31 அக்., 2020

குழந்தைகளுக்கான ஹோமியோபதி மருந்துகள்

குழந்தைகளுக்கான ஹோமியோபதி மருந்துகள்-பாகம்-1

1.    குழந்தைகள் பார்ப்பதற்கு அசுத்தமாக இருக்கும். மிகுதியான தொல்லைகள் கொடுக்கும், உதைக்கும், அடிக்கும். எப்பொழுதும் தன்னைத் தூக்கிக்கொண்டோ அல்லது தாலாட்டிக் கொண்டோ இருக்கச்செய்யும். சதா மூக்கில் விரலை  விட்டுக் குடைந்து கொண்டேயிருக்கும்.-சினா (CINA).

2.    குளிர்ந்த நீரால் கழுவினாலோ அல்லது சுத்தம் செய்தாலோ சதா அலுத்து கொண்டிருக்கும்- ரஸ்டாக்ஸ்; சல்பர் (RHUS-T;SULPH).

3.    யாராவது தன்னைத் தொட்டாலோ அல்லது கூர்ந்து பார்த்தாலோ குழந்தைகளுக்கு தொல்லையாக இருக்கும்-ஆண்டிமோனியம் குருடம் (ANT-C).

4.    குழந்தைகள் சில பொருள்களைக் கண்டவுடன் அதைக் கேட்டு அழும்; கொடுத்தால் உடனே தூர எரிந்து விடும்- ஸ்டாபிசாக்கிரியா (STAPH).

5.    குழந்தைகள் தொட்டிலில் கீழ்நோக்கி படுக்க வைக்கும் பொழுது அழுதுகொண்டே தாவிப் பிடிக்கும். மாடியிலிருந்து கீழ்நோக்கி இறங்கி வந்தால்கூட அழும-போரக்ஸ் (BORAX).

6.    சாப்பிட எதையும் விரும்பாமல் தண்ணீரை மட்டும் விரும்பிக் குடிக்கும்-கெல்லிபோரஸ் (HELL).

7.    குழந்தை பகல் முழுவதும் அமைதியாகவும் நிம்மதியாகவும்  இருக்கும் . இரவு வந்ததும் அமைதியில்லாது தொல்லைகள் கொடுக்கும்- ஜலப்பா (JAL).

8.    குழந்தைகளுக்கு கடுமையான முன்கோபம். எல்லோருடனும் சண்டை போடும். காரணமில்லாமல் ஊளையிட்டுக் கொண்டும் , அழுது கொண்டும் , அவமரியாதையான சொற்களுடன் ஆத்திரமாகப் பேசுவார்கள்- சாமொமில்லா (CHAM).

9.    குழந்தை காய்ச்சலின் போது படுக்கையிலிருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயத்தினால் படுக்கையை அல்லது தாயாரைப் பிடித்துக் கொள்ளும்- ஜெல்சிமியம் (GELS).

10. குழந்தை சதா பற்களை அல்லது ஈறுகளைக் கடித்துக்கொண்டே இருக்கும்- பைடோலக்கா (PHYT).

11.  குழந்தை தனியாக இருக்கப் பயம். கையை யாராவது பிடித்துக் கொள்ள விரும்பும். தலையணையிலிருந்து திரும்பத் திரும்ப தலையை திடீரென சுண்டிக் கொள்ளும்- ஸ்டிராமோனியம் (STRAM).

12.  இரவில் குழந்தைகள் நீலம் பூரித்து மூச்சுவிடத் திணறும். வாய்வழியாக மூச்சுவிடும். பின்பு தூங்கி விடும்- சாம்புகஸ் (SAMB).

13.  படுக்கையில் அசையாமல் படுத்திருப்பதால் அனுகூலமும் சிறிது அசைவதனாலும் அதிகச் சிரமப்படும் குழந்தைகளுக்கு-பிரையோனியா (BRY).

14.  இனிப்புப் பொருள்களை அதிகமாக விரும்பி சாப்பிட்டதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு- அர்ஜென்டம் நைடிரிக்கம் (ARG-N).

15. சிறிய ஒலி அல்லது சிறு சச்சரவும் குழந்தைகளுக்குத் தொல்லையாகத் தென்படும்- நக்ஸ்வாமிக்கா ( NUX-V).

நன்றி :

Grateful thanks to 
Neyam-Satya, 
THE HIMEOPATH, 
WhatsApp Group

சுற்றுச்சூழல்

உன் கோபத்தை #சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை #தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு #வாழைமரம் நடு.

தோல்வியடைந்தால் #கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் #காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் #பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் #மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக #மாமரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் #பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது #வேப்பமரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது #செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை #மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் #நாமிருக்க_மாட்டோம்.. 
நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. 
நம் பேர் சொல்லிக்கொண்டு..!

நன்றி :

குட்டிக்கதை

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு , அடைகாத்து குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அடர்ந்த , பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துருதுருப்பாகவும் இருந்தன. ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அடர்த்தியும், அழகும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.
உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து ஒதுக்கியது. அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
"நான் மட்டும் ஏன் இப்படி ஒரு அவலட்சணமா பிறந்தேன்?
முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே" என்று அழுது கதறியது.
நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும், நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு அசிங்கமாகக் குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.
தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் சகோதரர்களையும் , அம்மாவையும் நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும்.
இன்னும் கொஞ்ச நாள் சென்றது. அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானது. தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன. அசிங்கமான வாத்துக்குஞ்சு இப்போது கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
அம்மா வாத்துக்கும் , மற்ற சகோதர வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன் அருகில் நெருங்கக்கூட வெட்கப்பட்டன. நடந்தது என்னவென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டை இட்டுச் சென்றுவிட்டது. இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து , குஞ்சு பொறித்து விட்டது. அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு..
ஒரு நாள் வந்தது. அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றமளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது. படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள், வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள அன்னப்பறவை கம்பீரமாய் உயரஉயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.
ஊர் பழித்தாலும் நீ உன்னை வெளிப்படுத்தினால்.. உயர செல்லலாம்.. உண்மையான திறமையிருந்தால்....
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரண‌ம் இருக்கும். முடிவு கிட்டப்படும் வரை பொறுமை தேவை.
இறைவன் அதற்கான நேரத்தை ஒதுக்கி கொடுப்பான்.அது வரை சற்று நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

நன்றி :

இன்றைய குறள்

மலரும் நினைவுகள்

எச்சரிக்கை

*வங்கிக் கணக்கை பாதுகாக்க Facebook -ல் பிறந்த நாள் ,செல் நம்பரை நீக்குக..*

காவல் துறை வேண்டுகோள் ...

✍️இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் உங்கள் பேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை தங்கள் பாதுகாப்பிற்காக நீக்கி விடும்படி நெல்லை மாவட்ட போலீசார் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

✍️இணையதள வசதி கொண்ட வங்கி கணக்கை ஹேக்கர்கள் எப்படி ஹேக்கிங் செய்கிறார்கள் என்பது பற்றி நெல்லை போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் உஷார் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 அதன் விவரங்கள் பின்வருமாறு :*

✍️1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.*

2.இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.
இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.

3.அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள்.
பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.

4.அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.

5.பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று "Forgot my Password " தேர்வினை கிளிக் செய்வார்கள்.
பின்பு எளிதாக பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதனால் உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

✍️இந்தத் தகவலை சைபர் செல் போலீசார் வெளியிட்டுள்ளனர்.*

*இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை தங்கள் பாதுகாப்பிற்காக நீக்கி விடும்படி போலீசார் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது...*

சிந்திக்க விரும்பும் சிலருக்காக : நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்கள்

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
 ​​
அப்போது சில விஞ்ஞானிகள்  அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.  

அந்த கைதி தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக....
விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது. 
 
ஒரு பெரிய விஷப்பாம்பு கைதிக்கு  முன்னால் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து... அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலியில் அந்த நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி ஒரு துணியால்... கண்களை கட்டினர்.

அதன்பின் அந்தக் கைதி மீது இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.

அந்தக் கைதி அலறியபடி... இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்து போனார்..!
 
பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.

அந்த விஷம் எங்கிருந்து வந்தது ? அல்லது கைதியின்  மரணத்திற்கு வேறு என்ன காரணம்?

அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது !

இதில் இருந்து நம் சித்தர்களின் குரல் முக பக்க நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் இதுதான்....

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது, 

அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.
 
90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் தற்போது... கொரோனா கால நெருக்கடியில் இருக்கிறோம். அரசாங்க பட்டியல்கள்  நம்மை பதற வைக்கலாம். 

இந்த அறிக்கைகளை கண்டு அச்சம் கொள்ளாமல்... நேர்மறை எண்ணம் கொள்வோம்.  அதுதான் இப்போதைக்கு  நமக்கான நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

நான் இப்பவும் சொல்கிறேன்... 
கொரோனாவை நம்பாமல்... ஏளனமாக நினைக்கும் எவருக்குமே  இனி கொரோனா வரப்போவதில்லை..!
அல்லது... வந்து விட்டு, வந்த தடம் தெரியாமலே கூட சென்றிருக்கக்கூடும்..!  

கொரோனா மீதும், உலகில் பரப்பப்படும் வதந்திகள் மீதும்.. எனக்கு சிறிதும் நம்பிக்கை இருந்ததில்லை... என்றாலும் அதை நம்பியிருப்பவர்களுக்குத்தான்  இப்பதிவு..

கொரோனா வீரியத்தின் பாதிப்பினால்தான் உலகில் இறப்பு பட்டியல்கள் நீள்கிறதா என்றால்... 
அதன் பிரச்சார பயத்தினால்தான் பல உயிர்கள் போகிறது என்பேன்..!!!  

கொரோனா வந்தால் செத்துவிடுவோம் என்று நினைத்தாலே போதும்... கண்டிப்பாக கொரோனாவும் வரும், கூடவே  சாவும் வரும்...!!!!  

கொஞ்சம் பச்சை தண்ணீரை ஒரு சிறிய  பாட்டிலில் அடைத்து... இதுதான் கொரோனாவுக்கான வேக்சின் என்று கூறி.. சில பில்கேட்சுகள் மூலம் 240ரூபாய்க்கு  நமக்கு ஒரு இஞ்சக்‌ஷன் செலுத்தப்பட்டால் கூட... ஆஹா... தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற அந்த நம்பிக்கையின் காரணமாக கூட கொரோனா நம்மை தாக்காமல் இருக்க கூடும்.! 

நேர்மறையான எண்ணங்கள் மனதில் இருந்தாலே  நோய் எதிர்ப்பு சக்தி தானாக  அதிகரிக்கும். மனவளம், உடல்நலம் கூட்டும். (பாதுகாப்புடன்) நம்பிக்கையுடன் 
போராடி கொரோனாவை வெற்றிக்கொள்வோம்.....

நன்றி :

கருத்து மேடை : புத்தகங்களை வெறுப்பது

🌹🌹🌹🌹🌹

வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம்படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை.
உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே.

#எஸ்_ரா

நன்றி :

திரு.எஸ்ரா
மற்றும் 

தி. ஜா. நினைவுகள்

தி. ஜா. நூற்றாண்டு - என் கட்டுரை!

தி ஜானகிராமன் - ‘காவேரியின் காதலன்’ (கலைமகள் செப்டம்பர் 2020 இதழ்)

தி.ஜானகிராமன் என்னும் அற்புத எழுத்தாளுமையின் நூற்றாண்டு அமைதியாகக் கடந்துகொண்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை, தி.ஜா என்னும் மகோன்னத கலைஞனின் படைப்புகளின்றி எழுதிவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என அனைத்திலும் மிளிரும் ‘அழகியல்’ தி.ஜா வுக்கே உரித்தான எழுத்து நடை.  

