உயிர் காக்கும் மாமருந்துகள்-4 : ஆர்சனிக்கம் ஆல்பம்
Arsenic-album
(பகுதி - 2)
சல்பர் மருந்திலும் மற்றவர்களைப் பற்றிய கவலை உள்ளது. இவரைப் பொறுத்தவரை அவருக்குள் செயல்படும் கற்பனையே, அத்தகைய கவலைக்கு கொண்டு செல்கிறது. உதாரணத்திற்கு சல்பர் ஒரு தந்தையாக இருந்தால், அவருடைய மகள் ஒரு குறிப்பிட்ட நாளன்று இரண்டு மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்தார் என கொள்வோம். சல்பர் இதனையே நினைத்து கவலைப்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார். இது ஆர்சனிக்கத்தில் இருக்கின்ற, எங்கே தன்னுடைய மகளை இழந்துவிடுவோமோ என்ற கவலை அல்ல, மேலும் பாஸ்பரஸில் இல் இருப்பது போன்ற அனுதாபத்திற்குரிய கவலையும் அல்ல. இந்த சல்பர் நபர் தூங்காமல் படுத்துக்கொண்டு என்ன நடந்துவிடுமோ என்று எண்ணி, அதை குறித்து கணக்கிலடங்கா சாத்தியக்கூறுகளை கண்டபடி நினைத்துக் கொண்டிருப்பார். இவர் தனது கற்பனை வளத்தால் நடந்த நிகழ்ச்சியை ஊதி ஊதி பெரிதாக்கி உண்மைக்கு பொருத்தமில்லாமல் பெரிதாக்கி கொள்வார்.
இனி ஆர்சனிக்கத்தில் ஏற்படுகின்ற படிநிலைகளை பற்றி பார்ப்போம். முதல் படிநிலையில் உடல்சார்ந்த நோய்க்குறிகள், மிதமிஞ்சிய நேர்த்தியை எதிர்பார்க்கும் தன்மை (fastidious), கருமித்தனம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. அடுத்து நாம் பார்க்கும்போது பாதுகாப்பற்ற தன்மை, பிறரை சார்ந்திருத்தல், ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை, துணையாக இருப்பவரை இழந்து விடுவோமோ என்ற கவலை, தனியாக இருக்க பயம், மரணத்தைப் பற்றிய பயம் என நோய்க்குறிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளடைவில் மரணத்தைப் பற்றிய பயம் என்பது மெல்ல வளர்ந்து அது விடாப்பிடியாய் மாறி அது வேதனை கலந்த கவலையாகி ஒருவரின் வாழ்வில் அதுவே பெரிய பிரச்சனையாகவும் உருமாறி விடுகிறது.
நோய்க்குறிகள் மேலும் வளரும்போது, ஆர்சனிக் நபரில் இதுவரை எதிர்பாராத paranoid எனப்படும் பிறர் மீது நம்பிக்கையில்லாததோடு அவரை கண்டு அஞ்சுதலும், மேலும் பிரமை நிலையையும் (delusionary state) நாம் காணலாம். அப்போது அந்நபரில் சந்தேகம் முழுமையாக ஆட்சி செய்யும். இத்தகைய மனநிலை வளர்ச்சியடைந்ததும் அவருக்கு முன்பிருந்த அவரின் மிதமிஞ்சிய நேர்த்தியை எதிர்பார்க்கும் தன்மை (fastidious) மிக விரைவில் மறைவதை நாம் காணலாம். இறுதியாக கவலையும் பயமும் மறைந்து மிக ஆழமான மனசோர்வு (depression) நிலை வந்து அமர்ந்து கொள்ளும். இதன் விளைவாக நோயிலிருந்து மீள்வதில் அவநம்பிக்கை, வாழ்வின் மீதான விருப்பத்தை இழத்தல், தற்கொலை எண்ணங்கள் ஏற்படுதல், மற்றவர்களின் மீது சந்தேகம் மற்றும் தான் யாரை சார்ந்து இருக்கிறோமோ அவர்கள் தன்னை கொன்று விடுவார்களோ என்ற பயமும் ஏற்படும். இந்த நிலையில் ஆர்சனிக் நபர் மற்றவர்களிடம் பேசுவதை கூட தவிர்ப்பார். பிடிவாதமாக தனக்குள்ளாக உள்முகம் சார்ந்து வாழ்வார்.
இத்தகைய பித்து நிலையில் (insanity) அந்நபருக்கு ஏற்பட்ட படிநிலைகளை (முன்பு இருந்த) பற்றிய அறிவு இல்லாமல் ஆர்சனிக்கத்தை பரிந்துரைப்பது மிகவும் கடினமானதாகும். ஆர்சனிக்கத்திற்கே உரித்தான பல குறிகள் தென்படாது. அதாவது கவலை, மற்றவரை துணைக்கு வைத்துக்கொள்ள விரும்புதல், மரணத்தை பற்றிய பயம், அமைதியின்மை மிதமிஞ்சிய நேர்த்திதன்மை போன்றவைகள் இருக்காது. இந்த நிலையில் ஆர்சனிக்கத்தை, நக்ஸ்வாமிகா மற்றும் பல மருந்துகளிடமிருந்து பிரித்து உணர்வது மிக கடினமாக இருக்கும். ஆனால் துயரர் ஆய்வை (case taking) மிகக்கவனமாக செய்தால், ஒரு முழுமையான உடலியக்க படிநிலைகள் (dynamic process) ஒவ்வொன்றாக ஏற்பட்டதை மிக தெளிவாக தெரியும். அப்போது ஆர்சனிக்கத்தை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.
இங்கே விவரிக்கப்பட்டுள்ள படிநிலைகள் ஒரு உயிரியின் நோய் நிலைகள் எவ்வாறு படிப்படியாக அடுத்தடுத்த ஆழமான அடுக்குகளுக்கு செல்கின்றன என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன. ஆரம்பத்தில் உடல் மட்டத்தில் இருந்த நோய்க்குறிகள் சிறிது சிறிதாக முன்னேறி அடுத்த நிலையான கவலை, பாதுகாப்பின்மை, அடுத்து மரணத்தைப்பற்றி பயம், முடிவாக நம்பிக்கையின்மை, வாழ்க்கை மீதான பற்று இழுத்தல், தற்கொலைக்கு ஆட்படுதல் என ஒவ்வொரு கட்டமாக கடந்து மனதின் மட்டத்தில் பிரமை நிலையை அடைதல் போன்றவை நிகழ்கின்றன. முக்கியமாக இது போன்ற நிகழ்வுகளில், அந்நபருக்கு ஆர்சனிக்கதை சரியாக பரிந்துரைக்கும் போது, மேற்கண்ட நோயின் படிநிலைகள் தலைகீழாக ஒவ்வொன்றாக மாற்றம் அடைவதை நாம் எதிர்பார்க்கலாம். ஒரு ஹோமியோபதி மருத்துவரின் நோய் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சரியான அறிவினால் ஏற்படும் இத்தகைய முன்னேற்றமே, நலத்தைக் கொண்டுவரும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
----- ஜார்ஜ் வித்தௌல்காஸ்
மருந்தின் சிறப்பியல்பு குறிகள் :-
ஆர்சனிக்கம் ஆல்பம்
As2O3
இம்மருந்து நமது தந்தை மாமேதை.மரு.ஹானிமன் அவர்களால் நிரூபணம் செய்யப்பட்டதாகும்.
மிகவும் சோர்வான நிலை, உயிராற்றல் மிக விரைவாக பலம் குன்றி விடுதல் ; மயக்கம்.
மனநிலை பண்புகள்:
1. மனச்சோர்வு, துக்கம், விரக்தி, அலட்சியம்.
2. கவலை, பயம், அமைதியற்றதாகவும், வேதனை நிறைந்ததாகவும் இருக்கும்.
3. எரிச்சல், உணர்திறன் மிக்கவராக, சிடுசிடுப்பாகவும், எளிதில் சலிப்புறுபவராகவும் இருத்தல்.
எவ்வளவு துன்பங்கள் அதிகமாக இருக்கிறதோ, வேதனை, அமைதியின்மை, மரண பயம் ஆகியவையும் அந்தளவுக்கு இருக்கும்.
மனரீதியாக அமைதியற்றவர், ஆனாலும் உடல் ரீதியாக நகர்வதற்கு மிகவும் பலவீனமானவர்; இருப்பினும் எந்த இடத்திலும் ஓய்வெடுக்க முடியாது; தொடர்ந்து இடங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்; ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு நகர விரும்புவார், இங்கே, அங்கேயென கிடப்பார்.
மரண பயம்; மருந்து உட்கொள்வது பயனற்றது, குணப்படுத்த முடியாதது, நிச்சயமாக இறக்க போகிறேன் என்று நினைப்பார் ; மரண பயம், தனியாக இருக்கும்போதும், அல்லது,
படுக்கைக்கு போகும் போதும் ஏற்படும்.
இரவில் பதட்டத்தின் தாக்குதல்கள், படுக்கையிலிருந்து எழுந்து நடமாட செய்யும் <நள்ளிரவுக்குப் பிறகு.
மூளையில் தமனிகள் துடிப்பதை உணருவார்.
எரிச்சல் வலிகள்; பாதிக்கப்பட்ட பாகங்கள் நெருப்பைப் போல எரியும், சூடான நிலக்கரியை அந்த பகுதிகளில் வைத்தது போன்று இருக்கும் (Anthra),> வெப்பம், சூடான பானங்கள், சூடான ஒத்தடங்கள்.
பெருந்தாகமாக இருக்கும் ஆனால் குறிப்பாக இதை குடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்காது: வயிற்றினால் குடிக்கும் நீரினை உட்கிரக (assimilate) முடியாத காரணத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது; ஆகையால் வயிற்றில் ஒரு கல் இருப்பதை போன்று கிடப்பார் . ஒருவேளை நீரினை அருந்த விரும்பினாலும், ஆனால் அவர் அதை குடிக்க மாட்டார் அல்லது குடிக்க தைரியம் இருக்காது.
உணவின் வாசனையையோ அல்லது அதை பார்ப்பதைக் கூட தாங்க முடியாது (Colch., Sepia.).
குளிர்ந்த நீர் அருந்த பெரும் தாகம்; அடிக்கடி குடிப்பதும், ஆனால் ஒரு நேரத்தில் குறைவாக குடிப்பார்; எப்போதாவது சாப்பிடுவார், ஆனால் அதிகமாக எடுத்துக் கொள்வார்.
விஸ்கிக்கு பெரும் ஆவல்.
இரைப்பை குறைபாடுகள்; குளிர்ந்த பழங்கள் ; ஐஸ் கிரீம்; குளிர்ந்த நீர்
புளிப்பான பீர்; மோசமான மசாலா இறைச்சி; மது பானங்கள்; கடினமான பாலாடைக்கட்டி போன்ற இவைகளுக்கு பிறகு ஏற்படும் இரைப்பை தொந்தரவுகள்.
பற்கள் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள் வெளிறியவர்களாக, பலவீனமானவர்களாக, சிடுசிடுப்பானவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகளை கீழே விட்டால் விரைவாக தூக்கி வைத்து கொள்ள சொல்வார்கள்.
சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு வயிற்றுப்போக்கு; மலம் குறைவாகவும்,
கருமையாகவும் இருக்கும், அது எப்படி இருந்தாலும் கழித்தப் பிறகு கடுமையான சோர்வு.
மூல நோய்: நடக்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும் போது ஊசியால் குத்துவதை போன்ற வலியுடன் இருக்கும்,
மலம் கழிக்கும் போது வலி இருக்காது; ஓரிடத்தில் உட்கார்வதோ அல்லது தூங்குவதோ முடியாது; எரிச்சல் வலி, ஆனால் > வெப்பத்தினால்.
மலவாய் வெடிப்புகள் (fissures) சிறுநீரை வெளியேற்றுவதை கடினமாக்குகின்றன.
சுவாசம்: ஆஸ்துமா; அந்த நேரத்தில் உட்கார வேண்டும் அல்லது முன்னோக்கி வளைய வேண்டும்; இரவில் படுக்கையிலிருந்து எழுவார், குறிப்பாக பன்னிரண்டு மணிக்குப் பிறகு; மூச்சுத்திணறல் பயத்தால் படுத்துக்கொள்ள முடியாது; ஒவ்வாமையினால் வழக்கமாக ஏற்படும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிக்கு (urticaria) பதிலாக தொண்டை கரகரப்புடன் இருமல் (croup) போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
விரைவாக உடல் இளைத்தல் : குளிர் வியர்வை மற்றும் கடுமையான பலவீனமும் (tuber.,
Verat-alb.), பாதிக்கப்பட்ட பாகங்களில் காணப்படும் ; இவை காரணமாக உடல் இளைப்பு (marasmus).
தோலுக்கடியில் நீர்க் கோர்ப்பு(anasarca) ஏற்பட்டு அதனால் தோல் வெளிர்த்தும், மெழுகு தன்மையுடன் இருக்கும், (Acetic-acid.).
சிறுது நேரம் வேலை செய்தாலே அதிகப்படியான சோர்வு.
துயரர் படுக்கையில் படுத்திருக்கும்போது சோர்வை உணர்வதில்லை; அவர் அங்கிருந்து நகரும் போது அவர் தான் மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்வார்.
நோய்க்குறிகள் பொதுவாக 1-2 p.m, 12-2 a.m. நேரங்களில் மிகுதியாகும்
தோல்: வறண்டும் செதில்களாகவும் இருக்கும்; மேலும் குளிர்ந்தும், நீலமாக மாறியும் சுருக்கங்களுடனும் காணப்படும்; குளிர்ச்சியான, ஈரமான ஒட்டும் தன்மையுள்ள (clammy) வியர்வை; தோல் விரைப்பாக, கெட்டி காகிதம் (parchment) போன்று இருக்கும்; மேலும் தோலில் கருப்பு
கொப்புளங்கள் (vesicles) தோன்றும், அவை எரிச்சல் வலியுடன் இருக்கும்.
கெட்டுப்போன உணவு அல்லது விலங்குகளின் இறைச்சியை உட்கொள்வதால் ஏற்படும் மோசமான
விளைவுகள்.
மேலும் தடுப்பூசிகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு ஏற்றது.
ஆண்டுதோறும் திரும்ப வரும் புகார்கள் (Carbo-v., Lach., Sulph., Thuja).
இம்மருந்தோடு தொடர்புள்ள மருந்துகள்:-
நிறைவு மருந்துகள் : Allium-Sat., Carbo-veg., Phos., Pyr.
ஆர்சனிக்கம் ஆல்பத்தை பின்வரும் தொந்தரவுகளின் போது சிந்திக்க வேண்டும்:
புகையிலையினால் ; குடிப்பழக்கம்; கடல் குளியல், மசாலா இறைச்சியின் விஷம்; வெட்டுப்பட்ட காயங்கள் மற்றும் ஆந்த்ராக்ஸ் விஷம் ; விஷ பூச்சிகளின் கொட்டுதல் போன்ற சமயங்களில் இம்மருந்து தேவையான ஒன்றாகும்.
நோய்க்குறிகள் மிகுதல் (Aggravation) :- நள்ளிரவுக்குப் பிறகு (1 முதல் 2 a.m. அல்லது p.m.);
குளிரினால் ; குளிர் பானங்கள் மற்றும் உணவு; பாதிக்கப்பட்ட பக்கத்தில் படுத்தாலோ அல்லது தலை சாய்ந்தபடி இருக்கும்போது.
நோய்க்குறிகள் தணிதல் (Amelioration) .- தலைவலி தவிர பொதுவாக வெப்பத்தினால் (இதற்கு நேரெதிர் - Secal), இதில் தலைவலி தற்காலிகமாக > குளிர்ந்த குளியல் மூலம் (Spig.);
எரிச்சல் வலிகள் > வெப்பத்தால். (> கோடையில்).
---- மரு.H.C.ஆலன்
மருந்தின் நலமாக்கல் :-
பத்து வயது நிரம்பிய ஒரு சிறுமி. இரவும் பகலும் பிதற்றலுடன் காணப்பட்டாள் ; என்ன செய்தாலும் முழு சுய நினைவை கொண்டு வர முடியவில்லை. சிறுநீர் மற்றும் மலம் அவளை அறியாமல் தன்னிச்சையாக போனது . மிகவும் அமைதியற்றவளாக, குறிப்பாக ஒவ்வொரு இரவும் நள்ளிரவுக்குப் பிறகு அவளது நிலைமை மோசமாகும் .
சுவாசமானது குளிராகவும், தோல் குளிர்ச்சியாகவும், ஈரமானதாகவும் , ஒட்டும் தன்மையுடன் காணப்பட்டது. உதடுகள், பற்கள், நாக்கு போன்றவை வறண்டும், கருப்பாகவும் இருந்தன. ஒரு ஸ்பூனால் கொடுக்கப்பட்ட தண்ணீரை கொஞ்சமாகவும் எடுத்துக் கொண்டாள். ஆனால் இதேபோல் அடிக்கடி குடித்தாள். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு நம்பிக்கையற்ற துயர் நிலையில் இருந்தாள்.
அப்போது அவளுக்கு காணப்பட்ட குறிகளின் அடிப்படையில்
Ars-alb 30 தண்ணீரில் கலந்து, ஒவ்வொரு மணிநேரம் இடைவெளியில் நான்கு முறை கொடுக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்படும் போதே, அவளை கவனித்து கொண்டிருந்த செவிலியருக்கு அவளின் நிலைமை மேம்படுவது போல் தோன்றியது.
அடுத்த நாள் காலை ஓரளவு முன்னேற்றம் கண்டாள். மருந்து நிறுத்தப்பட்டது.
மதியத்திற்கு முன்பே நிலைமை மீண்டும் மோசமானது. அதே மருந்து 200 வீரியத்தில் முன்பு போல வழங்கப்பட்டது. அவளது நோயிலிருந்து நன்றாக மீண்டாள்.
இதற்கு பல நாட்கள் கழித்துப் மீண்டும் அதே நோய்க்குறிகள் தோன்றிய போது ஏற்கனவே கொடுக்கப்பட்ட Ars-alb மருந்தின் 1M , ஒருவேளை கொடுக்கப்பட்டது.
தற்போது அவள் நல்ல முன்னேற்றம் கண்டு, தன்னுடைய பழைய உடலமைப்பிற்கே வந்து ஆரோக்கியமானவளாக
இருக்கிறாள்.
--- மரு.H.N.கேர்ன்ஸே
தமிழாக்கம் மற்றும் தொகுப்பு :- நேயம் சத்யா
இந்த கட்டுரையின் மீதான மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்...
நன்றி!!!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக