13 ஜூலை, 2020

நூல் மயம்


இன்றைய வாசிப்பு "செகாவ் வாழ்கிறார்". எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது. உயிர்மை பதிப்பகம் .விலை ரூபாய் 150/- மொத்த பக்கங்கள் 166 .முதல்பதிப்பு 2016.

       உபபாண்டவம் நெடுங்குருதி ,உறுபசி, யாமம் ,துயில் ,நிமித்தம் ,சஞ்சாரம், இடக்கை முதலான அரிய புத்தகங்கள் எழுதிய ராமகிருஷ்ணனின் இந்த புத்தகம் படிக்க மிகவும் அருமையாக இருக்கிறது. கண்ணைக் கவரும் விதத்தில் அச்சிடப்பட்டுள்ளது ,கைக்கு அடக்கமாக.

    செகாவ் குறித்து படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .இதற்கு முன் "கி. ரா. பக்கங்கள் "படித்தபோது அதில் கி. ரா. அவர்கள் செகாவ் குறித்து சிலாகித்து எழுதி இருப்பார். உடனே இந்தப் புத்தகம் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

    எஸ். ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.:
"கா. நா. சு .,வல்லிக்கண்ணன் ,
தி. க. சி.,ஜெயகாந்தன் ,ஜானகிராமன், அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் முதலான பலரும் வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
      பெண்கள்பூ வேலைகள் செய்வது போல நுட்பமான அழகு உணர்ச்சியுடன் தனித்துவத்துடன் சிறுகதைகள் 
எழுதியவர்செகாவ் என்று லியோ டால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார் .கார்த்தியும் , இவான் புநினும்,குப்ரினும்  செகாவை 
ஷேக்ஸ்பியருக்கு  நிகரான படைப்பாளியாக கூறுகிறார்கள்.

   19 வயதில் மருத்துவம் பயில துவங்கினார்; 24 ஆவது வயதில் காச நோய் அவரைத் தாக்கியது.

  ஒரு பக்க கதை முதல் 100 பக்க குறுநாவல் வரை பல்வேறு விதமான கதைகளை எழுதியிருக்கிறார் ; 600 க்கும் மேலாக .

     "ஷகலின் தீவில் "இருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை தேடிச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை குறித்து ஆராய்ந்து எழுதியவர் .
     தனது கதைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் காதலை கொண்டாடியவர் செகாவ் என்கிறார் ஆசிரியர்.

       சோவியத் அரசின் சார்பில்" ராதுகா பதிப்பகம் " ரஷ்ய இலக்கியங்களை ருஷ்ய மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது.

     செகாவ் எழுதிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அவரது காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

   தனது கையெழுத்துப் பிரதிகள் ,கதைகள் வெளியான இதழ்கள் டைரிகள், நோயாளிகளின் குறிப்பேடு ,மருத்துவ குறிப்புகள் ,பயணக்குறிப்புகள் ,வாசித்த புத்தகப் பட்டியல் ,நாடக நிகழ்வின் விளம்பரங்கள் ,புகைப்படங்கள் என அத்தனையும் முறையாக பராமரித்து வந்திருக்கிறார் .அவை இன்றும் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
எனது நண்பர் கே . வி.ராஜாமணி அவர்களும் செகாவ் போலவே எல்லாவற்றையும் சேகரித்து தனது வீட்டிலே வைத்திருக்கிறார்.

     " செகாவ் போல பலவேறு வகையாக கதாபாத்திரங்களை உருவாக்கியவர் எவருமில்லை. மன உணர்ச்சிகளை துல்லியமாக எழுதியது அவரது தனிச்சிறப்பு .அவரின் எழுத்து மிகவும் யதார்த்தமானது .அலங்கார மொழியை ஒருபோதும் அவர் பயன்படுத்தியது இல்லை" என்று ஆசிரியர் கூறுகிறார்.
   
          "துறவிகள் ,வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகிய மூவர் மீதான அவரது கடுமையான விமர்சனம் மிகுந்த முக்கியத்துவமானது "என்கிறார் ஆசிரியர்.
    
      " செகாவ் எழுதிய சிறுகதைகளில் இருந்து சிறந்த 100 கதைகளை தேர்வு செய்து தமிழில் மொழியாக்கம் செய்து தனி நூல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்" என்று தனது ஆசையை எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்.

******
ஆன்டன் செகாவ் குறித்து 13 தலைப்புகளில் எஸ் .ராமகிருஷ்ணன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் .
1என் பெயர் செகாவ்
2) ஐந்து  ரூபிள் காதலி 
3)தண்டனை தீவு 
4)காலாரா காலத்தில் செகாவ்
 5) செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை
6) டால்ஸ்டாயும் செகாவும் 
7) செகாவின் காதலிகள்
8) செகாவின் தோழர்கள் 
9) செகாவின் கடைசி தினங்கள் 
10) செகாவின் கதையுலகம்
11)கார்வரும் செகாவும்
12)திரையில் ஒளிர்ந்த செகாவ்
13) செகாவ் சில விமர்சனங்கள் 
என்ற தலைப்பில் "செகாவ் வாழ்கிறார்" என்று எஸ் .ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்..
      செகாவ்ஒரு அற்புதமான மனிதர் .
டாக்டர் மு. வ. கூறியது போல கலை யாரிடம் அதிகமாக ஒளிர்கிறது மிளிர்கிறதோ அவர்கள் காதல் வாழ்க்கையில் அதிகமாக ஈடுபடுவார்கள் என்று .அது இவர் விஷயத்தில் உண்மை .அதேபோல் செகாவ் ஒரு நல்ல மனிதர்; நல்ல மருத்துவர் ;நல்ல பண்பாளர் ,;நல்ல மனிதாபிமானி ;நல்ல வழிகாட்டி ; நல்ல எழுத்தாளர்,;நல்ல ஆராய்ச்சியாளர்; நல்ல ரசிகர், நல்ல அன்பாளர், இன்னும் இன்னும் பல பல நல்ல நல்ல...அதனால்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதாக நான் நினைக்கிறேன்.
         இன்று "கொரானா "போல அன்று "காலரா" வாந்தி பேதி காலத்தில் ஒரு மருத்துவராக 24 கிராமங்களை தத்தெடுத்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார் தனது உயிர் மீது பயம் இல்லாமல்.
      தண்டனை தீவுக்கும் சென்று தன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், ஆராய்ச்சி செய்து ,அந்த மக்களின்,கைதிகளின் அவலங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்தியவர்.
****
இனி இப்புத்தகம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்:
   ஆன்டன் செகாவ் இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடினார் .கஷ்டப்பட்டு தான் பள்ளிப்படிப்பை முடித்தார் .உடல்நலம் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதும் அவர் விடா முயற்சியாக வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் விற்றுவிட்டு படித்தார் .கடன் சுமையால் தந்தை ஊரை விட்டு ஓடிவிட்டார் .இந்த நிலையிலும் தனது 19 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக கல்வி பயின்றார் .தனது பதின்மூன்றாவது வயதிலேயே உள்ளூர் வேசையின் மூலம் உடலுறவின் சுகத்தை அறிந்திருந்த செகாவ்  அழகான பெண்களை தேடி பழகத் தொடங்கினார் .
"நிச்சயம் புது வாழ்க்கை தொடங்க போகிறது "என சகாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எப்போதும்.
இது *செர்ரி தோட் டங்கள் அழிவதில்லை"என்ற நாடகத்தில் இது ஒரு வசனம் ஆகவே இடம் பெற்றுவிடும்.

2) ஐந்து ரூபிள் கனவு..
Medicine is my lawful wife and literature my mistress when I get  tired of one I spend the night with the other. என்று ஆன்டன் செகாவ் கூறுகிறார் .
ஒரு நோயாளியை பார்ப்பதற்கு ஐந்து ரூபிள் கட்டணம் வசூலிக்கப்பட்டது அன்றையதினம் மாஸ்கோவில். வருடத்திற்கு மிக எளிதாக  பத்தாயிரம் சம்பாதித்து விட முடியும் .படிக்கும்போதே கதை கட்டுரைகளில் எழுதிக் கொண்டிருப்பது வழக்கம் . குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நோய்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஈடுபாடு காட்டினார் .குறிப்பாக தொற்றுநோய்களை எப்படி தடுப்பது என்பது பற்றிய அவரது கவனம் குவிந்திருந்தது.நாரை ஒன்றை வாழ்நாளின் இறுதிவரை  தொடர்ந்து வளர்த்து வந்தவர் .அந்த நாரை எந்த எழுத்தாளர் செகாவை பார்க்க வந்து பேசத் தொடங்கினாலும் அருகில் வந்து நின்று கொள்ளும். தன்னைவிட அதிக இலக்கிய அறிவு உள்ள நாரை என்று அதைப்பற்றி சொல்கிறார் .
      இதேபோல்தான் கேரளத்தில் ஒரு இலக்கிய ஆசிரியர் நாய் வளர்த்து வந்தார் அந்த நாய் அவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் .யார் வந்து பார்த்தாலும் யார் அவரை பார்க்க வந்தாலும் உடனே இது வந்து அவர்களோடு கலந்து நின்று உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கும் என்பது நினைவுக்கு வருகிறது எனக்கு.
   
3)தண்டனை தீவு...
சிறைக் கைதியாக சைபீரியாவில் தனது அனுபவங்களை தஸ்தயேவ்ஸ்கி "The house of the Dead என்ற தலைப்பில் நூலாக எழுதி இருந்தார் .அதுபோல ஷகலின் தீவில் உள்ள செய்திகளின் உண்மை நிலவரம் பற்றி தான் ஆராய விரும்பி அங்கு சென்று சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து ஆராய்ந்து கட்டுரை எழுதி வெளியிட்டார் .அது உலகத்தின் கவனம் பெற்று கைதிகளுக்கு நல்லதொரு அனுகூலம் செய்யப்பட்டது.
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சேகரம் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தார் .ஆராய்ச்சி பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி அனுப்பிய போது மாஸ்கோ அரசாங்கம் அதை நிராகரித்துவிட்டது.
4) காலரா காலத்தில் செகாவ் .
திரும்பி வந்தபோது 1892ல் ரஷ்யாவில் காலரா பரவத்தொடங்கியது ;ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துபோனார்கள் .*.மலிகோவாவை* சுற்றிய கிராமங்களை நோக்கிய புறப்பட்டு காலரா மருத்துவராக 25 கிராமங்களில் தனது பொறுப்பில் தத்தெடுத்துக் கொண்டார் .தற்பொழுது corona போல அன்றைய தினம் காலரா மக்களை எல்லாம் வாட்டி வதைத்து சாகடித்து விட்டது., மனதளவிலும் உடலளவிலும் .
     காலரா நோய்க்கு மிகச்சிறந்த உணவு வெங்காயம் .வெங்காய சாற்றில் ஒரு துணியை நனைத்து அந்த துணியை பிழிந்து சில துளிகள் காதில் விட வேண்டும் .இது ரஷ்யாவில் பிரபலமான மருத்துவமுறை .மயங்கி விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரு துளி வெங்காயச்சாற்றை விட்டால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார்கள் .அந்த நாட்டு வைத்தியம் அங்கு அதிகமான அளவிலேயே கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவிலும் கலரா பாதிப்பு அதிகமாகவே இருந்தது அந்த காலத்தில்.

 5)
செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை..... சிறுகதைகள் மாபெரும் வெற்றி பெற்ற அளவு செகாவ் நாடகத்தில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. 10க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். நாடகத்தின் வாயிலாக தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறார். இறக்கும்போது அவருடன் இருந்து இவரை காப்பாற்றுகிறார் .அவளின் கருணைத் தனிப்பெருங் கருணை. ஏழ்மையில் வாடிய தன்னைப்போலவே வறுமையில் வாடிய ஏழை குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய தொடங்கினார் . சில கிராமப்புற மக்களின் வேண்டுகோளை ஏற்று மூன்று பள்ளிகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார் .ஒரு மியூசியம் உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி  வழியாகவே சர்வதேச நாடக அரங்கில் பெரும் புகழை அடைந்தார்.
செகாவ் தியேட்டர்ல ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றினார். நாடக ஒத்திகை பங்கு கொண்டார் .காச நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டார். Uncle Vanya ,the seagull ,three sisters ,the cherry orchard முதலான நாடகங்களை எழுதினார்.
      உடலில் காசநோய் முற்றியதால் தனக்கு காம உணர்ச்சி அதிகம் ஆகிறது. பாலின்பத்தின் வழியே மட்டும் தன்னை குணப்படுத்திக் கொள்கிறேன் ,என செகாவ் தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
6) டால்ஸ்டாயும் செகாவும் .........
செகாவ் விட டால்ஸ்டாய் 32 வயது அதிகமானவர். செகாவ் எழுதியது போல மூன்று மடங்கு டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் .டால்ஸ்டாய் தனது சொந்த மகனை போல நேசித்து இருக்கிறார்.
    இரவு இருவரும் நடைப்பயிற்சிக்கு சென்றார்கள் .நீண்ட நேர நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது டால்ஸ்டாய் இவ்வாறு கூறுகிறார் : "பசியை விடவும்  காம உணர்ச்சியே வலுவானது. பெண்களின் காம உணர்வுகள் குறித்து வெளிப்படையாக பேச முற்படுவது 
இல்லை .காமம் இருட்டை போன்றது ;அதை ஊடுருவி போக முடியும் ,ஆனால் புரிந்து கொள்வது எளிது அல்ல .
இரண்டு தலை உள்ள புழுவை போன்றது காமம் ; ஒரு பக்கம் ஆசையாகவும் மறுபக்கம் விலகலாகவும் அது வெளிப்படுகிறது .காமத்தை மனிதர்கள் வெற்றி கொள்ள முடியாது .கடந்து போக மட்டுமே முடியும் .உண்மையில் காமம் ஒரு பொறி .அது மனிதர்களை பலப்படுத்துகிறது "என்று டால்ஸ்டாய் கூறினார் .
அதற்கு செகாவ் "நான் ஒரு மருத்துவராக காமத்தை அணுகும் விதம் வேறு; எழுத்தாளனாக அணுகும் விதம் வேறு. உண்மையில் காமம் ஒரு நோய் .அது உக்கிர படும்போது மனிதர்களின் இயல்பு திரிந்துவிடுகிறது .ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது காமத்தைத் தவிர ஒரு காரணம் இல்லை. காமம் இருக்கும் வரை அவர்கள் இணக்கமாக இருப்பார்கள் .அது வடிந்த பிறகு சண்டையும் கூச்சலும் ஏற்பட்டுவிடும"் என்று செகாவு கூறுகிறார்.
   நோபல் பரிசு பெற்ற இவான் புனின் 1895ஆம் ஆண்டு செகாவ்வை சந்திக்கிறார்;உற்ற நண்பராக மாறுகிறார் .அவர் தான்செகாவ் இறந்த பிறகு அவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார் .
    தி பியூட்டி (The Beauties)என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார் .இதில் வெளிப்படும் மேதமை அரிய இலக்கியப் படைப்பாக மாற்றிவிடுகிறது.

7) செகாவ்வின் காதலிகள்........
தனது கதைகளில் மட்டும் இல்லை, வாழ்க்கையிலும் காதலை கொண்டாடியவர் ஆண்டன் செகாவ் .அவரது காதல் அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. அதில் ஒன்று 32 இளம்பெண்கள் அவரை நெருங்கி பழகி இருக்கிறார்கள் என்பது. அதில் நான்கு பேர் வேசைகள் ,இரண்டு பேர் பாடகிகள், ஒருவர் ஆசிரியர், இன்னொருவர் பணக்கார விதவை, மற்றொருவர் ராணுவ அதிகாரியின் மனைவி .
    செகாவ் காதலித்த பெண்கள் ,
செகாவ்வைக்  காதலித்த பெண்கள் என இரண்டு வகை இருந்தார்கள்.
   திருமணம் என்பது செயற்கையான ஒப்பந்தம் ,அதில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் எனக்கு அவ்வளவு பிடித்தம் இல்லை என்று கூறுகிறார் .
     "தனது 13 வயதிலேயே காம உந்துதல் காரணமாக வேசிகளைத் தேடிப் போன அனுபவம் தனக்கு உண்டு .மருத்துவம் படிக்கிற காலங்களில் நிறைய வேசிகளுடன் பழகவும் படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் நேர்ந்தது .காமம் தன்னை ஒரு காலத்தில் மிகவும் அலைக்கழித்தது .அது தீர்க்க முடியாத பசி என உணர்ந்த பிறகு காமத்தை எதிர்கொள்ள பழகியிருந்தேன் "என சகாவு குறிப்பிடுகிறார்.
  *பசியால் சோற்றை வெல்ல வேண்டும் அல்லது
 சோற்றால் பசியை வெல்ல வேண்டும்.*என்று  தேவதச்சன் சொல்வது போல உள்ளது.
  The cherry orchard நாடகத்தின் மூலம் அதிகம் அறிமுகமான நாடக நடிகை ஓல்காவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். உடல்நிலை மோசமாகி 1904ஆம் ஆண்டு பெர்லினில் உள்ள 
"பேடன் லிவர் பிளாக் பாரஸ்ட்  ஸ்பாவில்" அனுமதிக்கப்பட்டார், இறுதி நிமிடம் வரை கூடவே இருந்தார், மரணத்திற்கு பிறகும் ஓல்கா நடிப்பதை நிறுத்தவில்லை .அத்துடன் அவரது நூல்களின் செம்பதிப்புகள் வருவதற்கும் உறுதுணையாக இருந்தார்." என்று கூறுகிறார் ஆசிரியர்

8) செகாவின் தோழர்கள்......
       செகாவின் விருப்பத்திற்குரிய நண்பர்களாக இருந்தவர்கள் மூவர். 
இவான் புனின் , மார்க்சிம் கார்க்கி ,குப்ரின் இவர்கள் சகா வீட்டில் அடிக்கடி ஒன்று கூடி சந்திப்பதும் ,இலக்கிய விவாதம் செய்வதும், மாஸ்கோ நாடகங்களுக்கும் விருதுகளுக்கும் போய் வருவதும் ,கதை வாசித்தல் ,சொற்பொழிவு நடத்துவது என ஒன்றாகவே செயல்பட்டார்கள் .இவர்களின் வழிகாட்டி செகாவ்.
மூவருமே தங்களின் ஆசானாக டால்ஸ்டாய் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள். ரஷ்யாவிலிருந்து முதன்முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் இவான், சகாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். இவர்கள் இருவரும்' புஷ்கின் 'விருது பெற்றவர்கள்.ஏனோ எனக்கு ஜெயகாந்தன் அவர்களின் மொட்டைமாடி கூரை வீடு நினைவுக்கு வருகிறது.
9) சகாவின் கதை உலகம் .....
"வான் கா "கதை .9 வயது சிறுவனின் கதை இது கி. ரா. அவர்கள் இந்த கதையை மிகவும் சிறப்பாக பாராட்டியிருக்கிறார் .
எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களுக்கும்  இந்த கதையை மிகவும் பிடிக்கும். இது செகாவின் இளமைக்கால வறுமையை குறித்து அவர் எழுதிய கதை.
எண்ணிக்கையில் அடங்கா சிறுகதைகளை எழுதிய உலகப் புகழ்ப்பெற்றவர் செகாவ் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். செகாவ் எழுதிய கதைகள் பலவற்றை குறிப்பிட்டு ஆசிரியர் விவரித்துச் செல்கிறார்.
10) செகாவும் கார்வரும்.....
செகாவின் கதையை அடுத்த நிலைக்கு மேம்படுத்தி எடுத்துச் செல்கிறார் கார்வர்.அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர் கார்வரே. இவர்கள் இருவரும் சிறுகதை குறித்து ஒற்றை உண்மையை முன்வைக்கிறார்கள் .அது என்னவென்றால் 'ஒரு கதையை பலமுறை திருத்தி எழுதுங்கள் என்பதே '
தச்சன் மரத்தை செதுக்குவது போல பார்த்து பார்த்து கவனமாக செதுக்குங்கள். எல்லா கதைகளும் ஒரே முறையில் சரியாக எழுதப்பட்டு விடாது .தொடர்ந்த ஈடுபாடும், திருத்தமும், மொழியின் மீதான கவனமும், எளிய ,அழுத்தமான கதை சொல்லும் முறையுமே கதையின் வெற்றிக்கான காரணங்கள் என்றார்கள் இருவரும்."
11) திரையில் ஒளிர்ந்த செகாவ்.....
    ஜோவன்கா பாஹ் என்ற தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த நாடக ஆசிரியர் எழுதிய செகாவ் அண்ட் மரியா நாடகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே Chekhov and Maria.
2007 இல் வெளியான இப்படத்தை இயக்கியவர் எரிக் டில்.
      காச நோய் பாதித்த செக்காவ் தனது சகோதரி மரியாவுடன்   தங்கி "செர்ரி தோட்டம் "நாடகத்தை எழுத முற்பட்ட நாட்களே படத்தின் மைய நிகழ்வு .செகாவ் திருமணம் செய்து கொண்டதை பற்றி கேள்விப்படும் மரியா ஆதங்கப்படுகிறார். இது குறித்துச் செகாவிற்கு கடிதம் எழுதுகிறாள் . செகாவிற்கும் மரியாவிற்கும் இடையே நடைபெறும் உறவும் மனப் போராட்டமே படத்தின் கதை .பள்ளி ஆசிரியரான மரியா,செகாவ்வின் மரணத்திற்கு பிறகு அவரது மியூசியத்தின் பொறுப்பாளர் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார் .செகாவ் நினைவு பொருட்களை முறையாகப் பாதுகாக்கப்பட்டன .அத்துடன் செகாவ் நினைவு தினமும் முறையாக கொண்டாடப்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார்.
இதுபோல ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவிக்கிறார்.
12) செகாவின் கடைசி தினங்கள்......
சகாவின் கடைசி தினங்களை படிக்கும் பொழுது நம்மை அறியாமல் என் கண்கள் கண்ணீரைச் சொறிந்து விடுகின்றன சகாவின் மரணம் 1904 இல் நிகழ்ந்தது ரஷ்யாவை அவரைப்போல நேசித்தவர் எவரும் இல்லை. ஆனால் செகாவின் மரணம் ரஷ்யாவில்  நிகழவில்லை .ஜெர்மனியின் பேடன்ட் வீலர் என்ற சுகவாசஸ்தலத்தில் அவர் இறந்து போனார் .தமிழ்நாட்டுக்கு அருகில் ஆந்திர சித்தூர் மாவட்டத்தில் மதனபள்ளி போல அது ஒரு காசநோய் நோயாளிகளுக்கான ஒரு வாசஸ்தலம் .அங்குதான் இறந்துவிடுகிறார்.
  இறக்கும்போது ஒல்கா அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கிறார். அதுபோல் யாரும் யாரையும் கவர்ந்து கவனித்துக் கொள்ள முடியாது என்று சொல்கிற அளவிலே அவர் கவனிப்பு இருந்ததாக ஆசிரியர் தெரிவிக்கிறார். நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. டாக்டர் வரவழைக்கப்பட்டு, டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு ஆக்சிசன் செலுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார்.செகாவ் மறுத்துவிடுகிறார். அது வருவதற்குள் நான் இறந்து விடுவேன் என்று .
கடைசியாக என்ன வேண்டும் என்று கேட்கிறார் ,ஒரு மரண தண்டனை கைதியை கேட்பது போல மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்பது போல் டாக்டர் கேட்கிறார் .அதற்கு அவர் ஷாம்பெயின் குடிக்க ஆசைப்படுகிறார் .ஷம்பயின் கொண்டு வரப்படுகிறது மூன்று குவளைகள் கொண்டுவரப்பட்டு ஊற்றப்படுகிறது. மூவரும் சியர்ஸ் சொல்லி மெதுவாக அருந்துகிறார்கள் ."நான் ஷாம் பெயின்  குடித்து நீண்ட நாட்களாகிவிட்டன என்றபடியே செகாவ் குவளையை வாயருகே கொண்டு போய் குடித்தார் .பின் கண்களை மூடி மூச்சை இழுத்தார் .கொஞ்ச நேரத்தில் அவர்" ich sterbe " என்றார். அந்த சொல்லுக்கு அர்த்தம் 'நான் செத்து கொண்டு இருக்கிறேன்' '
என்று அர்த்தம் .அதுதான் செகாவின் கடைசி சொற்கள் .தனது நாற்பத்தி நான்காவது வயதில் அவரது வாழ்க்கை முடிந்து போனது.
  செகா வின் உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. அவரின் மரணத்திற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது .அதன் முடிவில் மாஸ்கோ தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது .அடுத்த இரண்டு மாதங்களில் ஒல்கா மறுபடியும் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார்.
   செகாவ் இறந்து இறந்து பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1917 இல் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு புதிய சோவியத் யூனியன் உருவானது இதன் பிறகு உரிய மரியாதை செய்ய விரும்பிய அரசு அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தது.
  இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஒல்கா நடித்த "ஜெர்ரி பழத்தோட்டம்" "நாடகம் நடைபெற்றது.

குறைகளே சொல்ல முடியாத அளவில் நிறை வாழ்வு வாழ்ந்து இருக்கிறார்
செகாவ். அதனை அப்படியே நிறைவாக செரிவாக புத்தகமாக எழுதி இருக்கிறார் எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் .
போற்றி பாதுகாத்து வைக்கலாம்.

நன்றி: திரு.கருணா மூரத்தி, முகநூல்.

கருத்துகள் இல்லை: