14 நவ., 2020

வ. உ. சி. நினைவுகள்

' சூரரைப் போற்று ' 
- திரைப்படம் எனக்குள் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவைத் தூண்டியபடியே இருந்தது.

ஆள்பவர்களை எதிர்த்து மக்களுக்காக சுதேசிக் கப்பலை குறைந்த கட்டணத்தில் ஒட்டிக் காட்டிய முதல் சூரர் அவரே.  சரக்குக் கப்பல்களை பயணிகள் கப்பலாக சீரமைத்து ஒட்டி வெற்றி பெற்றுக் காட்டினார். ஒரு அரசாங்கத்தையே நடுநடுங்கச் செய்தார்.

அவரைச் சிறையில் தள்ளி சுதேசிக் கப்பல் நிறுவனத்தைச் சிதைத்தது ஆங்கிலேய அரசு.

40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே குற்றவாளி வ.உ.சி மட்டுமே! ஆங்கில அரசுக்கு அவர் மீது அத்தனை பயம். 

அகிம்சையும், உண்ணாவிரதமும் வேலைக்கு ஆகாது. ஆங்கிலேயர்களை போர்முனையில் சந்திக்க வேண்டும் என்றார் சுபாஷ் சந்திரபோஸ். 

அகிம்சையும், உண்ணாவிரதமும் வேலைக்கு ஆகாது. ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்றார் வ.உ.சி. 

சிறையிலிருந்து மீண்ட பிறகு சொத்துக்களை இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார். அவரைச் சந்திக்கக் கூட யாரும் தயாராக இல்லை. இறுதிக் காலங்களில் மண்ணெண்ணெய் வண்டியை சென்னையின் வீதிகளில் தள்ளிச் சென்று வியாபாரம் செய்தார். 

அவரது பங்குதாரர்கள் விரும்பியதைப் போல வ.உ.சி, சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் கப்பல் நிறுவன முதலாளியாக இருந்திருப்பார்.

நன்றி :

கருத்துகள் இல்லை: