*மானின் மருட்சி*
ஒரே இடத்தில்,
திறந்த வெளியில்,
வெகு சுதந்திரமாக
இத்தனை மான்களா?
மகளிர் பள்ளி,
மகளிர் கல்லூரி
மனதில் உதிக்கிறது.
துள்ளலும், மருட்சியும் தானே
மான்களின் இயல்பு!
பெண்கள் மருட்சியை
தொலைத்த நிலையில்
மருட்சி இப்போது
மீதம் இருப்பது
மான்களின் விழிகளில் மட்டுமே.
கவிஞர் நெல்லையப்பன்
மரங்களை வெட்டினீர் !
காடுகளை அழித்தீர்!!
பொட்டலாகிப் போகின எல்லாம்.
மறைவிடமின்றி
மருகுகின்றோம்
நாங்களே!
சூரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக