13 செப்., 2020

கட்டுரை நேரம் : தமிழ் யாப்பும் பைனரியும் (binary)

தமிழ் யாப்பும்
(கி. மு. 500)       
பைனரியும் (binary)     
(கி.பி 1700)

எனது பள்ளிக்காலங்களில் மிகவும் பிடித்த பாடம் தமிழ் இரண்டாம் தாள் தான் (இலக்கணம்).  மெல்லினம், வல்லினம் , இடையினம் , அளபெடை, மாத்திரை,  பெயர்ச்சொல், வினைச்சொல், புணர்ச்சிவிதிகள், அசை, சீர் , தளை , தொடை, யாப்பு etc etc என நிறைய படித்தது நினைவுக்கு வருகிறது. 

அதில் யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். 

பைனரி எண்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, நம் முன்னோர்கள் யாப்பினை எழுதி இருக்கிறார்கள்.
அதற்காகத்தான் மேலே  தலைப்பில் வருடத்தையும் குறிப்பிட்டு உள்ளேன். இந்த சீர்களை பார்க்கும் போது, பைனரி,  யாப்பிலிருந்து கூட வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இரும இலக்கின்(digit) பிறப்பிடம் தமிழ் இலக்கணமோ?

கீழே சீர்களையும் அதற்கு இணையான இரும (binary) எண்களையும் இட்டுள்ளேன்.

ஓரசைச்சீர்கள்

நேர் 0 நாள்
நிரை 1 மலர்

ஈரசைச்சீர்கள்

நேர்-நேர் 00 தே.மா
நிரை-நேர் 10 புளி.மா
நிரை-நிரை         11 கரு.விளம்
நேர்-நிரை 01 கூ.விளம்

மூவசைச்சீர்கள்

நேர்-நேர்-நேர்         000 தே.மாங்.காய்
நேர்-நேர்-நிரை         001 தே.மாங்.கனி
நிரை-நேர்-நேர்         100 புளி.மாங்.காய்
நிரை-நேர்-நிரை 101 புளி.மாங்.கனி
நிரை-நிரை-நேர் 110 கரு.விளங்.காய்
நிரை-நிரை-நிரை 111 கரு.விளங்.கனி
நேர்-நிரை-நேர்         010 கூ.விளங்.காய்
நேர்-நிரை-நிரை 011 கூ.விளங்.கனி

நாலசைச்சீர்கள்

நேர்-நேர்-நேர்-நேர் 0000 தே.மாந்.தண்.பூ
நேர்-நேர்-நேர்-நிரை 0001 தே.மாந்.தண்.ணிழல்
நேர்-நேர்-நிரை-நேர் 0010 தே.மா.நறும்.பூ
நேர்-நேர்-நிரை-நிரை 0011 தே.மா.நறு.நிழல்
நிரை-நேர்-நேர்-நேர் 1000 புளி.மாந்.தண்.பூ
நிரை-நேர்-நேர்-நிரை 1001 புளி.மாந்.தண்.ணிழல்
நிரை-நேர்-நிரை-நேர் 1010 புளி.மா.நறும்.பூ
நிரை-நேர்-நிரை-நிரை 1011 புளி.மா.நறு.நிழல்
நேர்-நிரை-நேர்-நேர் 0100 கூ.விளந்.தண்.பூ
நேர்-நிரை-நேர்-நிரை 0101 கூ.விளந்.தண்.ணிழல்
நேர்-நிரை-நிரை-நேர் 0110 கூ.விள.நறும்.பூ
நேர்-நிரை-நிரை-நிரை 0111 கூ.விள.நறு.நிழல்
நிரை-நிரை-நேர்-நேர் 1100 கரு.விளந்.தண்.பூ
நிரை-நிரை-நேர்-நிரை 1101 கரு.விளந்.தண்.ணிழல்
நிரை-நிரை-நிரை-நேர் 1110 கரு.விள.நறும்.பூ
நிரை-நிரை-நிரை-நிரை1111 கரு.விள.நறு.நிழல்

நன்றி  - திரு.மாரிமுத்து முருகன் 

#tamil
#thamilh
#tamilgrammer
#tamililakkanam

கருத்துகள் இல்லை: