மரணத்தினால் அழிக்கமுடியாதது எது?”
------------------------------------------------
டால்ஸ்டாய் 50வது வயதில் இந்தக் கேள்வியினால்தான் அலைக்கழிக்கப்பட்டார். நல்ல உடல் ஆரோக்கியம் , மிகப்பெரிய பண்ணை நிலம் , பதினான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்த மனைவி, இலக்கியத்தில் நிலையான புகழ் இவ்வளவும் இருந்தது. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி அவரைத் துன்புறுத்தியது. அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதைக் காட்டிலும் தற்கொலையே சிறந்தது என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார். 1879 இல் ”போரும் வாழ்வும்” வெளிவந்து பிரபலமாகிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு , “அன்னா கரீனா” எழுதி 2 ஆண்டுகளுக்குப் பிறகும் , இருத்தலியல்ரீதியான ஒரு தனிமைக்கு இரையாகிப் போனார். அது அவரை உடல்ரீதியாக பாதித்தது. அதனை அவர் மனிதப் பிறவியின் உள்முக நோய் ” ( mortal internal disease ) என்று அழைத்தார். துப்பாக்கி எடுத்துக் கொண்டு பறவை வேட்டைக்குப் போவதில்கூட அவர் விருப்பமற்றுப் போனார். வாழ்க்கை கொடூரமானதாகவும் முட்டாள்தனமானதாகவும் தோன்றியது. வெளியேற வழி தெரியாத ஒரு காட்டுக்குள் வந்து மாட்டிக் கொண்டதுபோல உணர்ந்தார். ’மரணத்தினால் அழிக்கமுடியாதது எது?”
எனும் கேள்விக்கு விடை தேடித்தான் டால்ஸ்டாய் எழுத்தை வாழத் தொடங்கினார்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக