உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கலானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது பயனுள்ள ஒரு செயலைச் செய்தோம் என்ற மனத்திருப்தி உங்களுக்குக் கிட்டும். மனிதன் வெறும் உணவினால் மட்டும் வாழ்பவன் அல்ல என்ற பழமொழியை நினைத்துப்பாருங்கள். பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள். - ஸ்ரீ சுவாமி சிவானந்தர்
"மன அமைதியைப் பெறுவது எப்படி?" என்ற சுவாமி சிவானந்தர் எழுதிய கட்டுரையிலிருந்து
நன்றி: "இமைய கீதம்", ஆன்மிக மாத இதழ், ஜூன் 2009.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக