என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
6 மே, 2010
காரைக்குடி சித்திரைப் பொருட்காட்சி 2010
காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தால் நடத்தப்படும், காரைக்குடி சித்திரைப் பொருட்காட்சி - இல்லை, சித்திரைத் திருவிழா - இந்த ஆண்டும் கம்பன் மணி மண்டபத்தில் ஏப்ரல் 30-ம் நாள் முதல் மே 9-ம் நாள் வரை சிறப்பாக நடைபெறுகிறது.
நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள், சிறுவர் சிறுமியர்க்கான விளையாட்டு வசதிகள், மாலையில் பள்ளி மாணவ, மாணவியரால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் - இப்படி அனைவரையும் மகிழ்விக்கும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.
நானும் வீட்டில் அனைவரையும் அழைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்தேன். எனக்குப் பிடித்த இரண்டு ஸ்டால்கள் - ஜோதிமணி மற்றும் இராமகிருஷ்ணா மடத்தின் புத்தக ஸ்டால்கள். அற்புதமான மனத்தைக் கவரும் நிறைய புத்தகங்கள்.
ஒரே ஏமாற்றம், அன்று மாலை விளையாட்டு வசதிகள் எதுவும் செயல்படவில்லை; ஏதோ தொழிலாளர் ஸ்ட்ரைக் என்று நினைக்கிறேன். குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். SMSV மேனிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொருட்காட்சியில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக