5 டிச., 2020

நூல் நயம் : ஆயிஷா

25  பக்கங்கள் கூட இல்லாத  ஒரு  புத்தகம் மனதில்  இத்தனை விதமான  தாக்கங்களை   ஏற்படுத்தமுடியுமா.ஆம் அதை கொஞ்சமனும்   எழுத்தில்  கொண்டு வர  முயற்சிக்கிறேன். 

கிறித்துவப் பள்ளியில் ஹாஸ்டலில்  தாங்கி  ஆசிரியராகவும் பாதுகாவலராகவும்  பணியாற்றும்  அறிவியல்  ஆசிரியை  சுகுணா  தன்  மாணவியை  ஆயிஷா  பற்றி சொல்லும்  கதை. 

செக்கு மாட்டைப்   போல  எப்போதும்  ஒரே  மாதிரியான பாடங்களை  திருப்பிதிருப்பி  எடுத்து  கொண்டு  சுவராசியம்  அற்ற  வாழ்க்கை வாழ்ந்து  கொண்டு  இருக்கிறார்  ஆசிரியர் சுகுணா . ஒரு  நாள்  பத்தாம்  வகுப்பு மாணவர்கள்களுக்கு  காந்தம்  பற்றிய  பாடத்தை எடுக்கும்  போது அறிமுகமாகிறாள்  ஆயிஷா.. அன்று  அவள்  கேட்டக்  கேள்வியும், அன்றே  அவள் கொடுத்தப்  புத்தகமும்   ஆயிஷாவின்  மேல்  உள்ளப்   பார்வையை   மாற்றுகிறது.ஆம் இயற்பியல் படித்தத்  தான்  அன்று வரை  தான்  இது போல  யோசித்தது  இல்லை  என  உணர்கிறார். 
  
மாணவர்கள்  வித்தியாசமான கேள்வி  கேட்டால்  எரிச்சல்  அடைவதும், அவர்களை  மட்டம்  தட்டும், கட்டாய  டியூஷன்  வர  சொல்லும் பல  ஆசிரியர்கள்  மத்தியில்,  மாணவி கொடுத்த  புத்தகத்தை படித்து  அவளை  மதித்து  கொண்டாடும்   வித்தியாசமான  ஆசிரியர்  சுகுணா. 

ஆயிஷா இவள் பெற்றோர் இல்லாத,  சித்தி  வீட்டில்  தங்கிப்  படிக்கும்  பெண்.  அவள்  ஆசிரியர்களிடம் கேள்வி  கேட்டு,  பதில்  தராதப்போது அவளே  பதில்  சொல்லுவதால் ஆசிரியர்களின்  கோவத்திற்கு  உள்ளாகி  அடிகளை  வாங்கும்  பேதை பெண். அவளிடம்  பிரியமாக  இருக்கும்  சுகுணா  டீச்சரிடம்  நெருங்கி  பழகிறாள். நிறைய  புத்தகங்களை லைப்ரரில்  எடுத்து  படிக்கிறாள். ஒரு முறை +1  கணிதத்தையும்  எளிதாக  போட்டு  அந்த  மாணவர்களுக்கு  உதவுவதால்  தண்டிக்கப் படுகிறாள். 

ஆயிஷாவின்  சில கேள்விகள் 

1. ஒரு  மெழுகுவர்த்தியில்  ஒளி அதிகமாகவும்,  வெப்பம்  குறைவாகவும் உள்ளது.  ஆனால்  ஒரு  அடுப்பில்  எரியும்  நெருப்பில்  ஒளி  குறைவாகவும், வெப்பம்  அதிகமாகவும்  உள்ளதே  ஏன்? 
2. துணி  துவைக்கிற  சோப்பு அழுக்கை  அகற்றுவதற்கும்,  குளியல்  சோப்பு  அழுக்கை  அகற்றுவதற்கும்  என்ன  வித்தியாசம்.? 
 
ஒரு  நாள்  தனக்கு  சில  புத்தகங்கள்  புரியவில்லை  எனவும்,  டீச்சரிடம்  தமிழில்  அறிவியல்  புத்தகம்  எழுத  வலியுறுத்திக்கிறாள். நைட்ரஸ்  ஆக்ஸைடு  பற்றியப்   பாட வகுப்பில்,  அதுக்கு  மரத்து போக வைக்கும்  குணம்  உள்ளதால்   அறுவை  சிகிச்சையில்  பயன்படுத்துவர்கள் என  அறிந்து  கொள்கிறாள். சுகுணா  டீச்சரிடம்  நைட்ரஸ்  ஆக்சைடு  எதிலெல்லாம்  கரையும்  என  கேக்கிறாள். அதற்கு  டீச்சர் water,  எத்தனால்  , sulphuric  acid என்கிறார்.நைட்ரஸ் ஆக்சைட்டுக்கு இன்னொரு  பண்பும்  உண்டு  அது சிரிப்புயூட்டி (laughing  gas).

ஆசிரியர்கள்  அடிப்பது மரத்து  போகாமல்  இருக்க நைட்ரஸ்  ஆக்சைடு  பயன் படுத்த  முடிவு  செய்து,   ஒரு நாள் experiment செய்து பாக்கிறாள். முதலில்  தேர்ந்த விஞ்ஞானி  போல ஒரு  தவளைக்கு  செலுத்தி  பார்க்கிறாள். அது  மரத்து  போகவே  தானும்  செலுத்தி  கொள்கிறாள்.. அங்கு வரும்  டீச்சரிடம்   எக்ஸ்பிரிமெண்ட்  சக்சஸ்,  இனிமே  யாரு  அடிச்சாலும்  வலிக்கது,  எவ்வளவு வேண்டுமானாலும்  அடிச்சுக்கட்டும் என்கிறாள். 

முதலில் தவளையும், சிறிது  நேரத்தில் ஆயிஷா பரிசோதனைக்கு  பலியானாள்.  ஒருவேளை  கெமிஸ்ட்ரி  teacher  பிரியமாக  இருந்து  இருந்தால்  கெமிக்கலின்  மற்ற  பண்புகளையும்,  மிகக்குறைந்த  அளவுத் தான்  பயன்படுத்த வேண்டும் அளவுக்கு  மிஞ்சனால்  அமிர்தமும்  நஞ்சு  என  தெரிந்து  கொண்டு  இருப்பாளோஎன்னவோ .அதே  சமயம்   உயிரியல்  ஆசிரியர்  இணக்கமாக   இருந்து  இருந்தால்  தவளைக்கு  மரத்து  போனாலும்  கொஞ்சம்  நாள்களாகவது  observation  வைத்து  பின்னரே  நாம்  பரிசோதித்து  பார்க்க  வேண்டும்  என  அறிவுரை  வழங்கிருப்பரோ.?  உண்மையில்  எல்லோரும்  கொஞ்சமாவது  அவளின்  கேள்விகளை  செவி மடுத்து, தாங்க முடியாத அளவிற்கு  அடிக்காமல்  இருந்து  இருந்தால்  இந்த  பரிசோதனையே  தேவையில்லமால்  போயிருக்கலாம். 

எல்லாமே  பிள்ளைகளும்   கேள்வி  கேற்பதில்லை. கேள்வி  கேக்கும்  ஆயிஷா  போன்ற  பிள்ளைகளின் கேள்விக்கு குறைந்தப்பட்சம்  செவிக்கொடுப்போம். இனியேனும்  ஆயிஷா  போன்ற  நிலை  யாருக்கும்  வரவேண்டாம். 

ஆயிஷாவின்   ஒரு  கேள்வியோடு  இதை  முடிக்கிறேன். 

கரோலின் ஏர்மஷல் போலவோ,  மேரி குயூரி  போலவே  நம் நாட்டில்  பேர்  சொல்லும்படி  ஒரு  விஞ்ஞானி  கூட  இல்லையே  ஏன்? 

இதற்கான  பதிலை  என்  அடுப்பறையில்  தேட  போகிறேன். நீங்களும் தேடுங்கள்  விடை  கிடைக்கலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: