15 செப்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1254

திருமந்திரம் - பாடல் #1254: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அம்மையு மத்தனு மன்புற்ற தல்லது
அம்மையு மத்தனு மாரறிவா ரென்னை
அம்மையொ டத்தனும் யானு முடனிருந்
தம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

விளக்கம்:

பாடல் #1253 இல் உள்ளபடி எமது உடலாகவே மாறி எமக்குள் அமர்ந்திருக்கும் இறைவியும் பாடல் #1252 இல் உள்ளபடி எம்மோடு ஏகாந்தத்தில் தனித்து இருக்கும் இறைவனும் எம்மீது பேரன்பு கொண்டதைத் தவிர வேறு எவருமே எம்மை முழுவதுமாக அறிந்து கொண்டது இல்லை. எமக்குள் இருக்கும் இறைவியோடு இறைவனும் சேர்ந்து இருக்க அவர்களோடு யானும் சேர்ந்து இருந்து இறைவியோடு இறைவனையும் முழுவதுமாக யான் புரிந்து கொண்டேன்.

நன்றி :

கருத்துகள் இல்லை: