புற்றுநோய் செல்களை அழிக்கும் ஃபார்முலா!! சட்டீஸ்கர் மாணவியின் அசத்தல் முயற்சி!!
புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழிக்கக்கூடிய புதிய மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் ஆராய்ச்சி மாணவி மம்தா திரிபாதி.
பரிசோதனை முடிவில் வெற்றிபெற்றால், `இது கீமோ தெரப்பிக்கு மாற்றுச் சிகிச்சையாக இருக்கும்' என்கிறார்.
உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காண மருத்துவ உலகில் கடுமையான ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மம்தா திரிபாதி என்ற மாணவி, புற்றுநோயை உருவாக்கும் செல்களை முற்றிலுமாக அழிக்கக்கூடிய புதிய மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர், ராய்ப்பூர் பண்டிட்.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட இவர், புதிய ஃபார்முலா மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், `புற்றுநோயை உருவாக்கும் செல்களை, அழிக்க புதிய ஃபார்முலா மூலம் மூலக்கூற் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன்.
இது, புற்றுநோய் செல்களை 70 சதவிதகம் முதல் 80 சதவிகிதம் வரை அழித்து, அதனை மேலும் பரவவிடாமல் நோயைக் குணப்படுத்தும்.
இந்த மூலக்கூறுகளில் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது. இதனை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
சோதனை வெற்றி பெற்றால், இது கீமோ தெரப்பிக்கு மாற்றுச் சிகிச்சையாக இருக்கும்' என்றார் நம்பிக்கையுடன்.....
பகிருங்கள், பிறரும் அறிந்துகொள்ளட்டும்..!!
#புற்றுநோய் #சட்டீஸ்கர் #மம்தா
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக