15 அக்., 2020

கவிதை நேரம் : கூழாங்கற்களை சேகரித்தல் - தஞ்சாவூர்க்கவிராயர்

கூழாங்கற்களை சேகரித்தல்

ஆற்றோரம்
கூழாங்கற்களை
பொறுக்கும் பணி
ஆதிகாலத்திலிருநதே
குழந்தைகளுக்கு
கொடுக்கப்பட்டுள்ளது

ஒரு பறவை இருக்கிறதாம்
அது
கூழாங்கற்களை
சாப்பிடுமாம்

கூழாங்கல்லுக்கு வடிவமில்லை
ஆகவேதான் அது
அனைத்து வடிவங்களையும்
உடையதாகிறது
திறம்படைத்தவன்
காணக்கடவன்

ஒரு சிறிய கூழாங்கல்லின்
துணையோடு நான்
மலையைக்கடக்க விரும்புகிறேன்

கூழாங்கற்களுக்கு
அமானுஷ்ய சக்தி உண்டு
சிலசமயம் அவை
என்னையே பார்ப்பது போல்
உணர்ந்து
திடுக்கிட்டிருககிறேன்

நாம் குழந்தையாய்
இருந்தபோது
பொறுக்கி ய   வைரங்கள்
மெல்ல மெல்ல
கூழாங்கற்களாக
ஆகிக்கொண்டு வருவதைத்தான்
தாங்க முடியவில்லை

நன்றி :

கருத்துகள் இல்லை: