என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
31 டிச., 2018
சிரிக்கவும் சிந்திக்கவும்-52: பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்
*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*.
1) காலை rush hour, Office Work.. *அஷ்ட லஷ்மி*
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*
4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*
8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*
9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
குட்டிக்கதை-59:
தினசரி அதிகாலையில் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் தொழிலாளி ஒருவன் அரண்மணைக்கு வருவது வழக்கம்.
தினசரி காலையில் முகத்தை மழித்து முடியைத் திருத்துபவராதலால் அந்தத் தொழிலாளியிடம் வேடிக்கையாக எதையாவது பேசுவது கிருஷ்ணதேவராயரின் வழக்கம்.
அவனும் மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலுரைப்பான்.
ஒருநாள் அவன் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்றே.
நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்குமே என்றார். ”
மேன்மை தாங்கிய மகாராஜா அவர்களே! தங்களுடைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.
மக்களின் ஒவ்வொருவர் இல்லத்தில் குறைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவலையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்தொழிலாளி.
சவரத் தொழிலாளி சென்ற பின்னர் எப்போதும் போன்று மன்னரைக் காண அப்பாஜி வந்தார்
அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் சொன்னது போன்று எப்படி எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு பொன் என்பது சாதாரண மக்கள் வைத்திருக்க முடியாது! பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.
ஆகையினால் இதுபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்!” என்று வினவினார்.
”இதற்கு விரைவில் விடையைக் கூறுகிறேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் வழக்கம்போல் சவரத் தொழிலாளி அரண்மனைக்கு வந்து கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அப்பாஜி, காவலர்களை அழைத்து ”சவரத் தொழிலாளியின் இல்லத்தை சோதனை செய்துவிட்டு விரைவில் வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.
காவலர்கள் சவரத் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு பொன் இருப்பதைக் கண்டு வந்து கூறினர்.
அத னை மன்னரிடம் கொடுத்துவிட்டு, மன்னர் பெருமானே! அடுத்த நாள் சவரத் தொழிலாளி வந்ததும், முதலில் கேட்டது போன்று கேளுங்கள். அவனிடமிருந்து வேறு விதமான பதில் கிடைக்கும்” என்றார் அப்பாஜி.
வழக்கம் போல் காலை கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிக்க சவரத் தொழிலாளி வந்தமர்ந்தான்.
வரும்போதே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது வேலையை ஆரம்பிக்கும் சமயம்,
”இப்பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.
”பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்களே! அதை ஏன் கேட்கின்றீர்கள்? எல்லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர்.
கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத் தொழிலாளி கண்களில் நீர் மல்க தொண்டை அடைக்கக் கூறினான்.
அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் பெருமானே! இப்போது விடை தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நிலையை நிர்ணயிக்கின்றனர்.
தன்னைப் போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கின்றனர்.
தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநிலையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.
உடனே காவலனை அழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு பொன்னைக் கொண்டு வந்து சவரத் தொழிலாளியிடம் கொடுங்கள்” என்று ஆணையிட்டார் மன்னர்.
கொண்டு கொடுத்த பொன்னுடன் சிறிது பொன்னும் பரிசாகச் சவரத் தொழிலாளிக்குக் கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் வாங்கிச் சென்றான். மனித இயல்பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திறமையைப் பாராட்டினார் கிருஷ்ணதேவராயர்.
நன்றி: மனோகர் லக்ஷ்மண், புன்னகையரங்கம்
நலக்குறிப்புகள்-153: நல வாழ்விற்கு 30
நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!
1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்).
சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்).
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்ட நிகழ் காலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.
நன்றி: திருமதி பிரியா துரை, நாட்டு மருந்து
உங்கள் கவனத்திற்கு-30: சிவ பக்தர்கள் கவனத்திற்கு
#2019 ஆண்டின் பிரதோஷ அட்டவணை#
மே மாதம் 3 பிரதோஷங்கள் உயர்ந்த 2 சனிப்பிரதோஷங்கள் வருகின்றன
3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
18/1/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்
17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
18/3/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்
17/4/2019 புதன்கிழமை பிரதோஷம்
2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
31/5/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
.
14/6/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்
.
11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்
26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்
11/10//2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்
9./11/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்
24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்
சுற்றுச்சூழல்-40: கழிவுப் பிளாஸ்டிக் சாலைகள்
வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-26: தொ.மு.சி மறைந்த நாள் இன்று
வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-25: நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் பிறந்த நாள் இன்று
பிறப்பு: திசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) )
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலானஎழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள்நாவலை இயக்குநர் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
*பெருமைகளும் விருதுகளும்*
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
கனடாவின் இலக்கியத்தோட்டத்தின்2012 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில்இவருக்கு அளிக்கப்பட்டது
*படைப்புகள்*
*புதினங்கள்*
1977 தலைகீழ் விகிதங்கள்
1979 என்பிலதனை வெயில்காயும்
1981 மாமிசப்படைப்பு
1986 மிதவை
1993 சதுரங்க குதிரை
*சிறுகதை தொகுதிகள்*
1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
1985 வாக்குப்பொறுக்கிகள்
1990 உப்பு
1994 பேய்க்கொட்டு
2002 பிராந்து
2004 நாஞ்சில் நாடன் கதைகள்
முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
கான் சாகிப்
கொங்குதேர் வாழ்க்கை
*கவிதை*
2001 மண்ணுள்ளிப் பாம்பு
பச்சை நாயகி
வழுக்குப்பாறை
*கட்டுரைகள்*
2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
தீதும் நன்றும்
திகம்பரம்.
காவலன் காவான் எனின்
அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
அகம் சுருக்கேல்
எப்படிப் பாடுவேனோ?
2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)
*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*
*******
இத்தருணத்தில், நான் பெரிதும் போற்றும் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சீரிய சிந்தனையாளருமான திரு நாஞ்சில் நாடன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சகல நலமும் பெற்று, சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வரலாற்றில் சில மைல் கற்கள்-31: டிசம்பர் 31
ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599)
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வழங்கிய தினம். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. பிறகு மெல்ல மெல்ல இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பித்தது.
ஒளிவிளக்கு அறிமுகம் (1879)
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்த நாள் இன்று. 1979ம் ஆண்டு இதே நாள்தான் ஒளிவிளக்கை உருவாக்கினார் எடிசன். மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது பெரும் கனவாகவே இருந்தது. 1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்.
நன்றி: Patrikai.com
30 டிச., 2018
எனக்குப் பிடித்த கவிதை-84: ஆத்மாநாமின், "வாழ்க்கைக் கிணற்றில்"
வாழ்க்கைக் கிணற்றில் – ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)
வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்
(ஆத்மாநாம்)
oOo
I am a bucket
plopping into
the waters of desire
in the well of life
Who is that messenger
roping me up
Tying the knot
in the noose of death.
(மொழியாக்கம் – நகுல்வசன்)
நன்றி: பதாகை.காம்
குட்டிக்கதை-58: