20 நவ., 2020

இன்றைய திருமந்திரம்

வருட 214  ஆம் நாள்
திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய 03 ஆம் தமிழ் வேதப் பாடல்:-

வாசநன்மலர்மலி  மார்பில் வெண்பொடிப் 
பூசனைப் பொழில் திகழ் பூவணத்துறை
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார்வினை 
நாசனை அடிதொழ நன்மை யாகுமே 

பிரார்த்தனை :

நறுமணம் கொண்ட மலர் மாலைகள்  அணிந்து திரு வெண்ணீற்றைப்பூசி  பொழில் திகழ் பூவணம் எனும் தலத்தில் உறையும் சிவபெருமானே ! மலர்களால் உம்மை வழிபடும் அடியார்களின் வினையை  நாசம் செய்பவர்  தாங்கள்  . நானும் மலர்தூவி  வழிபடுகின்றேன் . என் வினைகளை நீக்கியருளுங்கள் . 

தேங்கிய நீரிலிருந்து ஒளிபிறக்கிறது 
( நீர்மின்சாரம்) அடக்கிய மனதில் ஆன்ம ஒளி பிறக்கிறது . 

வருட 215 ஆம்  நாள்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 08 ஆம் தமிழ் வேதப் பாடல்:-

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் 
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே 
ஊழிமுதல் சிந்தாத நன்மணி வந்து என்பிறவித் 
தாழை பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ 

பிரார்த்தனை :

கருணைக்கடவுளே ! ஏழைத்தொண்டனேன் வீணாக க் காலத்தை கழித்து விட்டேன் . பரம்பொருளாகிய  உங்களை பணியத் தவறிவிட்டேன்  .  இருப்பினும் என் பிறவித் தலையை அறுத்து அருள் செய்த தங்களின் பெரும் கருணைக்கு வந்தனம் ! வந்தனம் ! 

கொடினும் பேதையும் கொண்டது விடார்கள் . 

வருட 216 ஆம்  நாள்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 04 ஆம் தமிழ் வேதப் பாடல்:-

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
வேள்வி தொழிற்படுத்த 
காமன் பொடிப் படக் காய்ந்த 
கடல்நாகைக் காரோண நின் 
நாமம்  பரவி நமச்சிவாய 
என்னும் அஞ்செழுத்தும் 
சாம்அன்று உரைக்கத் தருக 
கண்டாய்  எங்கள் சங்கரனே 
பிரார்த்தனை :

தூமென் மலர்களை கணையாகத் தங்கள் மீது தொடுத்த மன்மதனை எரியச் செய்த பெருமானே ! கடல் சூழ்ந்த  நாகைக்கரோணத்தில்  வீற்றிருக்கும்  சிவமே !  தேவரீருடைய திருநாமம்  ஆகிய நமச்சிவாய எனும் திருஐந்தெழுத்தை எனது உயிர் பிரிகின்ற காலத்தும் உரைக்குமாறு அருள்வாய்  எங்கள் சங்கரனே . உமது திருவடி வாழ்க 

காமத்தை அழிப்பது இறைவனின் நாமம்

நன்றி :

கருத்துகள் இல்லை: