சரத்சந்திர சட்டோபாத்யாயா அல்லது சட்டர்ஜீ (15 செப்டம்பர் 1876 – 16 ஜனவரி 1938) அவர்களின் நினைவு நாள் இன்று.
இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திரநாத் தாகூரின் சீடராகவே கருதினார்.
சரத் சந்திரர் ஏழையாகப் பிறந்தார். எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியைவிமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
அவருடைய சிறந்த படைப்புகளில் சில:
தேவதாஸ்
சரித்ராஹீன்
ஸ்ரீகாந்தா
கிருஹதஹா
பதர் தபி
இவரது நாவல்கள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் பல உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக