25 டிச., 2018

குட்டிக்கதை-55:

காலையில் நல்ல மழை .

உழவர் சந்தை ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது
அங்கும் இங்குமாக சில தலைகள் தென்பட்டன.

வெளியே,
தேங்காய் கடையில் அய்யப்பன் சுவாமிகள் விலை பேசிக்கொண்டிருந்தார்கள்
நான் நுழைந்ததும்
"மொதல்ல அண்ணணுக்கு  கொடுங்க "
என்று என்னை அனுப்புவதில் அக்கறை யாய் இருந்தனர்

நானும் மூன்று காய் பத்துரூபாய் விலையில் வாங்கி விட்டு கீரை வாங்க உள்ளே போனேன்

திரும்பி வரும் போது அந்த விவசாயி
அண்ணா அண்ணா என்று எனை அழைத்தார்

ஓடி வந்து இன்னொரு தேங்காயை எடுத்து என் பையில் வைத்தார்

"அவங்களுக்கு ஒரே ரூபா கம்மியா குடுத்தனுங்க
எப்பவும் வாங்கறவங்க கிட்ட ஏமாத்தற மாதிரி ஆக கூடாது இல்லீங்களா "

விவசாயின்
எளிய நேர்மையின் முன் வார்த்தை அற்று  நின்றேன்

மழை வலுக்கிறது.

நன்றி: Dr கோவிந்தராஜூ சுப்ரமணியன்

கருத்துகள் இல்லை: