30 நவ., 2018

சுற்றுச்சூழல்-22:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-41: CFL பல்புகள்

வ.உ.சி நினைவுகள்-2:

மலரும் நினைவுகள்-2:

எங்கள் தமிழகம்-30: தஞ்சைப் பெரிய கோயில்

கக்கன்ஜி நினைவுகள்-1:

உங்கள் கவனத்திற்கு-5: 7வது திண்டுக்கல் புத்தகத் திருவிழா

7வது திண்டுக்கல் புத்தகத் திருவிழா
29 நவம்பர் முதல் 9 டிசம்பர் வரை
காலை 11 மணி முதல் இரவு 9 வரை
இடம் : ஸ்கீம் ரோடு, பேருந்து நிலையம் தென்புறம், திண்டுக்கல்.

கௌரா புத்தக மையம்
கடை எண் 36/37
ரூ.200க்கு மேல் நீங்கள் வாங்கும் அனைத்து நூல்களுக்கும்
50% சிறப்புத் தள்ளுபடி.

தொடர்ப்புக்கு 9952034876 / 9943428994 / 9444082232

காமராஜர் நினைவுகள்-8:

திருக்குறள்-39:

இன்று ஒரு தகவல்-125:

முன்பு  சென்னைக்கு அருகில் காரப்பாக்கத்தில் இருந்தபோது, ஒரு விடுமுறை நாளில் நண்பர்கள் நாங்கள் சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு போகும்  வழியில் ஒரு சிற்பக்கூடம் இருப்பதை பார்த்தோம்.  அங்கே  ஆட்கள் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள்.     கூடவே கொஞ்சம் பெரிய அளவிலான சதுரம், நீள் சதுரம் இப்படி பல வகையில் கற்கள் செதுக்கப்பட்டு துண்டு துண்டாக  நிறைய இருந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே போய்கொண்டிருக்கும்போது  வேலி ஓரத்தில்,  கட்டை விரல் மடக்கி மூன்று விரல்கள் நீட்டி இருக்கும்படியான கையின் பகுதி ஒன்று பெரிய கல்லில் செதுக்கப்பட்டு இருந்தது. 

அதைப் பார்த்ததும்... இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே, எங்கே?  என்று ஒரு விநாடி யோசித்து..... ஆஹா !  இது செய்திதாள்கள்களில் வந்திருந்த ஒரு படத்திலிருந்த உருவத்தின் கை பகுதி ஆயிற்றே !

நண்பர்கள் நாங்கள் ஓடிப்போய் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தோம்.   ஏனெனில்,  இது இனி யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கப்போகிறதல்லவா ?  1998 ல் இந்த சம்பவம் நடந்தது.

கட்டை விரலும், சுண்டு விரலும் மடங்கியிருக்க மற்ற மூன்று விரல்கள் நீண்டிருக்கும் இந்தக் கையின் பகுதி திருவள்ளுவரின் வலது கை.    அந்த துண்டு துண்டு கற்கள் சிலையின் மற்ற பகுதிகள்.    இப்போது கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையைத்தான் சோழிங்கநல்லூரில் செய்துக் கொண்டிருந்தார்கள்.   அந்த கற்களை தொட்டுப் பார்த்து பேசி மகிழ்ந்து திரும்பினோம்.  இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த ஒரு கொடுப்பினை என்றே கருதுகின்றேன். 

ஏற்கனவே இரண்டு முறை கன்னியாகுமரி சென்றிருந்தாலும், 2000 ல் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட பிறகு,  இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அங்கே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.   அந்த நினைவுகள் வந்து போயின.  அரசியல் காரணமோ அல்லது வேறு எதுவும் காரணமோ தெரியவில்லை,  திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு சென்று அருகில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.  வருத்தம்.  அருகிலிருக்கும் விவேகானந்தர் பாறையிலிருந்துதான் காண முடிந்தது.  இப்போது நிலவரம் எப்படி என்று தெரியவில்லை.

திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதால், திருவள்ளுவர் சிலை பீடத்திலிருந்து 133 அடி உயரம்  கொண்டது.    பீடம் மட்டும் 38 அடி.  இது அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்கள்.   திருவள்ளுவர் சிலை 95 அடி உயரம்.   இவை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால்  சேர்த்து 95 அதிகாரங்களை குறிக்கிறது.  3 டன் முதல் 8 டன் எடையுள்ள 3681 கல் துண்டுகளை கொண்ட சிலை அமைப்பின் மொத்த எடை 7000 டன்.  தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் ஒரு முறை இந்த கம்பீரத்தைப் பார்த்து விடுங்கள்.   இது தமிழின் நாடு என்ற பெருமிதத்தை உணரலாம்.

இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும்  திருவள்ளுவர் சிலை பாறை மாதிரி அப்படியே இருக்கும்.  முழுவதும் கருங்கற்களால் அனதுதானே !   படேல் சிலை காங்கிரிட்டில் அமைக்கப்பட்டது.  100 வருடங்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேல் சிலை இந்திய ஒற்றுமைக்கான சிலை என்றால்,

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'

ஐயன் திருவள்ளுவர் சிலை உலக  ஒற்றுமைக்கான சிலை என்று தயங்காது சொல்லலாம்.

பயனுள்ள குறிப்புகள்-139: மோட்டார் வாகன சட்டம்

ஆரோக்கிய சிந்தனைகள்-7:

சிரித்து வாழவேண்டும்-65:

சிரிக்கவும் சிந்திக்கவும்-26:

வாவ்! படங்கள்-36:

நலக்குறிப்புகள்-126: மூட்டுவலிக்கு

வீட்டுக் குறிப்புகள்-44:

இன்றைய சிந்தனைக்கு-126:

உங்கள் கவனத்திற்கு-4: எழுத்தாளர் ஜெயமோகன் அழைப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அழைப்பு
-----------------------------------------------------------

அன்புள்ள நண்பர்களுக்கு

சென்னையில் ஜனவரி 1 அன்று நிகழ்விருக்கும் பரியேறும்பெருமாள் படத்தின் பாராட்டுவிழாக்கூட்டத்தில் பேசவிருக்கிறேன். தமிழின் தலைசிறந்த சினிமாக்களில் ஒன்று பரியேறும்பெருமாள். அதை திரையரங்குகளுக்கு அறிவார்ந்த தளத்திலும் விவாதிக்கவேண்டியிருக்கிறது

இடம் டிஸ்கவரி புத்தகநிலையம் கேகே நகர் சென்னை

நாள் 1-1-2019

பொழுது காலை 9 மணி

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்

29 நவ., 2018

நூல்மயம்-15: பெருமாள்முருகனின், "ஆளண்டாப் பட்சி"

பெருமாள்முருகனின் ஆறாவது நாவல்இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல்மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.

விலை:275/-
தொடர்புக்கு:9677778862

நூல் நயம்-3: ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலிலிருந்து சில முத்துக்கள்

மசானபு ஃபுகோகா எழுதிய "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலிலிருந்து சில பருக்கைகள்:

நான் என் மாணவர்களிடம் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் என்னை அப்படியே பின்பற்றாதீர்கள் என்பதுதான். என்னுடைய இந்த அறிவுரையைப் பின்பற்றாவிட்டால் எனக்கு அடக்கமுடியாத  கோபம் வரும். நான் அவர்களிடம் இயற்கையோடு எளிய வாழ்வு வாழுங்கள்; அதை அன்றாட வாழ்வகல் கடைப்பிடியுங்கள் என்று கூறுகிறேன். என்னிடம் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால் நான் கண்டுகொண்டது மிகவும் முக்கியமானதாகும்.

முழுமையிலிருந்து விலகித் தெரியும் ஒரு பொருள் உண்மையானதல்ல.

பூச்சி இனங்களுக்கு இடையே உள்ள உறவுமுறைகளை அலட்சியம் செய்து உருவாக்கப்படும் பூச்சிதடுப்புமுறைகள் பயனற்றவை.

பூச்சிகளும் தாவரக் குடும்பங்களும் ஒரு நிரந்தரமான உறவைக் கொண்டுள்ளன.

மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது என்பது ஒரு முரணான நகைச்சுவையாகும்.

அடிப்படை விதி என்னவென்றால் களைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒழிக்கப்படக்கூடாது.

பலவகைக் காய்கறிகளையும், மூலிகைகளையும் கலந்து இயற்கையோடு வளர்க்கும்போது பூச்சி மற்றும் நோய் அபாயம் குறைவாக இருக்கும்.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

உங்கள் கவனத்திற்கு-3:

சிரித்து வாழவேண்டும்-64:

காமராஜர் நினைவுகள்-7:

இன்றைய சிந்தனைக்கு-125:

வாவ்! படங்கள்-35:

பயனுள்ள குறிப்புகள்-138:

நலக்குறிப்புகள்-125: சுக்கு

வீட்டுக் குறிப்புகள்-43:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-40: ஆன்லைன் உணவு

எத்தனை நல்ல யுக்திகள் வந்தாலும் அத்தனையும் குட்டிச்சுவராக்க நம்மால் மட்டுமே முடியும். எதையும், எவனையும் நம்பமுடியலே. ஆண்டவா!

சிரிக்கவும் சிந்திக்கவும்-25:

வாவ்! எங்கப்பா இது? சூப்பர்!!

எங்கள் தமிழகம்-29:

மலரும் நினைவுகள்-1:

இன்று ஒரு தகவல்-124: நெல்லை-பாலக்காடு ரயில் மீண்டும் இயக்கம்

உங்கள் கவனத்திற்கு-2: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

27 நவ., 2018

இன்றைய சிந்தனைக்கு-124:

பயனுள்ள குறிப்புகள்-37:

வாவ்! படங்கள்-34:

திருக்குறள்-38:

இன்று ஒரு தகவல்-125:

சிரிக்கவும் சிந்திக்கவும்-24:

நலக்குறிப்புகள்-124: வெண்பூசணி

ஹோமியோ செய்தி-6:

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-39:

இவை எதிர் உணவுகள் என்பதால் இவைகளைச் சேர்த்தோ அடுத்தடுத்தோ உண்பது நல்லதல்ல.

வீட்டுக் குறிப்புகள்-42:

உளுந்தவடை செய்யும்போது மாவுடன், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காது, மொறுமொறுவென்று ருசியாகவும் இருக்கும்.

மக்களின் குமுறல்-3:

திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு...

20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்,
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத்
தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளவுமே பயன்படப் போகிறது. அதைத் தாண்டி ஒரு பயனும் இல்லை.

வயதுக்கு வந்தோர் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் அது அவர்கள் உரிமை என்பது சட்டமானால், பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களைக் கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது?
தன் மகளோ மகனோ எவனோடும் எவளோடும் சுற்றிவிட்டு வந்தாலும் தாய்தகப்பன் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறதா நீதி மன்றம்?
இதைப் பெற்றவர்கள் ஏற்கப் போகிறீர்களா?

படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று ஊர்மேய்ந்து கொண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்குத் தேவைப்பட்டால், விருப்பம் இருந்தால் உடலுறவே கொள்ளலாம் என்பது தலைமுறைகளை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?

கல்யாணம் ஆன ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவரோடு உறவு கொள்வதற்கு ஏன் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படியே பிடித்தவர்களோடு போகலாமே. தினம் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கணவன் போவான். மனைவி கேட்பதற்கில்லை.

தினம் ஒருவனைப் பிடித்திருக்கிறதென்று மனைவி விபசாரமும் செய்யலாம். கணவனும் கேட்பதற்கில்லை. என்றால் அதென்ன வீடா, குடும்பமா?. அல்லது விபசார விடுதியா?

வீடுகளை விபசார விடுதிகளாக்கிப், பெண்களை விபசாரிகளாக்கி, ஆண்களை மேலும் ஒழுக்கம் கெட்டலைய வைப்பதுதான் நீதித் துறையின் நோக்கமா?

கணவன் இருக்க, அடுத்தவனைப்
பிடித்திருக்கிறதென்று எத்தனைப் பேரோடும் உறவு கொள்ளும் பெண்ணுக்குத் தனது கணவன் தன் கண்முன்னால் செத்தாலும் இழவுக்குக் கண்ணீர் வருமா? பெற்ற பிள்ளைகளிடம் இனிப் பாசம் வருமா? அன்பே அங்கு அற்றுப் போய்விடில் குடும்ப வாழ்க்கை இனிக்குமா? இருக்குமா?

இந்தத் தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும், எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றும் ஆதரவளிப்பவர்கள், அவர்கள் மனைவிகளையும் சகோதரிகளையும் அடுத்தவரோடு படுக்க அனுப்பிவிட்டு விவாதம் நடத்தட்டும்.

மனைவி மீது உரிமையில்லை. பிள்ளைகள் மீது உரிமை இல்லை. சகோதரிகள்மீது உரிமை இல்லை என்றால், எதன் மீதுதான், எவர் மீதுதான், எவருக்குத்தான் இங்கு உரிமை இருக்கிறது?

விருப்பப்பட்டால் வயதுக்கு வந்தவர்கள் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று அங்கீகரிக்கப் பட்டுவிட்ட நாட்டில், பெண்கள் இனி எப்படிப் பார்க்கப் படுவார்கள்? எப்படி நம்பப் படுவார்கள்?

இது தப்பென்று தட்டிக் கேட்க கணவன், மனைவி, பெற்றோர்கள் உண்டு என்ற நிலையிலேயே ஆயிரம் அவலங்கள் நடந்த நாட்டில் இனி தப்பில்லை அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றாகிவிட்டால், யார் யாருக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கு வாழ்க்கை வாழப் போகிறார்கள்? கேட்க உரிமை இருந்த போதே நல்ல மனைவிகளும் சந்தேகத்திற்கு உள்ளாகி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்க, இனி அது அவரவர் சுதந்திரம் என்ற பிறகு எத்தனை உத்தமமான பெண்கள் வாழ்க்கையை இழக்கப் போகிறார்களோ!

காதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும் என்று உண்மையாய் விரும்புகிறவர்களுக்கும் இனி அந்த வாழ்க்கை கிடைக்குமா அல்லது கிடைத்தாலும் நிலைக்குமா?

பொது வெளியில், இதிலென்ன இருக்கிறது அதுவும் ஓர் உணர்ச்சிதானே விருப்பம்தானே என்று யாரும் பேசலாம். அப்படிப் பேசும் யாரும் தம் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால்

அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா என்று கூறும் அல்லது, அவனை தன் வீட்டுக்கே அழைத்து மனைவியின் உடம்புப் பசியை ஆசையை தீர்த்து வைக்கச் சொல்லி கட்டிலுக்கு அவனை அனுப்பி அழகு பார்க்கும் மனோதிடம் உள்ளதா?

குடும்ப வாழ்க்கை என்றான பிறகு, தனி மனித உரிமை எங்கே இருக்கிறது? கணவன் தவறாகப் போனால், மனைவி குழந்தைகள் வாழ்க்கைச் சீரழியாதா? மனைவி தவறாகப் போனால் கணவன் பிள்ளைகள் வாழ்க்கை கெடாதா? தன்னுடைய எந்தச் செயலின் எதிர் விளைவுகள் அடுத்தவரைப் பாதிக்காதோ அதுவே தனி மனிதச் சுதந்திரம். மற்றதெல்லாம் வரம்புக்கு உட்பட்டது என்பது நீதித் துறை அறியாதா?

பெண்ணின் ஒழுக்கக் கேட்டை விமர்சித்து ஓரெழுத்தெழுதினால் கொந்தளிக்கும் பத்தினிகள் என்னிடம் கோபிப்பதில் நியாயமில்லை. ஏதோ ஒட்டுமொத்த பெண்களும் விபசாரிகள்போல் எண்ணி யாரும் யாரோடும்
படுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்துள்ள நீதித் துறைமுன் கோபப்படுங்கள் அத்தனைக் கற்புக்ககரசிகளாக நீங்கள் இருந்தால்!

வயதுக்கு வந்த யாரும் யாரோடும் விரும்பினால் படுக்கலாம் என்பது இந்து மக்களுக்கான சட்டமா இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? இதை இஸ்லாத்தும் கிறித்துவமும் இந்து மதமும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?

பாலியல் சுதந்திரம் எல்லோர்க்கும் உண்டு யாரும் யாரோடும் புணரலாம் எனில், இது இரத்த சம்பந்தமுள்ள உறவுகளுக்கும் பொருந்துமா? ஏனெனில், மேல் நாட்டுக் கலாசாரம் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்த்தும், குடும்ப உறவுகளுக்குள்ளேயே பாலுறவு கொள்ளும் வேட்கை பெருகி(incest sex) வெறியாகி மகளையே தகப்பனும், மருமகளையே மாமனாரும், சகோதரியையே சகோதரர்களும், சகோதரி கணவன், சகோதரன் மனைவியோடே புணர்ச்சியிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுவது எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு, இப்படியும் உறவு முறை பாராமல் உறவாட உரிமை அளிக்கிறதா?

தீர்ப்பு திரும்பப் பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் செங்கல் செங்கல்லாகப் பிரிக்கப் படவேண்டும் அதுவே முடிவு.

தன் குடும்பம், பிள்ளைகள், மனைவி, கணவன், சகோதர சகோதரிகள் ஒழுக்க வாழ்வு வாழ்ந்து உயரவேண்டும் என்று விரும்புகிறவர்களும்,

காலம் காலமாக தன் இனம் தன் மதம் கட்டிக்காத்த அழகான நெறி மிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களும் மற்றும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இந்தத் தீர்ப்புக் எதிராகப் போராடுவார்கள். இல்லையேல், நாடும் வீடும் மக்களும் எதிர்காலச் சந்ததிகளும், நாம் காத்த பண்பாடும், மத ஆன்மிக தெய்வக் கோட்பாடுகள் சகலமும் நம் கண்முன்பே சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டியவர்கள் ஆவோம்!

குட்டிக்கதை-35: சிட்டுக்குருவியின் காதல்

சிட்டுக்குருவி ஒரு மலையை காதலித்து வந்தது.
தினந்தோறும் அது மலையிடம் வரும். தன் சின்ன அலகால் மலையை கொத்திக்கொத்தி தன் காதலைச் சொல்லும்.

மலை மவுனமாகவே இருந்தது. சிட்டுக்குருவி மனம் தளரவே இல்லை.

முன்பெல்லாம் தினம் ஒருமுறை தான் மலையிடம் வரும். இப்போது காலை,மாலை, இரவு என்று சிட்டுக்குருவி மலையிடம் வர ஆரம்பித்தது.

இரை தேடப்போகாமல் மலையே கதி என்று இருந்ததால் சிட்டுக்குருவி இளைக்க ஆரம்பித்தது.

சாப்பாடும் இல்லாமல் பசியும் தாளமுடியாமல் சிட்டுக்குறுவி பறக்கவே முடியாமல் உணர்விழந்து தவழ்ந்தது.

அப்போதும் மலை மவுனமாகவே இருந்தது.

சிட்டுக்குருவி மெல்லமெல்ல தவழ்ந்து மலை உச்சிக்கு வந்தது. அங்கே ஒரு தீபம் எரிந்து கொண்டு இருந்தது். சிட்டுக்குருவி தீபத்திடம் பேச ஆரம்பித்தது.

"வணக்கம் தீபமே. நான் பலகாலமாக மலையை காதலித்துக் கொண்டிருக்கிறேன். மலை பதிலே சொல்லவில்லை. நீயாவது மலையிடம் போய் என்னை காதலிக்க சொல்லமாட்டாயா?," என்றது.

தீபம் சிட்டுக்குருவியிடம் மெல்ல பேச ஆரம்பித்தது. "நான்தான் மலை. மலைதான் நான்."

சிட்டுக்குருவி ஆச்சரியத்துடன் தீபத்தை உற்றுநோக்கியது. தீபத்தின் சுடரில் மலை தெரிந்தது.

"சிட்டுக்குருவியே நீ என்னை காதலிப்பது போல்  நிறைய பேர் என்னை காதலிக்கிறார்கள். அத்தனை பேரையும் மலை ஒன்றாய் இருந்து நான் காதலிக்க முடியுமா. அதனால் தான் தீபமாய் இருக்கிறேன். என் சுடரை எடுத்து போய் உன் வீட்டில் தீபமாய் ஏற்று. நான் உன்னுடனே இருப்பேன்", என்றது.

சிட்டுக்குருவிக்கு உடல் சிலிர்த்தது. புது சக்தி வந்தார்ப்போல் இருந்தது. அது தீபத்தின் சுடரை ஒரு சுள்ளியில் ஏந்தி தன் வீடு நோக்கிப் பறந்தது.

அன்பு செய்யும் யாவருக்கும்
அருட்பெரும்ஜோதியாய்
அகக்கடவுள்.

நன்றி: திரு Ps Aravindan

ஆன்மீக சிந்தனை-115:

மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோர்க்கு உதவுவது ஒன்றுதான்.

நூல்மயம்-14: நாஞ்சில் நாடனின், "கம்பனின் அம்பறாத் தூணி"

நோக வைத்தவை-3:

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து 'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்று இரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!

சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்று அதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.

'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள் கோயம்பேட்டில் இறங்கும்போது, 'அண்ணே மொத சவாரிண்ணே... 150 ரூபாய் குடுங்க போதும்’ என்று இறைஞ்சும் ஆட்டோக்காரரிடம், 'ஏம்ப்பா... இப்படிக் கொள்ளையடிக்கிறீங்க...’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

இந்த வருடம் 5,000 ரூபாயாவது சம்பள உயர்வு இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து, '4,000 ரூபாய்தான் அதிகமாக்கியுள்ளோம்’ என்று மேலதிகாரி சொல்லும்போது இடிந்துபோகும் நமக்கு, வேலைக்கார அம்மா 200 ரூபாய் சம்பளத்தை ஏற்றிக் கேட்டால் கோபம் உள்ளுக்குள் உலை கலனாகக் கொதிக்கிறது!

சர்வீஸ் சென்டரில் காரை டெலிவரி எடுக்கும் போது, ஒரு அடி நீளத்துக்கு அவர்கள் தரும் பில்லில், ஒன்றிரண்டு விளக்கங்கள் கேட்டுப் பணம் செலுத்தும் நாம், தெருமுனை மெக்கானிக்கிடம் 'அநியாயம் பண்றப்பா!’ என்று அலுத்துக்கொள்கிறோம்.

இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும், அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிற மனநிலை ஒரு சுய திருப்தியாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு நாம் பொறுத்துக்கொண்ட பல விஷயங்களுக்கான வடிகாலாகவும் நமக்கு அமைந்துவிடுகிறது.

'அதிகாரத்தில் இருப்பவனிடம் அடங்கிப் போக வேண்டும்... இல்லாதவனை அதிகாரம் செய்ய வேண்டும்’ என்பதை எனக்கு, உங்களுக்கு, நமக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மேலதிகாரியின் மகனிடம் 'சொல்லுங்க தம்பி...’ என்று மரியாதை பேசும் நாம், இஸ்திரி வண்டிக்காரர், ஆட்டோக்காரர், துணிக் கடை விற்பனையாளர், ஹோட்டல் சிப்பந்திகளை வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் விளிக்கிறோம்.

மேலிருந்து கீழ் நோக்கி நகரும் அதிகாரம் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் இல்லை. 'இல்லாதவர்கள் அப்படியே இருக்கட்டும்... அதுதான் நமக்கு நல்லது’ என்ற யதேச்சதிகார, ஆதிக்க மனப்பான்மை நம்மையறியாமல் நமக்குள் புரையோடிக்கிடக்கிறது.

எதிர்க்கும் சக்தி இல்லாத மனிதர்களிடம் அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் நாம் சுய அளவில் தாழ்ந்துபோகிறோம் என்ற படிப்பினை நமக்குச் சொல்லித்தரப்படாமலே போய்விட்டது.

கடையிலோ, வீட்டிலோ ஒரு பொருள் காணாமல் போனால் முதலில் நம் கண்கள் தேடுவது கடைநிலை ஊழியரைத்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி விஷயமாகப் பேச வருபவரை நடுவீட்டில் அமரவைத்துப் பேசும் நாம், தண்ணீர் கேன் கொண்டு வரும் பையனின் பின்னாலேயே போகிறோம். வசதியற்றவனுக்கும் சுயமரியாதை, கொள்கைகள், நற்குணங்கள் உண்டு என்பதை ஏன் இந்த மிடில்கிளாஸ் மனசு ஏற்க மறுக்கிறது?

அதிகாரம் படைத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிற அல்லது பொறுத்துக்கொள்கிற நம் மனம், இல்லாதவனின் ஏழ்மையை மட்டும் சந்தேகக் கண்ணுடனேயே உற்று நோக்குகிறது!

'என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், 'இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது.

நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கைவைக்கத் தயங்குகிற சமூகம், கோழைத்தனமான சமூகம்.
'வலிமையில்லாதவன் அவனுக்கான வரம்புக்குள்தான் கனவு காண வேண்டும்’ என்று உலகில் எந்தச் சட்டமும் விதிக்கப்படவில்லை.

இல்லாதவன் எப்போதும் இயலாதவனாகவே இருந்தால், நமக்கு அது சௌகர்யம் என்று எண்ணுகிறோம். அதனால்தான் எளியவர்களின் கனவுகளைச் சீண்டுகிறோம். அதை முளையிலேயே கிள்ளி எறிய முனைகிறோம்.

பலம் படைத்தவர் களை ஒருவிதமாகவும், பலமற்றவர்களை வேறுவிதமாகவும் நடத்து வது அடிப்படை ஜனநாயக முறைக்குப் புறம்பானதாயிற்றே!

அன்றாட வாழ்க்கையில் அப்படிச் செயல் படும் நமக்கு அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது..???

சூப்பர் மார்கெட்டில் பாலீத்தீன் உறையில் அழகாக பேக் செய்யப்பட்ட வெண்டைக் காய்களை வாங்குவதற்கு முன்னால், நுனி உடைத்துப் பார்க்க உரிமை இல்லை. அங்கே வாய் பேசாமல் வாங்கிக்கொண்டு வருகிறோம்.

ஆனால், வாங்கும் பொருள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்க அனுமதிக்கிற வண்டிக்கார அம்மாவிடம் ஊர், உலக நியாயம் எல்லாம் பேசுகிறோம். அடக்க விலைக்கே கட்டாத நம் பேரத்தால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், 'வேணும்னா வாங்கிக்க... வேணாட்டி போ’ என்று சொல்லும்போது, அந்த வண்டிக்காரம்மா திமிர் பிடித்தவர் ஆகிறார்.

ஒரு உண்மையை உணர்ந்திருக்கிறீர்களா..???

எளியவர்கள் பெரும்பாலும் நம் குரலுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களின் குரலுக்கு மனசைக் கொடுக்க வேண்டியது மானுடத்தின் கடமை.

அதிகாரம் எப்போதும் மேலிருந்து கீழாகப் பாய்கிறது. அந்தப் பாய்ச்சல் ஒவ்வொரு மனிதனையும் துன்புறுத்துகிறது.

அதிகாரக் கட்டமைப்பின் கடை நிலையில் இருக்கும் எளியவன், தனக்கு மேலிருக்கும் அனைவரின் அடிகளையும் தாங்கிக்கொண்டு காயங்களோடு அழுகிறான்.

'நம்மிடம் சேரும் காசு, பணம், செல்வாக்கு எல்லாம் எளியவர்களை அதிகாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அல்ல...’ என்பதை நாம் எப்போது உணர்வோம்?

சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவை எல்லாம், 'இயலாத மனிதர்கள்தான் அதிகாரம் செய்யத் தோதானவர்கள்’ என்ற தோற்றத்தை முன்வைக்கின்றன.

லட்சக்கணக்கில் ஊழல் மோசடி புரிந்தவனுக்கு ஏ.சி. அறையில் விசாரணை நடக்கிறது. பிக்பாக்கெட் அடித்தவனைக் குத்த வைத்துக் கும்முகிறார்கள்.

பீரோவைத் திறந்து அப்பா பணத்தில் 5,000 ரூபாயைத் திருடுகிறவனை, 'பணக்கார வீட்டுப் புள்ள அப்படி இப்படித்தான் இருப்பான்’ என்று சாதாரணமாகச் சொல்லும் சமூகம், இஸ்திரி துணியைக் கொடுக்கவந்த சிறுவன் கரடி பொம்மையைக் கையில் எடுத்து ஆசையாகப் பார்த்தால், முன்னெச்சரிக்கையுடன் அந்த பொம்மையை எடுத்து உள்ளேவைக்கிறது.

இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதைப் போல இந்தக் கட்டுரை சிலருக்குப் படலாம். ஆனால் நான், நீங்கள் என நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போயிருக்கும் நாம் கவனிக்காத மனஉணர்வின் விவரணைகள்தான் இவை.

நியாயப்படி, அதிகாரம் என்பது இல்லாதவர்களின் ஏக்கங்களைத் தீர்க்கவும், அவர்களின் சுயமரியாதைக்கு எதிராக அநீதி நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கவும் பயன்பட வேண்டும்.

இருக்கிறவன், இல்லாதவன் என அனைவரின் மனமும் கனவுகளாலும், உணர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உணரும்வரை அது சாத்தியமில்லை.

இங்கு எல்லா மனிதரும் ஒன்றுதான். மூச்சுக்கு முந்நூறு தடவை ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசுகிற அதிகாரம் படைத்த அதிகாரி பேசுவது சரி என்றால், டீக்கடை முக்கில் தமிழில் கெட்ட வார்த்தை பேசுகிற மனிதரின் பேச்சும் சரிதான்.

'3,500 ரூபாய்க்கு வாங்கின செருப்பைத் தைக்க 30 ரூபாய் கூலி கேட்கிறியே... இது அடுக்குமா’ என்ற கேள்விக்குப் பின், '3,500 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்குன நீங்க, அதைத் தைக்க 30 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க’ என்ற பதிலும் இருக்கிறது நண்பர்களே!