திருமந்திரம் - பாடல் #976: நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
நகார மகார சிகாரம் நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.
விளக்கம்:
‘சி’ எழுத்தை நடுவில் கொண்டிருக்கும் ‘நமசிவாய’ மந்திரத்தை மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் மூச்சுக்காற்றோடு சேர்த்து அதற்கு முன்பு ‘ஓம்’ சேர்த்துக் கொண்டு மனதிற்குள் செபித்து வந்தால் இறைவன் சாதகரின் மனதிற்குள் எழுந்தருளுவான்.
குறிப்பு: மூச்சுக்காற்றை இழுக்கும் போது ‘ஓம்’ என்றும் வெளிவிடும்போது ‘நமசிவாய’ என்றும் செபிக்க வேண்டும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக