19 ஆக., 2020

நம்பிக்கை விதை

இன்று காலை தினத்தந்தியின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற இந்த புகைப்படத்தை பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.. 

அசோக்நகர் பெண்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் வரிசையாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.. 

பிரபல தனியார் பள்ளி வளாகங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இதுபோன்ற காட்சிகளை ஒரு அரசுப்பள்ளியில் உருவாக்க முடியும் எனும்போது அதை ஏன் பல அரசு பள்ளிகளுக்கும்  கடத்த முடியாது.. 

ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் பெற்றோரின் நம்பிக்கையை பெற்றால் அரசுப்பள்ளிகள் வெற்றிக் கொடிகளை பறக்க விடும்.. 

அசோக்நகர் பெண்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

நம்பிக்கையை விதைக்கிறீர்கள்.. நன்றி :)

கருத்துகள் இல்லை: