20 ஆக., 2020

கருத்து மேடை : இளமை நிலையாமை


இளமை நிலையாமை

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோல்கண்ண ளாகும் குனிந்து.

இளமைப் பருவம் குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும் பழங்களுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது. இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று இந்த இளந்தன்மையாளை மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம்.

இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.


நன்றி : இலக்கியப் பேரவை,  பின்லாந்து மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: