இன்றைய தத்துவம் :
சுய விருப்புக் கோட்பாடு
என்று அழைக்கப்படும்
Free will theory
தற்சார்பு துணிவு (Free will) அல்லது தன்விருப்புக் கொள்கை என்பது கட்டற்ற முறையில் பிற தடங்கல் ஏதுமின்றி வேறுபட்ட செயல்பாட்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாகும்.
அடிப்படைக் கேள்விகளாக, நமது செயல்பாடுகளின் மீது நமது கட்டுபாடு உள்ளதா, அப்படியென்றால், எவ்வகையான கட்டுபாடு உள்ளது, அதுவும் எந்த அளவுக்கு உள்ளது ஆகியன அமைகின்றன. இக்கேள்விகள் கிரேக்க சுத்தாயிக்குகள் (stoics) எழுப்பிய காலத்தில் இருந்தே உள்ளன.
ஒருவகையில், மாந்தர் வலிமையான விடுதலை உணர்வைக் கொண்டுள்ளனர். இந்நிலை நாம் தற்சார்பு துணிபைக் கொண்டுள்ளோம் என்பதைக் காட்டுகிறது. மறுவகையில், தற்சார்பு துணிபு தவறானதோ எனும் உள்ளாக்க உணர்வும் நம்முள் நிலவுகிறது.
இயற்பியல் விதியின்படியே முழுமையாகப் புறநிலை உலகம் இயங்குவதாக விளக்கும் பார்வையைச் சார்ந்தே, நினைவோடு எடுக்கும் முடிவுகள் அமைகின்றன எனும் உள்ளுணர்வை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் அரியதே. உள்ளுணர்வுவழி உணரும் விடுதலைக்கும் இயற்கை விதிக்கும் இடையிலான முரண்பாடு இயற்பியல் தீர்மானவாதத்தை (determinism) உறுதிபடுத்தும்போதோ அல்லது காரணமுடைமையை (cause and effect) புறந்தள்ளும்போதோ அல்லது மறுக்கும்போதோ உருவாகிறது. காரணமுடைமையை மறுக்கும்போது அல்லது புறந்தள்ளும்போது, புறநிலை நிகழ்ச்சிக்குப் புற உலகத்துக்கு அப்பாலான காரணம் உருவாகிறது; இயற்பியல் தீர்மானவாதத்தை உறுதிபடுத்தும்போது எதிர்காலம் முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சார்ந்து அமைகிறது, அதாவது முதல்-விளைவு விதியைப் பின்பற்றுகிறது.
தற்சார்பு துணிபைத் தீர்மானநிலை உலகத்தோடு எதிர்கொள்ளும் புதிர் தற்சார்பின் சிக்கல் அல்லது சிலபோது தீர்மானவாதத்தின் முரண்புதிர் அல்லது தீர்மானவாதத்தின் இருமைநிலை எனப்படுகிறது. இந்த முரண்புதிர் ஒழுக்கநெறி முரண்புதிருக்கும் இட்டுச் செல்கிறது: கடந்தகால நிகழ்ச்சிகளால் முழுமையாக ஏற்படும் செயல்களுக்கு ஒழுக்கப் பொறுப்பை எப்படிக் குறிப்பிடுவது எனும் கேள்வி எழுகிறது.
தற்சார்பு துணிபு என்பது ஒழுக்கப் பொறுப்பு, பாராட்டல், குற்ற உணர்வு, பாவம், பிற தற்சார்பு துணிபுவழித் தேர்வில் மேற்கொள்ளும் செயல்களோடு மட்டுமே சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றோடு நெருக்கமாக பின்னப்பட்டிருக்கிறது.இது அறிவுரை, ஏற்கவைத்தல், விளக்குதல், தடுத்து நிறுத்தல் ஆகியவற்றோடும் தொடர்புடையதாகும். மரபாக, தற்சார்பு துணிபால் எடுக்கப்பட்ட செயல்கள் மட்டுமே பாராட்டப்படுகிறது அல்லது தூற்றப்படுகிறது. தற்சார்பு துணுவழித் தேர்வு வாய்ப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிய பல வேறுபட்ட அக்கறைகள் உள்ளன. இவை இவற்றை எப்படி கருதிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அவை வேறுபடுவதால். விவாதத்துக்கு உரியனவாக அமைகின்றன.
சிலர் தற்சார்பு துணிபைக் கடந்தகால நிகழ்ச்சிகளில் முன்பு தீர்மானித்த முடிவு ஏதும், அமையாதவற்றில் தேர்வு செய்யும் திறமையாகக் கருதுகிறார்கள். தீர்மானவாதம், நிகழ்ச்சிகளில் தற்சார்பு துணிபோடு பொருந்தாத ஒரேயொரு வழிமுறை மட்டும் தான் வாய்ப்புள்ளது எனப் பரிந்துரைக்கிறது. இந்தச் சிக்கல் பண்டைய கிரேக்க மெய்யியலில் இனங்காணப்பட்டுள்ளது;".மெய்யியல் விவாதத்தில் இதற்கு முதன்மை வாய்ந்த கவனம் குவிக்கப்படுகிறது. தற்சார்பு துணிபு தீர்மான வாதத்தோடு பொருந்தாது எனும் கண்ணோட்டம் பொருந்தாமை வாதம் எனப்படுகிறது. இது தாராளவாதத்தோடு, அதாவது தீர்மானவாதம் பொய்யானது; தற்சார்பு துணிபு ஓரளவு இயல்வதே எனும் பார்வையோடு ஒத்துப்போகிறது; தீர்மானவாதமே உண்மையானது, தற்சார்பு துணிபு என்பது பொய்யானது எனக்கருதும் வன்தீர்மானவாதம், வன்பொருந்தாமை வாதத்தோடு ஒத்துப்போகிறது; பின்னது தீர்மானவாதம் மட்டுமல்ல, அதன் எதிர்மறையுங்கூட தற்சார்பு துணிபோடு பொருந்தாது எனக் கருதுகிறது; எனவே, தற்சார்பு துணிபு எந்நிலையிலும் தீர்மானவாதத்தைப் பொறுத்தவரையில் நிகழவே முடியாதது ஆகும்.
மாறாக, பொருந்துமைவாதம் (Compatibilism) தற்சார்பு துணிபு தீர்மானவாதத்தோடு பொருந்தக் கூடியதே என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சில பொருந்துமைவாதிகளோ, தற்சார்பு துணிபுக்கு தீர்மான வாதம் கட்டாயம் தேவை எனக்கூறி, தேர்வு என்பது செயல்பாட்டுக்கு ஒரு வழிமுறைக்கான தன்விருப்பமே; இதற்கு, தனது தேர்வு எப்படிப்பட்ட விளைவைத் தரும் என்பதைத் தேர்வாளர் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். எனவே பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபு சார்ந்த, பொருந்துமைவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்கும் இடையிலான தற்சார்பு துணிபையும் தீர்மானவாதத்தையும் பற்றிய விவாதம் பொய்மைவாய்ந்த முரண்புதிரே ஆகும் எனக் கருதுகின்றனர். பல்வேறுவகைப் பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபுக்கான பல வரையறைகளைத் தருகின்றனர்; இதன்விளைவாக, இந்தச் சிக்கல் தொடர்பான பலவகைப்பட்ட கட்டுத்தளைகளினை அவர்கள் காண்கின்றனர். செவ்வியல் பொருந்துமைவாதிகள் தற்சார்பு துணிபைச் செயல்பாட்டு விடுதலையாக மட்டுமே கருதினர்; ஒருவர் தன் செயல்பாட்டுத் துணிபில் விடுதலையாக இருந்தால், வழக்கத்துக்கு மாறாக வேறுபட்ட வகையில் செயல்பட முனைந்தால், அப்படி அவர் எந்தப் புறநிலைக் கட்டுத்தளையுமின்றி செயல்படலாம். நிகழ்கால பொருந்துமைவாதிகள் மாறாக தற்சார்பு துணிபை உளவியல் திறமையாகக் கருதி, ஒருவர் தன் நடத்தையை முதல்-விளைவுத் துலங்கலுக்கு ஏற்ப வழிபடுத்திக்கொள்கிறார் எனக் கூறுகின்றனர். மேலும், தற்சார்பு துணிபு தொடர்பான வேறுபல கருத்துப்படிமங்களும், அவரவரது சொந்த அக்கறையைச் சார்ந்து அமைகின்றன. இவற்றுக்கிடையில் அமையும் ஒரே ஒற்றுமைக் கூறுபாடு, தற்சார்பு துணிபுக்கு எந்தவகையிலும் தீர்மானவாதம் அச்சுறுத்தலாக அமைவதில்லை என்பதே.
--- தமிழ் விக்கிப்பீடியா
நன்றி : தமிழ் விக்கிப்பீடியா
மற்றும் திரு நேயம் சத்யா, தத்துவங்களத் தேடி, வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக