🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமிகளில் பைரவரை வணங்குவதால் என்ன சிறப்பு ?
சிவபெருமானின் வடிவங்களில் பைரவர் வடிவமும் ஒன்றாகும் . ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை , தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும் . மேலும் , சனி பகவானுக்கு குருவே பைரவர் என்பதால் , பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி பகவானால் எந்த இடைஞ்சலும் வராது . பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் நிச்சயம் பலன் உண்டு . வாழ்வில் பைரவ காயத்திரியைக் கூறுவதால் சகல துன்பங்களும் விலகும் .
*பைரவ காயத்திரி மந்திரம்*
ஓம் ஷ்வாநத் வஜாய வித்மஹே சூழ ஹஸ்தாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத் பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு . பைரவரை வணங்கும்பொழுது ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் . பைரவரை விரதம் இருந்து வணங்கினால் கொடிய நோய் தொந்தரவுகள் தடுக்கப்பட்டு , நவகிரக தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை . வளர்பிறை , தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் ( திருமணம் , கிரகப்பிரவேசம் , சொத்து வாங்குதல் உள்ளிட்டவை ) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் . ஆனால் , இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு ( தீட்சை பெறுவது , மந்திரங்கள் ஜெபிப்பது , ஹோமங்கள் உள்ளிட்டவை ) உகந்தது குறிப்பிடத்தக்கது .
*தேய்பிறை சிறப்பு*
அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருவதாக ஐதீகம் . எனவே , தேய்பிறை அஷ்டமி நாளில் , பைரவரை வணங்கினால் , அஷ்டலட்சுமியரின் அருளும் கிடைக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சியோடும் , செல்வ செழிப்போடும் வாழ தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்வது மிக அவசியம் .
*வளர்பிறை சிறப்பு*
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபட்டால் , எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் தீர்ந்துவிடும் . நீண்டநாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும் . செல்வ கடாட்சம் கிடைக்கும் . வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் . தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் . வீட்டில் நிலவும் கஷ்டம் விலகும் . நம் பாவங்கள் விலகி , புண்ணியங்கள் பெருகும் .
*என்ன பலன்*
பைரவரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் . நான்கு வேதங்களும் நாய் உருவில் பைரவருக்கு வாகனமாக அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை . இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் . தொழிலில் அபார வளர்ச்சி காணலாம் .
🤘🐚ஹரி ஓம் நம சிவாய🔱🤘
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக