31 ஜூலை, 2021

நூல் நயம் : சாயாவனம் - சா.கந்தசாமி

        #Reading_marathon_2021 
01/50

புத்தகம்: சாயாவனம்
ஆசிரியர்: சா.கந்தசாமி
வகை: நாவல்
பக்கங்கள்: 160
விலை: ₹160
பதிப்பகம்: நற்றிணை

பெருமதிப்பிற்குரிய சா. கந்தசாமியால், தனது 25 வயதிற்குள் எழுதப்பட்டு, மூன்று வருடங்கள் கழித்து 1968ல் வெளிவந்தது. நாவலின் சில குறிப்புகளின்படி, கதையின் காலகட்டம் 1900களின் நடுப்பகுதியிலிருந்து 1910களின் நடுப்பகுதிவரை. 

தஞ்சாவூர் மாவட்ட கிராமமொன்றில் சாயாவனம் என்ற பெயரிலிருக்கும் ஓரு ஆதிவனம்தான் களம். கதிரவனின் ஒளிக்கதிர்கள்கூட உள்நுழைய முடியாத வனம் என்று பொருள். மனித கால்தடம் படாத அவ்வனத்தின் முகப்பில் நின்று, அதை அழித்து நாகரிக மாற்றம் செய்யவிருக்கும் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஒருவனின் பார்வையில் தொடங்குகிறது கதை. 

"... வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒரு மடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. அதைத் தொடர்ந்து கழுத்தை முன்னே நீட்டியபடி ஒரு கொக்குக் கூட்டம். ஒரு தனி செம்போத்து. இரண்டு பச்சைக்கிளி கூட்டங்கள்." 

இயற்கைக்குள், அதொரு புனைவில் என்றாலுங்கூட, ஊடுரும் கணம் அலாதியான இதமளிக்கக்கூடியது. அதனால்தான், அது நம் கண்முன்னே ஒவ்வொரு இறகாய் உருவப்பட்டு, உயிரின் வெம்மை மிக நிதானமாய் நீங்கி குளிர்ந்தடங்குவது விவரிக்க முடியாத சஞ்சலத்தை கொடுக்கக்கூடியது. நூறு பக்கங்களுக்கு மேல், கிட்டத்தட்ட கதையின் மூன்றில் இரண்டு பாகத்திற்கு, சாயாவனக்காடு இழை இழையாய் பிடுங்கப்பட்டு கொளுத்தப்படுகிறது. தற்கால இயற்பியல் முன்னேற்றங்களை ஆதாரமாய்க் கொண்டியங்கும் ராட்சத எந்திரங்களால் அதை இன்றைக்கு இரண்டு பக்கங்களில் செய்துவிடலாம். அப்படியொரு அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம். 

கதையாடலானது கானகம் அழிப்பதை மட்டுமல்ல; அழித்தபின் முதற்காரியமாய் உட்புக இருவண்டியகலப் பாதையிடுவது, பிறகு அங்கொரு ஆலை அமைப்பது, அதற்கான குடியிருப்புகள் எழுப்புவது, இயந்திரங்களை உருட்டி வருவது, ஆலை உற்பத்தியின் முன்பின் தேவைக்காக காவிரியாற்றின் குறுக்கே மூங்கில் பாலம் நிர்மானிப்பது, பண்டமாற்றை பணமாற்றமாக்குவது, விவசாயநிலங்கள் உணவுப்பயிரிலிருந்து பணப்பயிரை விளைவித்துக் கொடுப்பது, மனிதத்தேவைகள் விஸ்தரித்து புதிய கடைகள் முளைத்தெழுவது, தொலைத்தொடர்பில் மனிதன் ஒரு கண்ணியாய் இணைக்கப்படுவது, இப்படி எல்லாக் கலாச்சார மாற்றமும் ஒரு கிராமத்தை 'வளர்த்தும்' வரலாற்றையல்லவா சா.க பெருங்கதையாடுகிறார்!

புனைவாயிருப்பினும், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தின் நவீன மாற்றத்தை குறியீடாகக் கொண்டு, விவரங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்தியிருப்பதற்காக இந்திய தேசமே சர்வநிச்சயமாக சா.க-விற்கு உளமார நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. 60களிலேயே, மூன்றாம் உலகத்திலிருந்து முதலுலகத்திற்கு இந்தியா வளர்ச்சி மாற்றம் அடைவதற்கான துவக்க காலத்திலேயே, சூழலியல் சிந்தனைகள் நமக்கிருந்தது என்பதன் சாட்சியாய் இந்நாவல் என்றும் நிற்கும். அதனாலும், ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலை, இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust of India) 'இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு' (Masterpiece of Indian Literature) என்று பத்திரப்படுத்தியுள்ளது. தன் எழுத்துத் திறமை கொண்டு, எதை எழுதவேண்டும், அதை எப்போது எழுத வேண்டும் என்ற அறிவில் இயங்கிய எழுத்தாளர், இலக்கியமும் இயற்கையும் இருக்கும் வரை நினைவு கூறப்படுவார். 

இந்நாவலை வாசித்துக்கொண்டிருந்த இரண்டாம் நாளில், எந்திரன் படத்தின் ஒரு பாடல் வரி காதில் விழுந்தது. இன்றுவரை என் சிந்தனையில் நிறைய திறப்புகளை செய்துகொண்டிருக்கிறது.

"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை"

வாசித்து முடித்து, க.சா-வை நினைவுகூர்ந்து, இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இன்று (ஜூலை 31, 2021) அவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள். கருவில் பிறந்த ஒன்று மரித்துவிட்டது. அது மரித்தபின் பூமி சூரியனையும் ஒருமுறை சுற்றிவிட்டது. ஆனால் அதன் அறிவில் பிறந்தது மரிக்கவேயில்லை. இப்பூமி சுழலும்வரை மரிக்கப்போவதுமில்லை.

இந்நூலின் தார்மீகச் செய்தியென்று நான் என்ன சொல்லி முடிக்க? 

இப்படியொரு ஃபேஸ்புக் பதிவிற்காக விரல் தட்டிக்கொண்டிருக்கும் எனது கைபேசியின் எல்.சி.டி கண்ணாடியிலிருந்து அதன் அடியுறை நெகிழிவரை ஏறக்குறைய அறுபது கனிமங்கள் இருப்பதை நானறிவேன். அதில் குறைந்தது ஏழாவது அபூர்வ நிலத் தனிமங்கள் (Rare Earth Elements) என்பதையும் அறிவேன். இப்பதிவை இடுவதற்குள் சிலமுறை ஸ்தம்பித்துச் செயல்படும் இகைபேசியை நான் மாற்றாமலிருக்கப் போவதில்லை. வருங்காலத்தில் என் பிள்ளைக்கு இன்னும் திறனான கைபேசியை நான் வாங்கிக் கொடுக்காமலிருக்கப் போவதில்லை. இக்கனிமங்களும், உலோகங்களும், எந்நாடுகளிலிருந்தும், எக்கடலுக்கடியிலிருந்தும் வருகின்றன என்பதும், அதை நோண்டியெடுக்க எத்தனை சிறுபிள்ளைகள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதும் ஓரளவு அறிவேன். அதனால் எத்தனை ஜீவராசிகள் என்னென்ன அசௌகரியங்களுக்கும் அழிவுக்கும் தள்ளப்படுகின்றன என்பதையும் சிந்திக்கிறேன். அந்நாடுகளிருந்து கந்தசாமிகள் இதுபற்றி இன்னும்பல மகத்தான நாவல்கள் எழுதி, அவை எனக்குத் தெரிந்த மொழியில் என்னைச்சேரும்போது அவற்றிற்கும் வாசிப்பனுபவங்கள் நான் இடக்கூடும்! ஆனால் அப்பதிவுகளையும் எப்படி முடித்துவைப்பேன்? என் பொருளாசையின் ஆதாரக் கம்பியிலிருந்தல்லவா இயற்கையழிவு எனும் பெருஞ்சுருதி மீட்டப்படுகிறது!  அதனால்தான் 'அழிக்கிறார்கள்' என்பதைக்காட்டிலும், 'அழிக்கிறேன்' என்று சொல்லி முடிக்க வேண்டியிருக்கிறது. 

என் போன்றோரின் பொருளின்பத்திற்காக மட்டுமல்ல, இன்னும்பல வலுவான காரணிகளாலும் சுரண்டப்படுகிற ஒரு 'ஸ்பெகட்டி பௌல்' (Spaghetti Bowl) குழப்பச் சுழற்சியிது; அல்லது டிஜிட்டல் தமிழில் இதொரு 'இடியாப்பச் சிக்கல்'. ஆனால் வேறு யாரையோ மட்டும் காரணம் சொல்லிச் சபித்து பதிவிட்டுத் தப்பியோட எங்கனம் என்னால் முடியும்!? பூமியழியும் பூகம்பவேளையில் மண்ணுக்கடியில் தலை புதைத்து காலால் வானம் பார்க்கும் ஏதோவொரு கோழியின் சாகசம் என் புத்திக்கு என்றும் கடவாதிருப்பதாக.

நன்றி :

Mr. Rajkumar Samiyappan Ponnusamy
வாசிப்பை நேசிப்போம்
முகநூல்

வேதனைச் செய்திகள்

தடுப்பூசிக்குப் பிறகு

ஆண் மலட்டுத்தன்மையும் பரிசோதனை கொரோனா தடுப்பூசியும்

Dr. கோ. பிரேமா MD(Hom),

தற்போது அவசர பயன்பாட்டில் உள்ள 7 கொரோனா பரிசோதனை தடுப்பூசிகளை தவிர்த்து முறையான பரிசோதனை 95+ கொரோனா தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து நடந்துவருகின்றது. 

செப்டம்பர் 2020 தொடங்கி இதுபற்றி கவனித்ததில், ஒருசில ஆய்வில் எலிகளில் தடுப்பூசிக்குப்பின் ஆண் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் தன்மை இருப்பது முதன்முதலாக பேசுபொருளானது. 
இதன் ஆதாரங்களை அப்போதே சில தடுப்பூசி ஆய்வியலாளர்கள் விசில்பிளோயராக வந்து வெளியிட்டனர். 
அந்த யூடியூப் வீடியோக்கள் பின் நீக்கப்பட்டதன.                    (கேலரியில் இருந்தால் தேடிப் பார்க்கிறேன். போட்டு வைப்போம். மக்கா சாவட்டும் 😜)

இதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை தடுப்பூசிகள் ஆண் மலட்டுத்தன்மை உண்டுபண்ணாது என்ற முடிவுகளை நோக்கி ஆய்வுகள் பல நடந்தன. 

இல்லை என்று நிரூபிக்க இவர்கள் பெருமுயற்சி எடுப்பதிலேயே தெரிந்து கொள்ளலாம் பிரச்சினை இருக்கிறது என. 

சமீபத்திய செய்தி ஒன்று பரவலாக பேசுபொருளானது‌.
பரிசோதனை தடுப்பூசி போட்ட பின்னர் தனக்கு விரைப்புத்தன்மை குறைந்து விட்டதாக ஒருவர் தைரியமாக வெளிப்படையாக பேச முன்வந்துள்ளார்‌. 

இவர் போல பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெளிப்படையாக பேச வேண்டும்‌.
ஏனெனில் ஆண்மை என்பதை, விரைப்புத்தன்மைக்கும் குழந்தைப்பேற்றோடும் சிக்கி வைத்திருக்கிறோம் நாம். பெண்மையைப்போலவே. 

இப்போ இச்செய்தி படித்த பிறகு..
எனக்கு என்ன டவுட்டுன்னா..
சிக்னல் கட்டாவும்னுதான சொன்னாவ..
இப்ப என்னடான்னா மொத்தமா பீயூஸே பிடுங்கிருச்சுனு சொல்றாவளே..
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே? 🤔

என்னமோ போங்க..

ஆனா இத மறந்திராதீய..
🌊 'தடுப்பூசி ஒன்றே பேராயுதம்' 🌊

பிகு: பரிசோதனை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அழுவாச்சி ஸ்மைலி போடலாம்.

நன்றி :

விகடன் இ-மேகஸீன்
மற்றும் 

சுற்றுச்சூழல் : குறுங்காடு அமைக்கும் பணி

வாவ்! படங்கள்


நன்றி :

சிரித்து வாழவேண்டும்!

கைவண்ணம், கலைவண்ணம்


நன்றி :

அருள்வாக்கு

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

ஆன்மீக சிந்தனைகள்

காலை நற்சிந்தனைகள்

இன்றைய குறள்

இயற்கையை நேசிப்போம்!

இனிய காலை வணக்கம்

30 ஜூலை, 2021

நூல் நயம் : கி.ரா.வின், "கிடை"

கிடை :
கி.ரா


எதார்த்த எழுத்தால் யாரையும் வசப்படுத்தும் வல்லமைபொருந்தியவர் கி.ரா
அவரின் எழுத்து"பட்டி"யிலிருந்து வெளிவந்து கரிசல் மணணை வளப்படுத்தியது "கிடை" எனும் குறு நாவல்
              கதையின் துவக்கமே அசல்பெயர் விடுத்து பட்டபெயருடன் பயணத்தை தொடங்கியது...ஆம் நுன்னுகொண்ட நாயக்கர் திருமாளிகை என்பது போய் ரெட்டகதவு நாயக்கர் வீடு என்றாக...
  
         பழைய செல்வந்தரின் வீட்டமைப்பை எழுத்தின் வழி கண்ணோட விட்டிருக்கிறார்.கதவை திரந்தவுடன் இருபுறமும் திண்ணை அதனருகில் மடக்கு கட்டில்,டானா கம்பு, முக்காலியும் அதன் வேலைப்பாடு என அவரின் செழிப்பான வாழ்வும். கையில் கம்பரகத்தி, வாக்கூடு பின்னுதல்,நாரில் கயிறு திரித்தல் என தன் ஓய்வு பொழுதிலும் உழைப்போடு பொருத்தியிருந்தார்

        இவர் பிராயத்தில் பெரிய கீதாரி எனவும் தற்போதய கீதாரி ராமசுப்பு நாயக்கர் எனவும் கூறி

           இரு கீதாரியின் சந்திப்பு கதையில் நிகழ்ந்ததையும், முடிவையும் தீர்மானிக்கிறது

           கி.ரா கதையின் மூலம் அக்கால கட்டுகதைகள் குறிப்பாக பேய்கதைகள் தைரியம் பொருந்திய திருடர்களே கிளப்பி விடப்பட்டதாக அறியமுடிகிறது....அக்கதைகள் இன்னும் நிசமென நம்பப்படுவது வியப்பாகவும் அவை பரிணாம அடைந்துள்ளது சினிமாக்களில் காண முடிகிறது. கிடையில் வரும் பொன்னுசாமி நாயக்கர் -கம்மம்மாள் பலே கதைகட்டிகள்(திருட்டுக்காக)

        வர்ணங்களையும் கிடையையும் ஆடுகளையும்  அதை மேய்ப்பவரகளையும், ஆட்டின் வகைகளையும்,தொழிலில் பிரிக்கும் பாகங்களையும் தானும் மூத்த கீதாரிபோல கி.ரா விவரிக்கிறார்.....
       
        அப்பாவி பாமர மக்களின் உழைப்பின் ஊடே தாங்கள் அதிகம் நம்புவது கடவுளையும் அதிஷ்டத்தையுமே , அவ்வாறே கதையில் வரும் கிட்ணகோனாரும் அவரது கொச்சை ஆடும்..இதுவே தன் மொய்க்கு (21ஆடு) காரணம் என நம்புகிறார்...அதேபோல பச்சை போர்வை கோபால் நாய்க்கரும் ,ராமகோனாரின் முருக வழிபாடுமாகும்......
          
           கிடை ஆடுகள் பருத்திகாட்டில் அழிமான செய்ததால் ஏற்பட்ட கிடை மறிப்பும் அதன்பின் ஊரார் கூட்டமும், ஊர்க்கூட்டத்தின் விசாரணை ,மூவர் குழு அமைப்பு இதனூடே குறி கேட்டல், மக்களின் அழிமான குறித்த கருத்தோட்டம், வழக்கம்போல் விசாரணை குழு உண்மைக்கு புறம்பான மக்கள் விரும்பும் அறிக்கை சமர்ப்பிப்பு  என தற்கால அரசியலை அப்பவே காட்சிபடுத்தியிருக்கிறார்....

           இங்கும்  ஒரு காதல் மறைக்கப்படுகிறது.இம்முறை ஆண் உயர்சாதி பெண் கீழ்சாதி என்பதே மாறுதலான விசயம்

               தலைவிரிகோளமாக ஓடி வரும் ராக்கம்மா தன் காடு கிடை ஆடுகளால அழிக்கப்பட்டது என ஊரை கூட்டுகிறாள்.பின்னர் ஊர்கூட்டம் விசாரணை குழு அமைக்கிறது..இதில் திறமையான விசாரணை அதிகாரி திம்மைய்யா நாயக்கர்....தான் எதையும் துப்பு துலக்கவள்ளலவர்..ஒருகண் தெரியாது என்பது குறையல்ல இவருக்கு
              
           இவரை காட்சிபடுத்திய பாங்கும் ,தடையங்களை சேகரிக்கும் விதமும் இவரது மனவோட்டமும் போன்றவற்றை எழுதிய கி.ரா விடமிருந்த பல கிரைம் நாவல் எழுத்தாளரும் சினிமா இயக்குனர்களும தற்போது எழுத்தை களவாடியது போல் தோன்றுகிறது.....
      
        திம்மைய்யா விசாரணையில் கண்டறிந்ததவர்கள் குற்றவாளிகள் மட்டுமல்ல காதலர்கள் என்று (என்னால் ஏற்க முடியவில்லை).......அதற்கு ஆதாரமாக வளையல்கள் முள்வாங்கி என தடையங்களையும் சேகரித்தார்.....

       இதனூடே அழிமான பற்றிய ஊரார் பார்வை பல விதமாக ஓடியது...ஆடு மேய்ப்பவர்களை மக்கள் தரம்பிரித்தனர்.. ராமக்கோனார் ஆடுமேய்ப்பின் நேர்மையும் பாராட்டிய மக்கள்...பொன்னுச்சாமி நாய்க்கரின் அழிமானத்தையும் கூறி மக்கள் சந்தேகித்தனர்......

        மக்கள் சந்தேகத்திற்கேற்றார்போல் குறிகேட்டு வந்த குழு பொன்னுச்சாமி நாயக்கரை குற்றவாளி என்றபோது ஊராரை வாயையும் வார்த்தையையும் அவரால் மிஞ்சமுடியவில்லை....

                  ஆனால் திம்மையா நாயக்கரும், தற்போதய கிதாரி ராமசுப்பு நாயக்கரும் அறிவர் பெரிய கீதாரி நுன்னுகொண்ட பேரன் எல்லப்பன் மற்றும் செவனி என்று.....

        எல்லப்பன்-செவனி(பூப்பெய்தாதவள்) அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம்  அறிந்து எல்லப்பனுக்கு திருமண நிச்சயிக்கப்படுகிறது...எல்லப்பன் நினைப்போடு செல்லும் செவனி காட்டில் பெரியவளாகிறாள் ....எல்லப்பன் நினைவில் பித்து கொள்கிறாள்......பெற்றோர் பேய் பிடித்ததாக கோடாங்கி கொண்டுவந்து உடுக்கெடுத்து அடிக்கிறார்கள்.....வேதனையுடன் செவனி பாடுகிறாள் தன் கதையை
              என முடிக்கிறார் கி.ரா

(ஒருவேளை இப்படி பாடிருப்பாளோ செவனி

         வர்ணங்கள் மனிதனில் மட்டுமல்ல ஆட்டிலும் உள்ளன ,ஆட்டினை ஏற்கும் மனிதன் ..... ஏன் சக மனிதனை மனிதன் ஏற்பதில்ல.....
         
                 கருப்பசாமி   
                 கோமதிபாண்டியன்

நன்றி :

நலம்தரும் முத்திரைகள் : சேபன முத்திரை

சிரிக்கவும் சிந்திக்கவும்

வாவ்! படங்கள்

சிரிப்புத்தான் வருகுதையா!

பக்திப் பாமாலை

அருள்வாக்கு

நலக்குறிப்புகள்

இன்றைய குறள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :

இனிய காலை வணக்கம்!

29 ஜூலை, 2021

ஆன்மீக சிந்தனைகள்

சிவ சிந்தனைகள் :-

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்….
அனுமன்

33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்….
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்

38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது. 🙏.

நன்றி :

அருள்வாக்கு

குட்டிக்கதை

ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். 

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

 ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

 சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

 கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
மீண்டும் ஒரு நல்ல கருத்துடன் சந்திப்போம்.

படித்ததில் பிடித்தது

நலம்தரும் முத்திரைகள் : தாரணசக்தி முத்திரை

நலக்குறிப்புகள் : வெள்ளை பூசணிச்சாறு

சிரிப்புத்தான் வருகுதையா

இன்றைய குறள்

காலை நற்சிந்தனைகள்

இயற்கையை நேசிப்போம் !

இனிய காலை வணக்கம்!

28 ஜூலை, 2021

அந்த நாள் நினைவுகள் : பழைய சென்னை


‘அல்வா வேண்டும்’ என்று கேட்டால், அவர் மிகப்பெரிய பணக்காரர் என அர்த்தம்... அனைவரும் அவரையே பார்ப்பார்கள்... அந்தக் கால 'ஆஹா ஓஹோ' சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்த சென்னை!

'மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னை என அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப் பேசப்பட்டு வரும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பல உண்டு நமது தருமமிகு சென்னையில்! அன்றைய சென்னை நகரம் இன்றைய அளவை விட மிகவும் சிறியது. இன்று பிரபலமாக விளங்கும் பல பகுதிகள், அன்று காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்திருக்கின்றது.

உணவு விடுதிகள் பெரும்பாலும் ‘டவுன்’ என்று அழைக்கப்படும் வடசென்னைப் பகுதியில்தான் இருந்தன. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த நாளில் கல்லூரிகள், ஆபீஸ்கள், நீதிமன்றங்கள் எல்லாம் இந்த ‘டவுன்’ பகுதியில்தான் இருந்தன. 

பெரும்பாலான விடுதிகளின் வாசலில் ‘பிராமணாள் காபி ஓட்டல்’ பலகைகள் தொங்கும். இந்த வழக்கம் 1950-வரை நீடித்திருந்தது!

தங்கசாலைத் தெருவில் ‘காசி பாட்டி ஓட்டல்' என்று ஒரு ஓட்டல் இருந்தது. காசிக்குச் சென்று வந்த ஒரு பிராமண அம்மையார், போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்குமென்று இந்த உணவு விடுதியைத் தொடங்கினார். அவருடைய சமையல் சுவையாக இருந்ததால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த நாளில் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் ‘தாங்கள் செய்வது வியாபாரமல்ல… அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள். ‘லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள். அதனால்தான் அந்த நாளில் ‘அளவுச்சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது. காசி பாட்டி ஓட்டலில் எடுப்புச் சாப்பாட்டின் விலை இரண்டணா. நெய் தாராளமாகவே பரிமாறப்படும்.

அன்றைய ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம், இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டது. அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் கூட்டம் மிகவும் அதிகம். அவர்களை நம்பி நடத்தப்பட்ட உணவு விடுதிகள் பல உண்டு.

தம்புச்செட்டித் தெருவில் இப்படிப்பட்ட உணவு விடுதிகள், தஞ்சாவூர், உடுப்பி, பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் கைகளில்தான்  இருந்தன. தம்புச்செட்டித் தெருவில் ‘மனோரமா லஞ்ச் ஹோம்’  ஏ.நாராயணஸ்வாமி ஐயர் என்பவரால் 1920-இல் தொடங்கப்பட்டது. இங்கு அனைத்துமே நெய்யில்தான் செய்யப்படும்.

வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்தத் தெருவில் ஒரு கேன்டீனைத் தொடங்கினர். இந்த விடுதியில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான். இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி, போண்டா, வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்று விடுவார்கள். ‘தம்புச்செட்டித் தெருவில் சிற்றுண்டி உணவகம் வைத்தால் லாபம் தரும்’ என்றொரு நம்பிக்கை பலரை இந்தத் தெருவுக்கு அழைத்தது. இந்த நாளில் ‘சரித்திரம் படைத்த ஓட்டல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ‘தாசப்பிரகாஷ்’ புகழ் கே.சீதாராமராவ் இங்குதான் வளரத் தொடங்கினார்.

சீதாராமராவ் இந்தத் தெருவில் ஒரு லாட்ஜையும் கட்டினார். அது மட்டுமல்ல… தனது பணியாளர்களை சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன் போன்ற இடங்களுக்கு அனுப்பி, சென்னைக்கு வரும் ரயில் பயணிகளைத் தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்வார். இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ‘மசாலா தோசை’யைச் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். நெய்யில் செய்யப்பட்டு, ‘மைசூர் மசாலா தோசை’ என்று அழைக்கப்பட்ட இதன் விலை அரையணா. 

அன்று ஓர் இந்திய ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு நாலு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே, வயிறு நிறையச் சாப்பிடலாம். ‘மைசூர் போண்டா’ என்று அன்றுபோல இன்றும் அழைக்கப்படும் இந்தச் சுவையான சிற்றுண்டியைச் சென்னைக்குக் கொண்டு வந்தவரும் சீதாராமராவ்தான்.

உடுப்பி சமையல் முறையில் சாம்பார், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள். இதற்குத் தனியான சுவை உண்டு. இரண்டு இட்லிக்கு இரண்டு பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்களும் அந்த நாளிலும் உண்டு. ‘நான் இரண்டு இட்லி, இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி’ என்று சொல்லிப் பெருமைப்படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர்.

‘பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையிலும் பிரபலமான உணவகங்கள் இருந்தன. இந்தத் தொழிலில் முன்னோடியாகக் கருதப்படும் சங்கர ஐயர், இங்கு ‘சங்கர் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த இடத்தில்தான் பின்னாளில் ‘அம்பீஸ் கபே’ இயங்கத் தொடங்கியது.

இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம் ‘கராச்சி கபே’. இதைத் தொடங்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான கிஷன்சந்த்ஸ்-செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் சிந்திக்காரர்கள். கராச்சியிலிருந்து வந்தவர்கள். 

இது, ஹை-கோர்ட்டுக்கு எதிரில், இன்றைய பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே இருந்தது. சென்னை நகரத்திலேயே முதன்முறையாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை அந்த நாளில் சரித்திரம் படைத்தது. இந்த உணவகத்தின் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு. ‘உள்ளே போனா குளிருமாமே” என்று மூக்கின்மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின் ‘கராச்சி அல்வா’ அன்று மிகப் பிரபலம். 

அந்த நாளில் இனிப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். காசி அல்வா, டெல்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா… இப்படிப் பல! இவற்றின் விலை இரண்டணாதான்.பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. அதன் விலை மூனணா.

‘இந்த அல்வா வேண்டும்’ என்று ஒருவர் கேட்டால், அவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம். எல்லோரும் அவரையே பார்ப்பார்கள். பாதாம் அல்வா என்றால், உடனே மனதில் பளிச்செனத் தோன்றுவது, ‘கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்’தான். மிகப் பிரபலமான இந்த உணவகம் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் (பாரதியார் சாலை) இருந்தது. 

இதன் உள்ளே சென்றால், படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு வக்கீல்கள், எழுத்தாளர்கள், சினிமாவுலகப் பிரமுகர்கள் அன்றைய சென்னை நகரத்தின் பல பிரபலங்களை அடிக்கடிப் பார்க்கலாம். சரித்திரம் படைத்த எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களும் இங்கு வருவதுண்டு. பாதாம் அல்வாவைச் சாப்பிடுவதற்கென்றே சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருவார்கள்.

அதுபோலவே, மயிலாப்பூரில் ‘ராயர் ஓட்டல்’ மிகவும் பிரபலம். ‘இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்களும் ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். இதில் சினிமாக்காரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர், ஜெமினி கணேசன்! 

அதுபோலவே, தங்கசாலைத் தெருவில் ‘சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது. இந்த உணவகம் மாலை 7 மணிக்குத் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும். இங்கு விசேஷம் என்ன ஈன்றால், பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பார்கள். உருளைக்கிழங்கு கறி வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாசந்திதான் வரும். இங்கு பூரி – பாசந்தி சாப்பிடுவதற்காக மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள். 

உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமல்லாமல், பணத்தையும் வாரிக் கொடுத்தது. பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராம் ராவ் ஆகியோர்.

ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக அந்த நாளில் பரபரப்பாகப் பேசுவார்கள். அதே அளவில் வளர்ந்தவர், உடுப்பியைச் சேர்ந்த கே.கிருஷ்ணாராவ். 

இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான். இட்லி மாவு அரைக்கும் சாதாரண தொழிலாளியாகச் சென்னைக்கு வந்தவர். மவுண்ட் ரோடு பகுதியில் ‘உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர். 

சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார். இது, இன்றைய அளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.

தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் உணவகம் இருந்தது. அங்கு சாப்பாடு பிரபலம். தரையில் உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிட வேண்டும். மேஜை, நாற்காலி எல்லாம் கிடையாது. இங்கு என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு காய் கிடைக்கும். 

கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய்கறிகள் உடனே தீர்ந்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் என்றால், அரைமணி நேரம் கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும். அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் கிடைக்கும். பலர் டிக்கெட் வாங்குவதற்கு முன்பு, ‘இப்ப என்னய்யா பொரியல்?’ என்று கேட்டு வாங்குவார்கள். அவ்வளவு பிரபலம் இந்த வெங்கட்ராம ஐயர் ஓட்டல்.

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற கால கட்டத்தில், ‘ஜப்பான்காரர்கள் சென்னையில் அணுகுண்டு போட்டு விடுவார்கள்’ என்ற பயத்தினால் நகரமே காலியானது. கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. 

இந்த குண்டு பயத்தினால், டவுன் பகுதியில் பல உணவகங்கள் மூடப்பட்டன. அந்தப் பயம் நீங்கிய பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், தொடங்கப்படாமலே மறைந்தது ‘கராச்சி கபே’!      

நன்றி :        ‌ ‌     
அவள் கிச்சன்
😏😏❣️😏😏❣️😏❣️😏❣️

இன்று சில தகவல்கள் : தஞ்சைப் பெரிய கோவிலும் தலையாட்டி பொம்மையும்

உடல் கால அட்டவணை