நடுவுல ஒரு நாள் திடீர் நெஞ்சுவலி வந்துச்சு இரவில் .ப்ரசர் கொஞ்சம் கூடியிருந்தது. காரணம் Stress தான். தூங்குறதுக்கு மாத்திரை குடுத்து தூங்க வச்சிட்டாங்க.12 மணி நேரம் தொடர்ந்த தூக்கம். காலையில் ப்ரசர் நார்மல் ஆயிடுச்சு. அவ்ளோதான்.
எனக்கான பொழுது போக்காக போகும் போதே புக் எடுத்துட்டு போனேன். அத படிச்சேன். அது போக இந்த மூஞ்சுபுக் தான்.
ஆரம்பத்தில் என்ன தான் செவிலியரா இருந்தாலும் வலி ஒன்னுதானே.கொஞ்சம் ஜெர்க் ஆனது உண்மைதான். தலைவலி அந்தளவுக்கு இருந்துச்சு. டெய்லி ஆவி பிடிச்சுகிட்டேன் Hospital ல வச்சே ( கொண்டு போகனும் Steam Inhealer) கொஞ்சம் கொஞ்சமா குறஞ்சது.
இப்போ ட்ரீட்மெண்ட் முடிஞ்சது. இருந்தாலும் தனியா தான் இருக்கேன். அடுத்தவங்களுக்கு நம்மால நோய் பரவிடக்கூடாது கண்டிப்பா அதுநால.
சாதாரண காய்ச்சல் வந்தா என்னென்ன பண்ணுமோ எல்லாம் பண்ணும் அவ்ளோதான். மற்ற பிரச்சனை இல்லாதவங்க ஈசியா கடந்து வந்துடலாம். ஆனா சமூகத்தில் ஒரு பயத்த உருவாக்கிட்டாங்க. காரணம் பரவும் வேகம் அதிகமா இருக்குறது தான். நம்மளோட மனதைரியம் ரொம்ப முக்கியம் இதுல.
சாப்பாடு+தன்னம்பிக்கை+ மருந்து
இதுபோதும் கொரோனாவ தொரத்துவதற்கு.
தன்னம்பிக்கையோட விழிப்புணர்வோட எதிர்கொள்வோம். கொரோனாவ துரத்துவோம்.
#கொரோனா_அனுபவம்
#நன்றி_தோழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக