*சமயநெறியே உண்மைநெறி*
சடங்குகளும் கற்பனையால் சமைத்ததெய்வம் கொண்டு,
சக்தியினை எல்லைகட்டி, மனம் அவற்றைச்சுற்றி,
மடங்கி மடங்கிச் சுழல மயக்கமே உண்டாகும்.
மாபெரிய இயற்கைவளம் உணர்ந்ததனைச் செயலால்
இடம்காலம், தொடர்புகொள்ளும் பொருட்கள் இயல்பறிந்து,
ஏற்றதல்ல செயல்புரிந்து, இனியவாழ்வு காண,
திடம்கொண்ட உண்மைவழி சமயநெறி ஆகும்.
தீமைபழிச் செயல்ஒழித்துத் தெய்வவழி காட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக