30 நவ., 2020

நூல் நயம் : நாகம்மாள் - ஆர்.சண்முகசுந்தரம்

வாசிப்பு மாரத்தான் 2020
25+/83
RM023
நாகம்மாள்   -                          ஆர்.சண்முகசுந்தரம்

சின்னப்பன், அவன் மனைவி ராமாயி. சின்னப்பனோட அண்ணன், பத்து வருடத்துக்கு முன் நடந்த ஊர்திருவிழாவின் போது, வெடி விபத்தில் இறந்துவிட்டான். அவனது விதவை மனைவி தான் நாகம்மாள். அவளோட குழந்தை முத்தாயி.

கொஞ்ச நாளாகவே, நாகம்மாளோட நடத்தை, சின்னப்பனுக்கும், ராமாயிக்கும் சங்கடத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஊரிலும் ஏதேதோ பேச்சுகள். நாகம்மாள் பல சமயம் ரகசியமாகவும், சில சமயம் சிலர் கண்ணில் பட்டும், கெட்டியப்பனைச் சந்தித்து கொண்டிருக்கிறாள். 

ராமாயியின் அம்மாவுக்கு, இங்கே இருக்கிற காடு-கரையெல்லாம் விற்றுவிட்டு, மகள்-மருமகன் தங்களோடு வந்துவிட்டால் நலமென்று இருக்கிறது. 

நாகம்மாளுக்கு, கெட்டியப்பனால் ஒரு காரியம் நடக்கவேண்டும். கெட்டியப்பன் கூட இதில் ஒரு பகடைக்காய் தான். 

என்ன அது..முடிவு என்ன ஆயிற்று என்பது தான் கதை.

இயல்பான கிராமத்தை கண்முன்னால் நிறுத்துகிறது வர்ணனையும், கதை நடையும். நாகம்மாளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அறிமுகம் செய்கையில், நாம் அவளுக்கு ஒரு உருவம் கொடுத்துவிடுவோம். அவ்வளவு நுட்பம். நாகம்மாள் மட்டுமில்லை, அந்த கிராமம், மக்கள் எல்லாமும். 

முன்னுரையில், கு.ப.ரா எழுதியிருப்பது தான் அட்டையில் இருக்கிறது - " குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இது தான்" 

முடிவு, மூச்சை ஒரு நொடி நிறுத்திவிடும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: