"உள்ளம் துறந்தவன்."
சுஜாதா எழுதியது .விசா பப்ளிகேஷன்ஸ் . முதல் பதிப்பு 2005 .மூன்றாம் பதிப்பு 2009 .விலை ரூபாய் 75 . மொத்த பக்கங்கள் 144.
உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது .படித்த நினைவு எனக்கு இல்லை .ஆனால் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
உள்ளம் துறந்தவனில் இதய மாற்று சிகிச்சை தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை .மாற்றுவதற்கான சூழ்நிலையும் காதலும் அதைச் சார்ந்த இழப்ப்பும் தான் கதைக்கு வலுவூட்டுவது.
அழகேசனின் தாயைப் போல மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.
.
மஞ்சரி கதாநாயகி ;அழகேசன் கதாநாயகன் . கதாநாயகனின் அறிமுகமும் கதாநாயகியின் அறிமுகமும் அவர்கள் இருவரின் பாத்திரத் செறிவும் வித்தியாசமாக உள்ளது..
அழகேசனின் அறிவும் புத்திசாலித்தனமும் சூழலுக்கேற்ற பேச்சும் நகைச்சுவைத் தன்மையும் அறிவாற்றலும் திறம்பட செயல்படும் ஆசைப்படும் நிலைப்பாடு எனது இளமைக்கால நண்பன் ஒருவனை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது .அவனுக்கு இன்னும் மரணம் வாய்க்கவில்லை என்றாலும் மனதில் நினைவு கொள்ளத்தக்க அளவிலே இரண்டும் ஒத்துப் போவதை என்னால் ஆச்சரியத்தோடு பார்க்க முடிகிறது.
ராகவேந்தர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் .இந்தியாவிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது பணக்காரர் .அவருக்கு இரண்டு பெண்களும் ஒரு வளர்ப்பு மகள் மஞ்சரியும் இருக்கின்றார்கள் .முதல் மாப்பிள்ளை அமெரிக்காவில் இருதய சிகிச்சை நிபுணராக இருக்கிறார் .அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் கோயம்புத்தூரில் இருக்கிறார் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் .வேலை வெட்டி இல்லாமல் மாமனார் சொத்திலேயே காலங்கள் கழிப்பவர்.
ராகவேந்தர் லண்டன் சென்ற பொழுது இருதயம் மிகவும் பாதிக்கப்பட்டது .அமெரிக்க மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது .
இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் தனது மாமனாரின் தலைமைத்துவத்திற்கு வர ஆசைப்பட்டு காரியங்கள் செய்கிறான்.
மஞ்சரி அழகேசன் காதலை அறிந்து கொண்டு அவர்களை பிரிக்கவும் , தனது மகனை மணம் முடிக்கவும் நினைக்கின்ற நாகரத்தினம் மாமனாருக்கு மாற்று இருதயம் தேவைப்படவே அழகேசனை விபத்தின் மூலமாக கொன்றுவிட்டு முதல் மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது .
இவற்றை பின்னர் அறிந்து கொண்ட மஞ்சரி சதியை அம்பலப்படுத்தி எல்லோரையும் சிறைக்கு அனுப்புகிறார் .
இறந்துவிட்ட அழகேசன் தாயாருக்கு பக்கபலமாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மஞ்சரி போயிருக்கிறார் .
தொலைக்காட்சியில் எல்லாரும் சிறை படுத்தப்பட்ட செய்தி கண்டு தனது வளர்ப்புத் தந்தையை காணச் செல்கிறாள் ;தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள் .
இறுதியாக அழகேசன் இருதயம் ராகவேந்திராருக்கும்,கண்கள் வேறு ஒருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் சிறுநீரகம் இருவருக்கும் அளிக்கப்பட்டு எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
கதை முடிவில் அழகேசன் அம்மா மிகவும் தைரியத்தோடு யாருமே நெருங்கமுடியாத மலை போல் இருந்த ராகவேந்திரரின் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்கிறாள் .
அவரும் சம்மதிக்கவே அவரின் இதயத்தை ,மார்பைத்தொட்டு பார்த்து மார்பில் சாய்ந்து மகனின் இதய ஓசையை கேட்டதாக கதை முடிகிறது.
####₹₹₹₹
விஞ்ஞானபூர்வமாக மருத்துவ இயல் சம்பந்தமான அறிவியல் நுட்பத்தோடு கதை எழுதப்பட்டுள்ளது. கிரிமினல் சம்பந்தமாகவும் கதை சொல்கிறது.
புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்க விடாமல் கதை நம்மை படிக்கச் செய்கிறது.
உள்ளம் துறந்தவன் என்கிற தலைப்பு தான் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது .உள்ளம் என்றால் இருதயம் ;எப்படி தொலைந்தவன் ஆவான். பறிக்கப்பட்டவன் தானே என்கிற எண்ணம் எனக்கு கதையைப் படிக்கும்போது ஓடிக்கொண்டு இருந்தது .எல்லாம் அறிந்த சுஜாதா சரியான தலைப்பு தான் வைத்திருப்பார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
அழகேசன் இயற்றி நடித்த கொடி ஆலன் கூறுவதாக ஒரு வாக்கியம் வரும் .அதை நினைத்து நினைத்து சிந்திக்கவேண்டிய ஒரு வாக்கியம்,
"I don't want to achieve immortality through my work .
I want to achieve immortality by living forever"
####
அழகேசன் உதித்த சில ஹைக்கூக்கள்.
1) கடற்கரையில் திரும்பிப் பார்த்தால்
என் கால் பதிவுகளை
காணவில்லை.
2)கோடை காலத்தில்
குதிரை மணலில் இறங்கி
ஆற்றை கடக்கிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக