....
....நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, புத்தகங்களை அச்சடித்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு. இப்படி ஒரு அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கை வைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக் கொண்டே குழு அமைத்தது அரசு. அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

'இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்' என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட்டுமே கொண்டு, நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும், நியாயமான சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை!.
....
...மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் ஆயிரம் குறைகளையும், ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா?....
....
மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், 'குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படி' என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால், சமச்சீர் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன்......
- மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி அவர்கள், ஜூனியர் விகடன், ஜூலை 17 , 2001.
நன்றி: வசந்தி தேவி அவர்கள் மற்றும் ஜூனியர் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக