11 செப்., 2021

நூல் நயம் : அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

#அம்மா_வந்தாள்_தி_ஜா

 அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்

"சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால் அன்றுதான் என்றும் இல்லாத திருநாளாக புத்தகத்தின் மேல் வருகிற ஆசை, கீழே கிடைக்கின்ற பல்பொடி மடித்தகின்ற  காகிதத்தையாவது எடுத்துப் படித்துவிட வேண்டும் என்ற மோகம். அப்படியொரு மோகமல்லவாப் பிறந்திருக்கிறது இந்த காவேரி மேல்" என துவங்குகிறது இந்த நதியின் பயணம். 

அம்மா வந்தாள் ஒவ்வொருவரின் பார்வைக்கு வெவ்வேறு அர்த்தங்களையும் புரிதல்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். 
தி.ஜா.வின் முக்கிய படைப்புகள் பல, 
அதில் மனதளவிலும், நம் சமுகத்தின் சூழ்நிலைகளை புரியவைக்கும் படைப்புகள் சில. 

மோகமுள், அம்மா வந்தால், நளபாகம் போன்ற படைப்புகளில் தனது எழுத்தின் மூலம் இவ்வுலகையே திருப்பி பார்க்க வைக்கின்றது.  நாம் வாழும் சூழலை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கிறது. 

அலங்காரம், தண்டபாணி, கிருஷ்ணன், கோபு, வேம்பு, காவேரி, அப்பு, பவானியம்மாள், இந்து, வண்டிகாரன் தாந்தோணி என  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான சமூக பார்வையைக் கொண்டு அணுகும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறார் தி.ஜா.

மூன்று பெரிய அத்தியாயங்கள், அதற்கு சிறு பகுப்புகள். காவேரிக்கரை கிராமமான சித்தன் குளத்திலிருந்து சென்னை சென்று மீண்டும் கிராமத்துக்கே திரும்பும் கதையோட்டம். மூன்று அத்தியாயங்களிலும் முன்னும், பின்னும் அலைவுறும் காலம். 

ஹைகோர்ட் ஜார்ஜையும், கல்லூரி பிரின்ஸ்பலையும், பேங்க் சார்மனையும் தன் சொல்லுக்குப் பணிந்தவர்களாக அறிவால் அதிகாரம் செய்ய முடிந்த தண்டபாணியால் அலங்காரத்தை ஆளமுடியவில்லை. அலங்காரம் அவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

அலங்காரத்திற்கு அப்புவின் மேல் இருக்கும் பாசமும்,  அக்கறையுமே அலங்காரத்தை அலங்காரம் இல்லாமல் ஒரு பிறந்த குழந்தை போல் தண்டபாணியின் முன் சரணடைய செய்தது. 

அப்புவிற்கும், இந்துவிற்கும் இருக்கும் காதல் வேறொரு கோணத்தை எடுத்துக்காட்டுகிறது. சிறுவயது முதலே இந்து அப்புவை தன் மனதில் வைத்து  தரிசிக்கிறாள்.
தங்கை, பவானியம்மாள், அம்மா போல் என அப்பு விலகி விலகி செல்கிறான். 

கடைசியில் இந்துவின் அன்பிற்கே  இவனும் தன்னை சமர்ப்பிப்பது கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. 

பாவம் செய்துவிட்டதாக நினைக்கும் அலங்காரம் அப்புவை வேதம் கற்பிக்க  அனுப்புகிறாள். 
16 வருடம் கழித்து அப்பு வேதத்தை மட்டுமே கற்றவனாக தன் அம்மாவிடம் செல்ல தயாராகிறான். 
அவன் செல்வதற்கு தாயாராக இருக்கும் சமயத்தில் இந்துவின் சொற்களால் அவன் தாக்கப்படுகிறான்.  அவன் சென்னை சென்றவுடன் இந்துவின் வார்த்தை உண்மையை உணர்கிறான். 
இந்துவை ஏற்கிறான். 

பவானியம்மாளின் பாசம் அப்புவை ஒரு உந்துதலுக்கு தள்ளும் சூழல் கதையின் இன்னொரு பக்கத்தை வெளிகொணர்கிறது. 

வழக்கம் போல் நடக்கும் வாடிக்கையான விஷயங்களில் ஒன்றாக சிவசு வந்து செல்கின்றார். 
அவன் அம்மாவிடம் இருந்த சமயத்தில் அவனது சகோதரர்கள், தங்கைகளுக்கு அம்மாவை பிடிக்கவில்லை என அறிந்து கொள்கிறான். 

அவன் அக்காவின் வார்த்தைகள் அவனை மேலும் வருத்தப்பட வைக்கிறது. 
("கடைசியா பெத்த மூனும் தான் அவ மனசோட பெத்தது".) 

இந்த நாவலின் பார்வையை தண்டபாணியை கொண்டு ஓர் காவியமாக வடிவமைக்கிறார் தி.ஜா.("அலங்காரம் என்று பெயர் வைத்தார்களே சரியாக - லக்ஷ்மி, சரஸ்வதி, விசாலம், கௌரி, சங்கரி என்று இத்தனை பெயர்கள் விட்டுவிட்டு அலங்காரமாம் அலங்காரம்.  தே* க்கு வைக்கிறார் போல") என தண்டபாணியின் மனதின் மூலம் அவரை வெளிப்படுத்துகிறார். 

எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது உணர்ச்சிகளையும், கேள்விகளையும் உண்டுபண்ணும் படைப்புபாக பார்க்கப்படும் அம்மா வந்தாள் தி.ஜாவின் சிறப்புகளை  வாரிவழங்குகிறது. 

வாசிப்போம்....வாசிப்பை நேசிப்போம்......❤

#யோகேஷ்_பு
09.09.2021

நன்றி :

கருத்துகள் இல்லை: