31 ஆக., 2018

நலக்குறிப்புகள்-124: நலமான வாழ்விற்கு கடைப்பிடிக்க வேண்டியவை-30

நலமான வாழ்விற்கு கடைப்பிடிக்க
வேண்டியவை-30:

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*

*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்...

ஒரு வரி உண்மைகள்-14: திருமணம்

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது!

சிரித்து வாழவேண்டும்-20:

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!
எவ்வளவு அதிகாரங்கள்.

ஆன்மீக சிந்தனை-90: இல்லாததை எப்படி எடுப்பது? இருப்பதை எப்படி கொடுப்பது?

💛 ரமண மகரிஷியிடம் பால் ப்ரிண்டன் ஒரு கேள்வி கேட்டார்

உலகில் நிறைய குருமார்கள் இருகிறார்கள்

இவர்களில் யாரை நான் சிறந்த குருவாக ஏற்பது என்று

அதற்கு ரமணர் கூறிய பதில்.....

"யார் உன்னிடம் இல்லாததை வெளியில் எடுக்கிறாரோ,

இருப்பதை உனக்கு கொடுப்பவரோ அவரே சிறந்த குரு என்று கூறினார்."

இல்லாததை எப்படி எடுப்பது.....???

இருப்பதை எப்படி கொடுப்பது.....???

எது இல்லாதது......???

நான் என்ற உணர்வும்,

எனது உடமைகளும்....

எது இருப்பது.....???

என்னுள் இருக்கும் இறைநிலையை உணர்த்துவது என்பதாகும்

ஆனால்

நாம் அனைவரும்

இந்த உடல் தான் நான் என்றும்,

இறைநிலையை வெளியில் தேடிக்கொண்டும் இருக்கிறோம்

இந்த நிலையை யார் உணர்த்துகிறாரோ

அவரையே நம் குருவாக ஏற்போம் ....

இன்று ஒரு தகவல்-80: ஒட்டகப்பால்

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால்.

இன்றைய சிந்தனைக்கு-226: உடலின் மொழி

உடலின் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-14:

🌾 பள்ளி சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது.

🌾 அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

🌾ஐந்து மாணவிகளும் *ஸெஸ்* எனப்படும் *புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில்* விதைத்தனர்.

🌾 *தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர்*.

🌾 *மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர்.*

👉இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.

🌾இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் *ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி* ஆகியவற்றை அளித்தனர்.

🌾12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர்.

🌾 *சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.*

🌾 *வைஃபை கருவி உள்ள அறையில்* *வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள்* *வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன*.

🌾 இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

🌾இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

🌾ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், *"இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்*.

🌾 இதுபற்றி மாணவிகள் கூறியது,
"எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

🌾சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது.

இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

🌾தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் *செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்*.

🌾 வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள்.

தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.

சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!

*அன்புடன்: சங்கீதா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர். சேலம்.

குட்டிக்கதை-7: ஞானச்சிறுவன்

ஒரு உண்மைக் கதை

தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _
தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் -

அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது -

கிறிஸ்த்துவப் பாதிரியார் ஒருவர் மெகா போனை வைத்துக் கொண்டு மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் -

அந்தப் பிரசங்கத்தில் இந்து மதக் கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக -
"ஏ.,.மானிடர்களே, நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல், உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல், நீங்கள் வணங்கும் கடவுள் அதுவும் கல்," -
"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் " -

அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை -

என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார் -

இடையில புகுந்த அந்தச் சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி _

"எனக்கொரு சந்தேகம், கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்க -

அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இந்தச் சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான், நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகி உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார் -

சிறுவன் கேட்டான் -

நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்? -

" தங்கை என்போம், தமக்கை என்போம், சகோதரி என்போம் - என்றார் பாதிரியார்_

"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்?" _

"தாய் என்போம், அன்னை என்போம், அம்மா என்போம்" -

"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை?" -

"மனைவி என்போம், துணைவி என்போம், இல்லத்தரசி என்போம்" -

இந்த மூன்று உறவும் உங்களுக்கு இருககிறதா?--

"தெரிந்துதான் கேட்கிறாயா? சிறுவனே _
தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது -
என்ககுத் தாயும், இருக்கிறார் மனைவியும், இருக்கிறார் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார் -

"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா?" என்று அந்தச் சிறுவன் கேட்டான் -

பாதிரியார் "ஆமாம்" என்றதும் -

"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய் தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும் வித்தியாசமும் இருக்கிறதா? இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா?" என்றதும் -

மெகா போன் கீழே விழுகிறது,
பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது -
கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர் -

பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் முன் வந்து -
"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை, என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது", -

"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின் ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல -

"பிற மதத்தைக் குறை சொல்லி உங்கள் மதத்தை வளர்க்கப் பார்க்காதீர்கள்" -

உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள் -
பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும் அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள் -
மேலும், எல்லா மதத்திலும் மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன் -

ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில் அவர் படித்தது?-
இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக் கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும் -

அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல -

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான்

30 ஆக., 2018

குட்டிக்கதை-6: அன்பு என்றால் இதுதான்

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-

நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,

“அன்பு என்றால் இது தான்"

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!

அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!

கொண்டு செல்ல எதுவுமில்லை கொடுத்துச் செல்வோம் உண்மையான அன்பை.    
                 *மகிழ்ச்சி* 💐💐💐

இன்று ஒரு தகவல்-79: ஆண்டிக்கோலம் ஏன்?

வீட்டுக் குறிப்புகள்-13:

வெந்தயத்தை வறுத்துப் பொடிசெய்து வைத்துக் கொள்ளவேண்டும். அதை வேண்டும்போது இரண்டு டீஸ்பூன் தோசைமாவில் கலந்து வார்த்தால் தோசை சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

இன்றைய சிந்தனைக்கு-225:

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல. ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பதுபோல.

ஒரு வரி உண்மைகள்-13:

நாம் இறந்த பின்னும் நமது கண்கள் ஆறு மணி நேரம் வரை பார்க்கும் தன்மை கொண்டது.

ஆன்மீக சிந்தனை-89:

அன்பு எனும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி எனும் சந்தனம் தெளித்து, கருணை எனும் விளக்கை ஏற்றி வையுங்கள். 'மனித வடிவில் தெய்வம்' என்று உலகம் உங்களைப் புகழும்.

திருமுருக கிருபானந்த வாரியார்

நன்றி: தினமலர் ஆன்மீக மலர்

சிரித்து வாழவேண்டும்-19:

கடவுள் கிட்டயும், டாக்டர் கிட்டயும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷன் ஆனா நோய் வரவச்சு டாக்டர் கிட்ட அனுப்பிடுவார்.

டாக்டர் டென்ஷன் ஆனா கடவுள் கிட்ட அனுப்பிடுவார்.

நலக்குறிப்புகள்-123: சுவாசக் கோளாறுகளுக்கு மிகச்

வைட்டமின் ஈ நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கும்.

வைட்டமின் சி ஆஸ்துமா நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட். 
அது நுரையீரல் செயல்திறனை அதிகரித்து மூச்சுத் திணறல், சைனஸ் பிரச்சினை, பிராங்கைடிஸ் போன்றவற்றிலிருந்து காக்க வல்லது.

வைட்டமின் டி  சுவாசத் தொற்று நோய்களிலிருந்து காக்க வல்லது.

மக்கள் கேள்வி-1: ஹெல்மெட்டும் சாலையும்

29 ஆக., 2018

மக்களின் ஏக்கம்

ஹெல்மெட் போடாதவர்களுக்கு தண்டனை:

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது உயர்நீதி மன்றம்.

அதைபோல் இதுபோன்ற சாலைகளை அமைத்தவர்களுக்கும் தண்டனை வழங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

ஆரோக்கிய உண்மைகள்-2: ஆரோக்கியமான சந்திகளை உருவாக்குவோம்

ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவோம்

Hr.சிவகுமார்.M.D (Acu)

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இவற்றைக் கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவைக் காண்பீர்கள்.!
விழித்துக் கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.!

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖Pizza, Burger தவிர்க்கவும்.!
(AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.!
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! பலருக்கும் இது ஒவ்வாமை இருப்பதால், தவிர்த்தல் நலம்.

✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை, தர்பூஸ் அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ Corn flakes, Oats வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔  Black tea without sugar is good

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கிச் செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிச் செல்லுங்கள்.!
இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!

Hyperactivity in vhildren is mainly because of these types of foods.

✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!