புத்தகம் வாசித்தால் ஆயுள் கூடும்!
நாளிதழ், புத்தகம் வாசிக்கும்போது, மூளையின் பின் பகுதி நரம்புகள் தூண்டப்படும்.
இந்தப் பகுதியில்தான் நினைவுகளின் தொகுப்புகள் இருக்கும்.
வாசிப்பு அதிகரிக்கும்போது, நிறைய விசயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், மூளையின் பின் பகுதி நரம்புகள், அதிகமாக தூண்டப்படும். இதனால் கூடுதல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஞாபக சக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்.
வாசிப்பு பழக்கம்தான் மூளைக்கான பயிற்சியாக அமையும்.
வாசிப்பதால் மன அழுத்தம் குறையும்.மிகச்சிறந்த ஒரு புத்தகத்தால், ஒருவரின் கவனச் சிதறல் பிரச்சனையை சரி செய்ய முடியும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.
குறுகிய எண்ணங்கள்
மற்றும் தவறான சிந்தனையிலிருந்து, ஒருவரால் விடுபட முடியும்.
முதியவர்கள் வாசிப்பை பழக்கப்படுத்திக் கொண்டால், மூளை தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
அதுபோல, இளம் வயதில், வாசிப்பு அதிகமாக இருந்தால், வயதான பிறகு ஞாபக மறதி தொடர்பான பிரச்னைகள் 32 சதவீதம் தடுக்கப்படும்
என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தைகளை சத்தமாக வாசிப்பதன் மூலம் அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
கல்வியறிவு என்பது வாசிப்பை அடிப்படையாக வைத்துதான் அமையும் என்பதால், குழந்தைகளின் கற்றல் திறனை அதிகப்படுத்த வாசிப்பு அவசியம்.
பாடப்புத்தகங்களை மட்டுமேபடிக்க வைப்பது, தக்க பலன் தராது. அவ்வாறே பல பெற்றோர் செய்கின்றனர். அது தவறு. குழந்தைகளுக்கு ஆர்வமுள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்கஅனுமதிக்க வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களின் ஆயுள், இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கின்றன ' என அமெரிக்காவின்
'யேல் ' பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது.
நூலகர் வீ.கணேசன்உடுமலை
🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி : நரம்பியல் டாக்டர் பிரபாஷ்
மற்றும் வாட்ஸ்அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக