18 அக்., 2020

கருணை உள்ளமே கடவுள் இல்லமே : ஐதராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவும் அவரது மனைவி பிரமிளா ராணியும்

#கூடப்பிறந்த_அண்ணன்_தம்பியா இருந்தாலும் பூர்வீக சொத்து பிரிக்கின்ற போது, வரப்பு கொஞ்சம் தள்ளி போட்டிருந்தாலும் அந்த இடம் எனக்கானதுன்னு சொல்லி அண்ணன் தம்பின்னு கூட பார்க்காம கோர்ட் கேஸ்ன்னு போய்க்கிட்டு இருக்கற காலமிது.... 

#அரசுக்கும்_கோயிலுக்கும் சொந்தமா இருக்கிற நிலத்தை எல்லாம் அபகரித்துக்கொண்டு தன்நிலம் என்று பட்டா போட்டு சொந்தம் கொண்டாடும் அரசியல்வாதிகள் இருக்கும் நாடு இது. 

#இப்படியான ஒரு சூழலில் ஐதராபாத்தை சேர்ந்த கே.வி.சுப்பாராவும் அவரது மனைவி பிரமிளா ராணியும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, சூரப்பூண்டி கிராமத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான, #40ஏக்கர்_நிலத்தை_அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, பத்திரப் பதிவு செய்து, தானமாக நேத்து கொடுத்திருக்காங்க. இன்றைய அதன் சந்தை மதிப்பு எட்டு கோடி ரூபாயாம். எவ்வளவு பெரிய மனசு பாருங்க இவங்களுக்கு.. 

#1974ல் இவரோட தந்தை கேன்சர் நோயால் பாதிச்சு அப்போதைய சூழலில் சரியான சிகிச்சை வசதியின்றி இறந்துபோயிருக்காரு. தற்போது இந்தியாவில் பரவலாக மக்களிடையே பெருகிவரும் கேன்சர் நோய்க்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்க இந்த நிலம் கேன்சர் மருத்துவமனைக்கு பயன்படட்டும் என்று இந்த சொத்தை தானமாக வழங்கியதாக கூறுகின்றார் சுப்பாராவ்.. 💙

#ஏகப்பட்ட சொத்துக்களும், கோடி கோடியாக பணம்  இருந்தாலும் போறாது போறாதுன்னு ஓடி ஓடி சம்பாதிச்சுகிட்டு, யாருக்கும் எந்த உதவியும் பண்ணாம  இருக்கின்ற பல அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் மத்தியில் இந்த தம்பதியரின் செயலானது மிகவும் பாராட்டத்தக்கது.👍👍👏👏

நன்றி :

கருத்துகள் இல்லை: