KR Athiyaman :
1965இல் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி இன்றைய தலைமுறைக்கு சரியான புரிந்தல் இல்லை. அரசு பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இந்தி கற்பிக்கப்படுவதற்கு எதிரான போராட்டமல்ல இது. இந்த போராட்டம் நடைபெறாமல் இருந்தால், இந்தி படித்திருப்போம் என்ற கூற்று அர்த்தமற்றது. போராட்டம் இதை பற்றி அல்ல. 1950 ஜனவரி 26ஆம் தேதி, இந்தியா குடியரசாக மாறியது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அதில 1965 வரை இந்தியும், ஆங்கிலமும் மத்திய அரசின் அதிகாரபூர்வ, அலுவல் மொழிகளாக இருக்கும் என்றும், 1965க்கு பிறகு ஆங்கிலம் ஒழிக்கப்பட்டு, இந்தி மட்டுமே மத்திய அரசின் அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்றும் கூறப் பட்டிருந்தது. இதை ஆரம்பம் . மேற்கு வங்கம், மராட்டியம் போன்ற மாநிலங்களும் இதை எதிர்த்தாலும், தமிழகத்தை போல, தொடர்ச்சியான, தீவிரமான எதிர்ப்பு எங்கும் எழவில்லை. இந்த எதிர்ப்பு, ஆங்கிலம் 15 வருடங்களுக்கு மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என்பதற்கு தான். அது என்றென்றும் இந்திய அரசின் ஆட்சி மொழியாக, இந்திக்கு இணையாக தொடர வேண்டும் என்பதே இதர இந்தி பேசாத மாநிலங்களின் கோரிக்கை, நோக்கம். இந்த எதிர்ப்புகளின் விளைவாக 1963இல் ஆட்சி மொழி சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. அதில் ஆங்கிலம் 1965க்கு பிறகும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ’English language may continue to be used in addition to Hindi'என்று தான் இருந்தது. இதை ’English language SHALL continue to be used in addition to Hindi' என்று மாற்ற வேண்டும் என்று தீவிரமாக குரல் கொடுக்கப்பட்டது இங்கு. ஏனென்றால் may continue என்பது shall continue என்பதை போன்ற உறுதியான நிலைபாடு அல்ல. May or may not continue என்றும் அர்த்தப்படுத்த முடியும். பிரதமர் நேரு, may என்பது shall போன்றே கருதப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவிற்கு பதில் அளிக்கும் போது
உறுதியளித்தார். 1964இல் நேரு காலமான பின், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும், அவரின் அமைச்சரவையில் இருந்த முக்கிய தலைவர்களான மொரார்ஜி தேசாய்
மற்றும் குல்சாரிலால் நந்தா போன்றவர்கள் தீவிர இந்தி ஆதரவாளார்கள், ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலைபாடு கொண்டவர்கள். இதே காலகட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில், பக்தவச்சலம் முதல்வராக இருந்த போது, தமிழக சட்டமன்றத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1965 ஜனவரி 26க்கு பிறகு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே தொடரும், ஆங்கிலம் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக லால் பகதூர் சாஸ்திரி, இனி நேரு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார்.
இந்த போராட்டம் மட்டும் முன்னெடுக்கப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருந்திருக்கும். ஆங்கிலம் சுத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள், இதர மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் அனைத்தும்
இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கும். அதுவரை ஆங்கிலத்திலும் அவை நடத்தப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்களில், ஆங்கிலம் அறவே ஒழிக்கப்பட்டிருக்கும். அதன் விளைவாக,
இந்தியா முழுவதும் இதர துறைகளிலும் ஆங்கிலம் படிப்படியாக ஒழிக்கப் பட்டிருக்கும். இந்தியா மிகவும் பின் தங்கியிருக்கும். இந்தி பேசாத மாநிலத்தவர்கள் மத்திய அரசு பணிகளில் சேர்வது தடைபட்டிருக்கும். இன்னும் ஏராளமான கேடுகள் உருவாகியிருக்கும். இவற்றை இந்தி எதிர்ப்பு போராட்டம் தடுத்து நிறுத்தியது.
நன்றி : திரு கே ஆர் அதியமான் மற்றும் வாட்ஸ்அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக