மசானபு ஃபுகோகா எழுதிய "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்ற உலகப்புகழ் பெற்ற நூலுக்கு வெண்டல் பெர்ரி எழுதிய முகவுரையிலிருந்து.:
நம் நாட்டில் உள்ள பலரைப் போன்றே ஃபுகோகாவும் வாழ்க்கையின் ஒரு பகுதியை இன்னொன்றிலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது என்பதைப் புரிந்திருந்தார். நாம் உணவுப் பயிர்களை வளர்க்கும் முறைகளை மாற்றும்போது நமது உணவை மாற்றுகிறோம்; நமது சமுதாயத்தை மாற்றுகிறோம்; நமது மதிப்புகளை மாற்றுகிறோம். ஆகவே இப்புத்தகம், உறவுகள் குறித்தும், காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. மேலும் ஒருவன் தானறிந்தவற்றுக்கு எப்படிப் பொறுப்பாளி ஆகிறான் என்பதையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.
நாம் இந்த உலகையோ, நம்மையோ உருவாக்கவில்லை. நாம் வாழ்க்கையைப் பயன்படுத்தி உயிர் வாழ்கிறோம்; உருவாக்கியல்ல.
நிபுணத்துவம் என்ற பெயரில் அறிவுத்துறைகளைச் சிறுசிறு பிரிவுகளாகச் சிதறடிப்பதை ஃபுகோகா எதிர்க்கிறார். அவரது ஆய்வுப்பொருளை முழுமையின் ஓரு பகுதியாகப் பார்க்கவே அவர் விரும்புகிறார்.
வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல; மனிதர்களை வளர்த்து முழுமைபெறச் செய்வதுதான்.
ஒரு மனிதனின் உடலையும், ஆன்மாவையும் முழுமையாக செழுமைப்படுத்தும் ஒரு வேளாண்மை இது. எண்ஜான் உடம்புக்கு உணவு மட்டுமே முக்கியமல்ல!
நன்றி: பூவுலகின் நண்பர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக