18 அக்., 2020

விழிப்புணர்வு பக்கம் : மோசடி உலகம்

தெரிந்த கதைதான

Dr. Mathi Vanan

ரெம்டெசிவிர். கொரானா உயிர் காக்கும் மருந்து என அறிமுகப்படுத்தப்பட்டது.

மே மாதம் பில் கேட்ஸ் தோழரும் அமெரிக்க தொற்று நோய் தலைவருமான அந்தோனி பாசி இந்த மருந்தை கொரானா மருந்து என அறிமுகப்படுத்தினார். கிலியட்  அமெரிக்க கம்பெனியின் பங்கு மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

ஆங்கில மருத்துவம் ஆதாரம் அடிப்படையில் இயங்கும் என சொல்வார்கள். ரெம்டெசிவிரில் ஆதாரம் இல்லை. 

கொரானா பெருந்தொற்றில் ஆதாரம் தேட நேரமில்லை. கருணை அடிப்படையில் தருகிறோம் என்று அனுமதி கிடைத்தது.

ரெம்டெசிவிருக்கு முன் ஐட்ராக்சி குளோரோகுயின் இருந்தது. இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கில் வாங்கினார்கள் அல்லவா. அதுதான்.

ரெம்டெசிவிர் வர ஐட்ராக்சி குளோரோகுயின் தடையாக இருந்தது. உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது. அதில் ஐட்ராக்சி குளோரோகுயின் உயிருக்கு ஆபத்து என முடிவு வந்தது. இயல்புக்கு மீறி பத்து மடங்கு அதிகமாக கொடுத்ததால் அப்படிப்பட்ட முடிவு என நடுநிலை ஆய்வாளர்கள் சொல்ல, அந்த ஆய்வு திரும்ப பெறப்பட்டது. எனினும் அதை காட்டி ஐட்ராக்சி குளோரோகுயினை நிறுத்தி ரெம்டெசிவிருக்கு அனுமதி தரப்பட்டது.

ஒரு நோயாளிக்கு ஐட்ராக்சி குளோரோகுயின் தந்தால் முன்னூறு ரூபாய் செலவு. ரெம்டெசிவிர் தந்தால் முப்பதாயிரம் ரூபாய் செலவு. ரெம்டெசிவிர் ஜெயித்த கதை புரிந்திருக்கும்.

லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தரப்பட்டது. இதன் வருமானம் 25 ஆயிரம் கோடிக்கு எதிர்பார்க்கிறார்கள்.

இன்று ரெம்டெசிவிர் பற்றி ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் இதனால் கொரானா சிகிச்சையில் எந்த விளைவும் இல்லை. கொரானா இறப்பை தடுப்பதில் ரெம்டெசிவிர் எந்த வேலையும் செய்யவில்லை என முடிவு வந்துள்ளது.

கொரானாவை காட்டி பல ஆயிரம் கோடி வருமானம் பார்க்கும் மருந்து கம்பெனிகள் பெருமுதலாளிகள்  கூட்டை சொல்கிறது ரெம்டெசிவிர். ஊடகங்கள், மருத்துவர்கள், முதலாளிகளை தாண்டி மக்கள் உண்மையை தேட வேண்டும். தங்களை காத்து கொள்ள.

https://www.bbc.com/news/world-54566730?fbclid=IwAR0t46lE_fVBkvBPZy8msre74K_gm8o6dDLfqfIJcW50Rs12kKtmhSbMdlY

நன்றி :

கருத்துகள் இல்லை: