16 ஜூன், 2020

மதுரை மாநகராட்சி ஹோமியோபதி மருந்தை வினியோகம் செய்கிறது!

மதுரையில் ஒவ்வொரு ட்ராஃபிக் ஜங்ஷனில் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஹோமியோபதி மருந்தின் பெயர் "ஆர்சனிகா ஆல்பம் 30" (ARS ALB 30). கோவிட்-19 வைரசுக்காக.

 உட்கொள்ளும் முறை மற்றும் அளவு:

தினம் 5 மாத்திரைகள் வீதம்
3 நாட்களுக்கு காலை வெறும் வயிற்றில் நீர் கூட அருந்தாமல் உட்கொள்ள வேண்டும். 1 வயதுக்கு மேல் 3 வயது வரை உள்ளவர்களுக்கு 3 மாத்திரைகள்.

ஒவ்வொரு 15 நாட்களுக்கு பிறகு மேற்கூறியவாறு உட்கொள்ள வேண்டும் (வீட்டிலேயே இருப்பவர்களுக்கு)

அடிக்கடி வெளியே செல்பவர்கள் மேற்கூறிய இரு 15 நாட்களுக்கு இடையில் (அதாவது 7வது நாள் ஒரே ஒரு நாள் மட்டும் உட்கொள்ள வேண்டும்).

எப்பொழுதும் கிடைக்கும் இடம் பெரியார் பஸ் நிலையம் மாலைமுரசு எதிரில் (இந்த வீடியோவில் விலாசம் உள்ளது) 

கருத்துகள் இல்லை: