*மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்*
1. மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
*சாந்தனுவாய்*
2. சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
*கங்கை மைந்தானாய்*
3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
*பாண்டுவாய்*
4. வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
*சகுனியாய்*
5. ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
*குந்தியாய்*
6. குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
*திருதராஷ்டிரனாய்*
7. பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
*கௌரவர்கள்*
8. பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
*துரியோதனனாய்*
9. கூடா நட்பு, கேடாய் முடியும்
*கர்ணனாய்*
10. சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
*பாஞ்சாலியாய்*
11. தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
*யுதிஷ்டிரனாய்*
12. பலம் மட்டுமே, பலன் தராது
*பீமனாய்*
13. இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
*அர்ஜூனனாய்*
14. சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
*சகாதேவனாய்*
15. விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
*அபிமன்யூ*
16. நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
*கண்ணனாய்*
*வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக