30 ஏப்., 2020

உணவே மருந்து!

இயற்கையின் வண்ணஜாலம்!

நினைவாஞ்சலி !

உலக நடன தினம்!

நேற்று போட்டிருக்க வேண்டிய பதிவு! 

நினைத்துப் பார்க்கிறேன்!

வீட்டுக்கடன் திட்டம்!

அதிர்ச்சித் தகவல்!

சுயமுன்னேற்றம்

பாராட்டுக்கள்!

மறந்ததும் இழந்ததும்!

இன்றைய சிந்தனைக்கு

மலர் வணக்கம்!

மலரும் நினைவுகள் : கொடுக்காப்பிளி

பாராட்டுக்கள்!

29 ஏப்., 2020

இயற்கையின் வண்ணஜாலம்!

அண்ணாமலையின் கைவண்ணம்!

எஸ்ரா வாசகியுடன்

எஸ். ரா. சார் கிட்ட பேசணும் என நினைத்தது உண்டு... 2019 மதுரை புத்தக கண்காட்சியில் பேசும் வாய்ப்பு அமைந்தது...  ஒவ்வொரு எழுத்தாளர் களுக்கும்  மாஸ்டர் பீஸ் புத்தகம் இருக்கும்... 

அப்படி இவரிடம் நான் மாஸ்டர் பீஸ் என நினைத்த புத்தகங்கள்...

1. உப பாண்டவம்... ஆத்தி படிக்க படிக்க நம் வரலாற்று ஆசான்களும் விதி விலக்கல்ல... அவர்களும் மனிதர்களின் வலிகளை, சல்லி தனத்தை அடைந்த பிறப்பு தான் என சார் சொல்லிய விதம் எல்லாம் அட்டகாசம்... 

2. சஞ்சாரம்... நாதஸ்வரம் மீது எத்தனை காதல் வந்தது என்று சொல்ல முடியவில்லை... நாதஸ்வர வித்துவான்கள் போன்ற மனிதர்களை  எல்லாம் நாம் இழந்து நிற்கும் தலைமுறை...

ஒரு இசை கருவி கூட கற்று கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் இப்ப வரை உண்டு... 

இப்படி பல புத்தகங்கள் சொல்ல முடியும்... ஆனால் இவரது எழுத்து எல்லாம் வேற லெவல்... 

சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துகள் சார்...

நன்றி: Ms காயத்ரி மஹதி, முகநூல்.

இன்றைய சிந்தனைக்கு

எங்கள் தமிழ்!

28 ஏப்., 2020

நூல்மயம்

கலங்க வைத்தவை! 😭😭😭


நியூயார்க் நகர மருத்துவர் 
கொர்னீலியா கிரிக் 
(New York City doctor Cornelia Grig )

தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்து பலரை கவலையடையச் செய்துள்ளது..

😢என் குழந்தைகள் மிக சிறியவர்களாக இருக்கிறார்கள்... முக கவசத்துடன் நான் பதிவேற்றிய என் படத்தை அவர்கள் அடையாளம் காணவில்லை. என்னை அவர்கள் தேடிவருவதாக கணவர் கூறகிறார்... ஆனால் எனக்கு வைரஸ் பாசிடிவ் இருப்பதால் நான் என் நோயாளிகளையும் மருத்துவமனையையும் விட்டு வெளியே செல்ல முடியவில்லை.. 

😢ஒரு நேரம் நான் இந்த வைரசால் இறந்து விட்டால் என் அன்புக்குழந்தைகளுக்கு என் இறப்பை புரியவையுங்கள்..

😢அம்மா மிக கடுமையாக வேலைசெய்து போராடியே உயிரைவிட்டார் என கூறுங்கள் என் மரணத்தால் அவர்கள் கவலையடையக்கூடாது பெருமைஅடையவேண்டும்.... என்று அவர் பதிவு செய்திருப்பது
கலங்கடித்திருக்கிறது.
😭😭😭

நன்றி: HtayHtay, முகநூல்.

கவிதை நேரம்

*ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவி மகன் படுந்துயர் பார்க்கொணாதே*

- விவேக சிந்தாமணி (77) எண்சீரடி ஆசிரிய விருத்தம்.

பசு கன்றைப் பெற, மழை விடாது பெய்ய, வீடு இடிந்து விழ, மனைவி பிரசவ வேதனைப்பட, வேலையாள் இறந்துவிட, ஈரங்காய்ந்து விடுகிறதென்று வயலில் விதைக்க விதை எடுத்து கொண்டு ஓட, கடன்காரர் மறித்துக் கொள்ள, அந்தச் சமயத்தில் வேளாண்மை செய்து சாப்பிட்ட பூமிகளின் தீர்வையைத் தரும்படியாக அரசர் கேட்க, அதேநேரம் குருக்களானவரும் குறுக்கே வந்து நின்று தட்சணை கேட்க, கவிகளைப்பாடி வித்துவான்கள் சன்மானஞ் செய்யும்படி வினவ, பாவிமகன் அடையும் துன்பம் பார்க்கச் சகிக்க இயலாது.

அடக்கடுக்காய் துன்பங்கள். 

என் நெஞ்சைத் தொட்ட கவிதை! 

இலவச உணவு வேண்டுவோர் கவனத்திற்கு...

அண்ணாமலையின் கைவண்ணம்!

அன்றும் இன்றும்









அன்றாட வாழ்வில் அபாயங்கள்! அதிர்ச்சித் தகவல்!!

*உயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி! உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி?????*

========@=====@======

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லி இன்று உயிர்கொல்லி விஷமாக மாறியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது.மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. இது சிறிய மளிகைக்கடைகளில் கூட இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.
6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. மேலும் இவர்கள் சேர்க்கும் சோட, உப்பு, அஜின மோட்டொ இதனால் சிறு நீரகத்தில் கல் நோயை ஏற்படுத்துகின்றது.
என்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்).இது…

உடம்பு உஷ்னம்

வாய் நாற்றம்

குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.

மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.

எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சிறந்தது

*Don't buy batter packets from shop.  They are dangerous.  Kindly read the above carefully*

குட்டிக்கதை : மூன்று கிளிகள்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 51 மூன்று கிளிகள்

பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன.

மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை எண்ணத் துவங்கினாலே ஒரு நாள் போய்விடும்.

ஆச்சி ஒருத்தியாக இருந்தாள். ஒரேயொரு பணியாள். ஆச்சி சில நேரம் கிளிகளைத் தன் வீட்டிற்குள் அழைப்பாள். தான் ஒரு கெடுதலும் செய்யமாட்டேன் என்று வாக்குறுதிகள் தருவாள். ஆனால் கிளிகளுக்குச் சுவரே போதுமானதாக இருந்தது.

பெரிய வீடாக இருந்தாலும் பறவைகள் சுவரில் தான் அமருகின்றன. மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் இருப்பிடம் பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பதேயில்லை.

சிறிய கூடு. சிறிய குகை. சிறிய மரக்கிளை போதுமானதாகயிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு எல்லாமே பெரிதாகத் தேவைப்படுகிறது.

மூன்று கிளிகளில் ஒன்று எப்போதுமே விலகியே அமர்ந்திருக்கும். அது தான் ஆச்சிக்கு விருப்பமான கிளி. அவள் அப்படித்தானிருந்தாள். குடும்பத்தோடு சேர்ந்திருந்தாலும் தனித்திருப்பதே அவள் பழக்கம்

கிளிக்குப் பழம் வைப்பதற்கென ஆச்சி தனியே ஒரு பீங்கான் தட்டு வைத்திருந்தாள். அதுவும் பர்மாவில் வாங்கியது தான்.

மூன்று கிளிகளும் ஒன்றாகப் பழம் தின்றதேயில்லை. ஏதாவது ஒரு கிளி மட்டும் தான் பழத்தைக் கொத்தும். ஆச்சியின் மூத்த சகோதரி அப்படித்தானிருந்தாள். அவளுக்குத் தூங்கி எழுந்தவுடன் சாப்பிட வேண்டும். அதுவும் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும். காபி என்றாலும் இரண்டு டம்ளர்கள் வேண்டும். இரவில் விழித்துக் கொள்ளும் போது கூட எதையாவது தின்று விட்டுத் தான் தூங்குவாள். அவள் தான் முதலில் இறந்து போனாள். இறந்த அன்று ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வாயில் செல்லவில்லை. வெறும் வயிற்றோடு செத்துப் போனாளே என்று தான் ஆச்சி அழுதாள். கிளிகள் பட்டினி கிடப்பதுண்டா. கிளிகளுக்குக் கடந்த கால நினைவுகள் உண்டா.

மூன்று கிளிகளுக்கு ஒன்று போல வாழ்க்கை இருக்காது தானே.

ஒன்றாக அமர்ந்திருக்கையில் ஏன் கிளிகள் குரலற்று ஒன்றையொன்று பார்த்தபடியே இருக்கின்றன. ஏன் ஒரே திசையைப் பார்க்கின்றன

கிளிகள் சுவரை விட்டுப் பறக்க எத்தனிக்கும் போது ஆச்சி தன்னை அறியாமல் கண்கலங்குவாள். பறவைகள் போனபிறகு வெற்றுச்சுவரைப் பார்த்தபடியே இருப்பாள். பின்பு நீண்ட பெருமூச்சுடன் பின் வாசற்கதவை மூடிவிட்டு தன் அறைக்குத் திரும்பி வருவாள்.

பெரிய வீடுகள் தனிமையை அதிகப்படுத்திவிடுகின்றன. பெருங்கடலின் முன் நிற்கும் சிறு நண்டைப் போல உணரச் செய்கின்றன. ஆச்சி தன் கட்டிலுக்குப் போய்ப் படுத்துக் கொள்வாள். ஆமையின் ஒடு போல அந்த வீடு தன் முதுகோடு சேர்ந்து கொண்டது போலத் தோன்றும்.

கடந்த காலத்தை நினைக்க நினைக்க மனது தண்ணீரில் விழுந்த காகிதம் போலத் துயரமாகிவிடும். அதை மறைத்துக் கொள்வதற்காகவே அவள் கந்தசஷ்டி கவசம் பாடுவாள்.

பின்பு கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீரைப் போல உறைந்து மௌனமாகி விடுவாள்.

அவ்வளவு தான் அவளால் செய்ய முடிந்தது.

••
நன்றி : திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன்,  முகநூல்.

இன்று ஒரு தகவல்