லார்ட் பைரன் காதல் கவிதை
இதுபைரன்கேம்ப்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில்படித்தபோதுஎழிதியதாகஇருக்ககூடும்
என்பதுவிமர்சகர்களின்
அபிப்பிராயம்... இதுஅவருடைய வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி,, ஒருவேளை இப்படிஅழகியகவிதையாக
வடிவெடுப்பதற்கேகூடஅதுதோல்வியில்முடிந்திருக்கலாம் என்றுகூடதோன்றுகிறது)
(கவிதையின்கரு)
காதலர்கள் இருவரும் கண்ணீருடன் பிரிகிறார்கள் சூழ்நிலையே காரணம் ..காலமோ பறக்கிறது ,இறக்கைகட்டிக்கொண்டு... ஆனால்இதயங்கள்மட்டும்காதலின் இரணங்களைச் சுமந்துகொண்டு எங்கோ உயிர்த்திருக்கின்றன
நிIனைவுகளினால் மட்டுமே...
.காலமே மீண்டும் ஒருசந்திப்பை தருகிறது...அதை அது கொடுக்காமலேகூடஇருந்திருக்கலாம் அவன் உறவுகளோ வேறுஉறவுகளுடன் காலத்தால்..... அவள் உறவுகளோ விதியுடன் வேறு கோலத்தில்..ஊரெல்லாம் உலகமெல்லாம் அவளை அடையாளம் காணும் அளவுக்கு
அவள் வளர்ந்திருக்கிறாள் ஆனால் விதியின் பாதையில் அவ்வளவுதான்அவளைப்பற்றி சொல்வதற்கு ....
மீதியை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்....அநேக நாக்குகள் அவளைப்பற்றி நன்கறிந்ததாய்அவரிடமேசொல்ல , அவளைப்பற்றி நன்கறிந்த அவருக்கோமெளனித்திருப்பதைதவிரவேறுவழியில்லை ..
கடைசிசந்திப்பும் இந்த புதியசந்திப்பும் மாறி மாறிகொண்டுவந்துசேர்க்கிறது
இந்தகவிதையை...
நாம் இருவரும் பிரிந்த போது
(WHEN WE TWO PARTED)
பிரிவதற்காகவே அமைந்தததோ
நம்கடைசி சந்திப்பு
அந்தசந்திப்புக்கு நம்முறிந்த இதயங்களேசாட்சியாகஇருந்தன
அப்போது.....
உன்முகம் வெளுத்து
தாடை குளிர்ந்து
உன்கடைசி முத்தமோ
உறைந்து போயிருந்தது
மரித்தஅமைதியில்....
உன்விழகளில்அன்று வழிந்தோடியகண்ணீரில்
அப்பொழுதே எழுதப்பட்டிருந்திருக்கிறது
எனது இந்நாளைய விதிஅதைஎவ்விதம்நான்வாசிக்காமல்தவறவிட்டேன்அன்று?
ஒரு நாள் காலைஎன்கண்களில்
துளிர்த்திருந்தது
ஒரு ஒற்றைப்பனித்துளி
அதை என்விரல்கள்உணர்ந்தபோது ஏற்கனவே
அது உறைந்துபோயிருந்தது
நான் காணும் இந்தவீதியெங்கும்
உன்பெயரே உச்சரிக்கப்படுகிறது...
இதேவீதிதான்
உன்அத்தனைஉறுதிகளும்
காற்றில்பறக்கவிடப்பட்ட
இதேவீதிதான்....
உன்பெயரையேஒவ்வொருவரும்
என்முன்உச்சரிக்கிறார்கள்
உன்னைஎனக்குஎன்றுமேதெரியாதென.
அவர்கள் நினைக்கிறார்கள்....
நான்சொல்லநினைக்கிறேன்
என்னைவிடஉன்னை
உன்மேலானஉன்னை
உன்முழுஉன்னை
யார்நன்கறிவார்கள்என்று
ஆனாலும் உதட்டிலேயே
நீர்க்குமிழிகளாய்
என்மெளனங்களைஉடைத்துக்கொண்டு.....
அமைதியில் துடிக்கிறேன்
மனதுகளை அவிழ்ப்பது
உயிர்ப்பறவையை நிரந்தரமாய்
வானில் பறக்கவிடுவது
என்பதையும் கூடநானறிவேன்....
உன் இதயமோ
நம் காதலின் ஆத்மாவை
மறந்திருக்ககூடும்
உன்விருப்பப்படியேகூட
ஆனால் என் இதயமோ?.....
முன்பெல்லாம்
இரகசியமாய் நாமிருவரும் சந்தித்தோம்
காதல்வளர்ப்பதற்கு
இன்றோ நானொருவனே
தனிமையில் மரிக்கிறேன்
அந்தகாதல் இரணங்களை எனக்குள்ளேயே
கரைப்பதற்கு
எனக்குள்ளேயே !...
தங்கேஸ்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக