15 செப்., 2020

குட்டிக்கதை : தெய்வம் இருக்குமிடம்

#தெய்வம்_இருக்கும்_இடம்_ஒரு_சிறுகதை !
    ⚜️🚩  ●▬⚜ஓம்۩۞۩ஓம்⚜▬● ⚜️🚩 
பூமியில் சில காலம் தங்கியிருந்தார் கடவுள். அவரிடம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும், என்று 'எதையாவது' கேட்டுக்கொண்டே இருந்தனர். 

"மக்கள்" சலித்துப் போன கடவுள் எத்தனையோ இடம் மாறினார் ஆனால் தொல்லை ஓயவில்லை கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள்கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது. தேவர்களிடம் கருத்துக் கேட்டார் இமயமலைக்குச் சென்று விடுங்கள் என்றனர் சிலர். 📖🎑 

அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே நிலாவுக்குச் செல்லுங்கள் என்றார் வேறு சிலர். எப்படியாவது அங்கும் வந்துவிடுவார்கள் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றார் கடவுள். அவர்களின் ஆலோசனையை எதுவும் கடவுளுக்கு திருப்தி அளிக்கவில்லை.⚜️🚩 

கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது. யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதனின் மனம் மட்டுமே. அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது என்பதுதான் அது.

ஆகையால் மனதை தூய்மையாக வைத்து தியானித்தால் இறைவன் அருள் கிட்டும்.

#திருச்சிற்றம்பலம் 🍇🍇🍇

நன்றி :

கருத்துகள் இல்லை: