இன்றைய உலகில் காற்று, நீர், உணவு என்று எல்லாமே மாசடைந்து, உடல் செயல்பாட்டை பாதித்துக் கொண்டிருக்கின்றது. நாற்பது வயது கடந்த அனைவருமே நோயாளி என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. பிறந்தது முதலே நம் உடலில் திசுக்கள் உற்பத்தியும், அழிவும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. புதிய திசுக்கள் உற்பத்தியாவது குறைந்து, பழைய திசுக்களின் அளவு கூடும்போது, மரணத்தை நோக்கி நாம் செல்கிறோம். இதற்குத் தீர்வாக கற்றாழை அமையும் என்று தற்போது கருதப்படுகிறது.
கற்றாழையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள், விட்டமின் பி-2, பி-6, பி-12 மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. இதனால் தானோ எனனவோ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் இதை தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகக் கருதினர். இந்த அமினோ அமிலங்கள் புதிய திசுக்களின் உற்பத்தியைக் கூட்ட உதவுவதோடு மட்டுமல்லாமல், பழைய திசுக்களின் அழிவையும் தடுக்கின்றன. மேலும் விட்டமின் பி-12 உள்ள ஒரே தாவரம் கற்றாழை மட்டுமே. கற்றாழை நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.
தினமும் கற்றாழைச் சாற்றை, வெறும் வயிற்றில் 25 மில்லி குடித்து வந்தால், சர்க்கரை நோய், குடல்புண், பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், இடுப்புவலி, மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாகவும் செயல் படுகிறது.
அடிப்படை: தினகரன் நாளிதழ், மதுரைப் பதிப்பு, ஜனவரி 19, 2009.
நன்றி: தினகரன் நாளிதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக