நிக்கொலா டெஸ்லா, (ஜூலை 10, 1856 – ஜனவரி 7, 1943):
பெரிய சாதனையாளர், கண்டுபிடிப்பாளர், மிகச் சிறந்த பொறியாளர். செர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்.
19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார்.
தனது கண்டுபிடிப்புகளின் மூலம் இரண்டாம் தொழிற்புரட்சி உருவாவதற்கு காரணமானார்.
இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
இந்த அற்புத சாதனையாளரின் நினைவைப் போற்றி மகிழ்வோம்.
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா மற்றும்
www.onthisday.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக