இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்கள் பள்ளிகளுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதாவது குழந்தைகளை "வெய்யிலில்"விளையாட அனுமதியுங்கள்.வைட்டமின்"டி"குறைபாடுகளால் நிறையக்குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.வெய்யிலில்இயற்கையாகவே வைட்டமின் டி இருக்கிறது.பெரும்பாலான பள்ளிகள் ஏர் கண்டிஷன் பள்ளிகளாகவே ஆரம்பிக்கப்படுகின்றன.இது போக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைவெய்யிலில் விளையாட அனுமதிப்பதில்லை
பெற்றோர்களே தயவுசெய்து குழந்தைகளை வெய்யிலில் விளையாடவும் மழையில் நனையவும் அனுமதியுங்கள்.அந்த விளையாட்டு இயற்கையுடனான விளையாட்டு.இவை போக உங்கள் குழந்தைகள் காலையில் பள்ளிக்கு அணிந்து செல்லும் ஆடைகளை அழுக்காக்கி வரட்டும்.பென்சிலை தொலைத்துவிட்டு வரட்டும்.கீழேவிழுந்து சிறு காயத்துடன் வரட்டும்.உங்கள் பையன் ரொம்ப சேட்டைகள் பண்ணுகிறான் என்ற புகார்கள் வரட்டும்.குழந்தைகளை சிறுசிறு தவறுகள் செய்ய அனுமதியுங்கள்.குழந்தைத்தனம் என்ற ஒன்றை குழந்தையிடமிருந்து பறித்து விடாதீர்கள்.மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்தால்தான் அது குழந்தை.இல்லையென்றால் பொம்மை.உங்களுக்கு குழந்தை வேண்டுமா?பொம்மை வேண்டுமா?.
நிறைய்ய வீடுகளில் பெற்றோர்கள் குழந்தை வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்ப ஒரு பொருளை மதிப்புக்கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அந்தப் பொருளின் பெயர் குழந்தை.
நன்றி : திரு. சோ தர்மன்
2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக