என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
20 பிப்., 2026
19 பிப்., 2026
18 பிப்., 2026
16 பிப்., 2026
15 பிப்., 2026
இன்றைய புத்தகம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் புதிய வெளியீடு
மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
சீனிவாச ராமாநுஜம்
சுந்தர் சருக்கை
பக்கங்கள்: 80
விலை: ரூ. 100
மொழியாக்கம் என்ற சொல் இரண்டு மொழிகளுக்கு இடையேயான உறவுக்கு அப்பால் நம்மை இட்டுச்செல்லும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதாவது, மொழியாக்கம் என்ற சொல் மூல மொழி, வந்தடையும் மொழி போன்ற புள்ளிகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது போலும் தெரிகிறது. மொழியை ஆக்குதல், அதாவது மொழியை உருவாக்குதல் என்ற சாத்தியப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், எதற்கு மொழியை உருவாக்குகிறோம்? மொழிகளுக்கு இடையேயான உறவின் அடிப்படையில் மூலத்திற்கான மொழியை உருவாக்குகிறோம் என்று சொல்வோம் என்றால், நாம் மொழிபெயர்ப்பு கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குள் மீண்டும் சிக்கிக்கொள்கிறோம் என்றாகிறது. ஆக, மொழியாக்கத்தின் அடிப்படையை மொழிகளுக்கு இடையேயான உறவாகச் சுருக்காமல் அதன் சாத்தியப்பாடுகளை அணுக வேண்டியிருக்கிறது. அந்த வகையில் மொழியாக்கம் என்பதன் பரப்பை இச்சிறு நூல் துருவியகழ்கிறது.
நூலைப் பெற: +91 80153 12686 (WhatsApp)
#rmrlchennai #translation
14 பிப்., 2026
13 பிப்., 2026
11 பிப்., 2026
10 பிப்., 2026
இன்றைய புத்தகம்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) – ஒரு பார்வை
“கலையின் மீது கொண்ட தீராத விருப்பம்”
“தமது கடைசிக்காலம்வரை எழுத்தின் வழி வாழ்வின் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருந்தவர்கள் என அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தாம் காலமாகும் கடைசிக்காலம்வரை எழுத மட்டுமில்லை, கதைகளில் நீர்த்துப் போகாமலும் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இன்னும் முக்கியமானது. வாழ்க்கை அவர்கள்மீது எவ்வளவு சலிப்பைக் கொட்டினாலும், அவர்கள் கலையின் மீது கொண்ட தீராத விருப்பால் மட்டும் அது நிகழ்ந்திருக்கச் சாத்தியம் இருக்கின்றது.”
நன்றி: இளங்கோ (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/1AcYq6HAcM/
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/sundara-ramaswamy-sirukathaikal-muzhuthokuppu_319/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07RCGKYCJ
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/ebook/dp/B08RX88F6M/
@followers D.i. Aravindan Kannan Sundaram TopFans Elanko DSe
#சுந்தரராமசாமி #sundararamasamy #சிறுகதைகள் #shortstories #முழுத்தொகுப்பு #collectedworks
#தமிழ்_இலக்கியம் #tamilliterature #நவீன_இலக்கியம் #moderntamilliterature #கலைமற்றும்வாழ்வு #artandlife #எழுத்தின்நம்பிக்கை #FaithInWriting #LiteraryReflection #bookdiscussion #ReadingTamil
9 பிப்., 2026
இன்றைய புத்தகம்
சீர்சேந்து முகோபாபாத்யாயவின் ’ராமன் வனவாசம் போன வழி’- பயண நூல்
விமர்சனப் பார்வை
…இத்தனையையும் மீறி இந்தப் புத்தகம் ஒன்றைச் சாதித்திருக்கிறது. அது முக்கியமானது. எந்த ஒன்று நம்மை இணைக்கிறது என்று பாரம்பரியவாதிகள் சொல்கிறார்களோ அதை சீர்சேந்து போன்ற முற்போக்காளர்களும் ஒப்புகொள்ளும்போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடும் முன்முடிவுடன் ராமனை அணுகும் சீர்சேந்து, அயோத்தியின் கோசங்களால் எரிச்சலடையும் சீர்சேந்து, ஒரு கட்டத்தில் ராமபக்தியில் தன்னை இழக்கிறார். ஏனென்றால் ராம பக்தி இயல்பானது. சீர்சேந்துவைப் போல அது காரணங்கள் கொண்டும் காரியங்கள் கொண்டும் உலகை அளப்பதல்ல. அது உள்ளுணர்வோடும் காலம்காலமாக நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தது…
…மொழிபெயர்ப்பு மிகக் கச்சிதம்.
நன்றி: ஹரன் பிரஸன்னா (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=25981084781486212&id=100000341360192&post_id=100000341360192_25981084781486212&rdid=gckUHlxZXZKHdjsW#
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/ramanvanavasamponavazhi_1230/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/ramanvanavasamponavazhi_1356/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0CK5RDBVD
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0CK452P3B
@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram
#kalachuvadupublications #ராமன்_வனவாசம்_போன_வழி
#travelwriting #பயணநூல் #bookreview #தமிழ்மொழிபெயர்ப்பு #translatedtamil #ramayanarevisited
#CulturalJourney #tamilbookstore #tamilliterature #ReadingTamil
#literaryreview #mythandmodernity #bookloverstamil
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)