தி.ஜா. வின் படைப்புகளை வாசிப்பதில் ஏற்படும் ஆனந்தமே அலாதிதான். கரைபுரண்டோடும் அந்தக்கால காவிரியில் குளிக்கும் சுகமும், குதூகலமும் வாசகனின் கூடவே வரும்! வாசிப்பவனைப் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாகக் கரைத்து, சம்பவங்களினூடே உலவ விடுவதில் அவரது எழுத்துக்குக் தனித் திறமை உண்டு’ அதுவே அவரது சிறப்பும் கூட!  படைப்புகளில், கும்பகோணம், தஞ்சாவூர் கிராமங்களின் நவரசங்களும், பாசாங்கற்ற தனித்தன்மையுடன், கலைவடிவம் பெற்று நம்மை மகிழ்விக்கும் யுக்தியைக் கையாள்வதே தி.ஜா. பாணி எனலாம் - 

“சமுதாயத்திற்குச் சவுக்கடி, தத்துவ போதனை, உத்தி வேடிக்கைகள், மேல்நாட்டு இலக்கிய போலி போன்ற வர்த்தக சாதனங்களைப் பற்றி ஜானகிராமனுக்குத் தெரியாது. தான் அநுபவித்த நிலைகளை, தான் கண்ட காட்சிகளை அதே உணர்வுடன் மறுபடைப்பு செய்யும்போது, தம்முடைய திறமையை மட்டும் துணை கொண்டு எழுதுவார்”  என்கிறார் எழுத்தாளர் சிட்டி!.

தன் எழுத்துக்களைப் பற்றியும், கலை உணர்வுடன் எழுதுவது பற்றியும் ஒரு தீர்க்கமான சிந்தனை உடையவர் தி.ஜா. தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் சார்ந்த காவிரிக் கரை கிராமங்களின் ஆசாபாசங்கள், பேச்சு வழக்குகள், விருப்பு வெறுப்புகள், நியாய அநியாயங்கள் எல்லாவற்றையும் தன் சிறுகதை, நாவல்களில் சொற்சித்திரங்களாக வடித்திருப்பார். 

‘மோகமுள்’ நாவல் படித்துக் கும்பகோணத்தில் பாபுவையும், யமுனாவையும், அந்த  இடங்களையும் தேடி அலைந்தவர்கள் உண்டு. படித்து முடித்து ஒரு வாரத்திற்கு, பாபு, யமுனா, ரங்கண்ணா, மாட்டு வண்டி, சாண வாடை, காதல், கர்நாடக சங்கீதம் என மனம் ஆர்பரித்து அலைபாய்ந்த வண்ணம் இருந்தது. 

“ எனக்கு நகர வாழ்க்கையில் ஈடுபாடு கிடையாது. மனசு முழுக்க கிராமங்களில்தான் இருக்கு. ஏன்னு சொல்ல முடியலை. அது சிறு வயசுனுடைய இதுவா இருக்கலாம். இல்லே நம்ம கிராமத்து மக்கள் கிட்ட இருக்கிற தனிதன்மை………. அங்கதான் அதிகமாகக் கிடைக்கிறது” என்று தி.ஜா சொல்வதை அவரது ஒவ்வொரு புனைவிலும் உணரமுடியும்!

மன்னார்குடியை அடுத்த, தேவங்குடியில் 1921 ல் பிறந்த தி.ஜா., சமஸ்கிருதமும், ஆரம்ப இசையும் தன் தந்தையிடம் கற்றார்! அவருடைய இசை ஞானம், கலைநயமிக்க அவரது எழுத்துக்களுக்கு ஆதார சுருதியாக இருந்தது என்றால் அது மிகையாகாது - ‘இந்தப் பிரபஞ்சமே இசை வடிவானது’ என்கிறார் ஒரு பேட்டியில்.சமையல் தெரியும், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் எனக் கலைகளில் ஈடுபாடு கொண்டவர். 
இசையின் அத்தனை நுணுக்கங்களோடும், தன் படைப்புகளை அவரால் அவதானிக்க முடிவதில் வியப்பொன்றுமில்லை! 

கும்பகோணம், சென்னை, தஞ்சை ஐயம்பேட்டை, குத்தாலம் போன்ற இடங்களில் ஆசிரியர் வேலை பார்த்த அனுபவம், அவரது படைப்புகளின் களங்களுக்கும், பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் வித்தையைச் செய்தது! பின்னர், சென்னை, டெல்லி வானொலியில் கல்வி அமைப்பாளராகப் பணி செய்து, 1981ல் ஓய்வு பெறுகிறார். 1982 ல் மறைந்தும் விடுகிறார்.

“ஏன் எழுதுகிறேன்?” என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் சுவாரஸ்யமானது:

“ எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை - எல்லாம் அதில் இருக்கின்றன.”

“ என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான், அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் - எழுத்து மூலம் “

“ கலை வடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொறுத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னை பயமுறுத்தாதீர்கள். நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்த தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்படவில்லை. வாலைப் போட்டுவிட்டு, பல்லியைப்போல் தப்பிவிடுவேன்.    
- தி.ஜானகிராமன்

தி,ஜானகிராமன் என்னும் தனிமனிதர் மிகவும் மிருதுவானவர். மென்மையாகப் பேசுவார். சிவப்பாக இருப்பார், தலையெல்லாம் அழகாகச் சீவியிருப்பார், நன்றாக டிரஸ் செய்துகொண்டுதான் வெளியில் வருவார் - இது அவருடன் பழகியவர்கள் சொல்வது! 

நல்ல குடும்பத் தலைவர். ’என்ன வேணுமானாலும் நான் பேசலாம். நான் கேலி பண்ணினாலும் சிரிச்சுக்கிட்டு இருப்பார். திரும்பக் கேலி பண்ணுவார். எங்க போகணும்னாலும், என்கிட்டேயும், குழந்தைங்ககிட்டேயும் சொல்லிக்கிட்டுப் போவார். அவர்கிட்ட பணம் இருக்கோ இல்லையோ, குழந்தைங்க ஆசைப்பட்டு ஒண்ணு கேட்டால், அதை வாங்கிக் கொடுக்காமல் இருந்தது கிடையாது. அதே மாதிரி நான் ஒண்ணு கேட்டேன்னா, அதையும் வாங்கித் தராமல் இருந்தது கிடையாது. நாங்க எல்லோரும் சேர்ந்து எங்கேயாவது போகணும்ன்னு ஆசைப் பட்டால், அப்படிப் போகாமல் இருந்ததும் கிடையாது’. - தி ஜா வின் மனைவி.

அம்மா வந்தாள், மோகமுள், மரப்பசு, உயிர்த்தேன், செம்பருத்தி, நளபாகம் போன்ற நாவல்களையும், அடி, வீடு, தோடு, அவலும் உமியும், நாலாவது சார், சிவஞானம், கமலம் போன்ற குறுநாவல்களையும், உதயசூரியன், நடந்தாய் வாழி காவேரி, கருங்கடலும் கலைக்கடலும் போன்ற பயண நூல்களும் எழுதியுள்ளார். ஆனாலும், அவரது ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான் சாகித்ய அகாதமி விருது (1979) கிடைத்தது.

அதிகம் பேசப்பட்ட, விமர்சிக்கப் பட்ட நாவல்களை விட, இவரது சிறுகதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப் பட்டன.  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் தி.ஜா. என்னும் இலக்கிய ஆளுமையை அடையாளம் காட்டும் படைப்புகளாகும்.  சூழ்நிலைகளே மனித மனக்குரங்குகளை ஆட்டிப் படைக்கின்றன - பண்பு மீறல்களைக் கூட, அனுதாபத்துடன் பார்க்கும்படி எழுதியிருப்பார் - அவரது சமூகப் பார்வை பாசாங்கற்றது, பாத்திரங்கள் உயிரோட்டமானவை. டம்பம், பொய்மை, உயர்ந்த மனிதர்கள், மனிதநேயம், காவிரிக் கரையின் எல்லா மட்டக் குடிகளின் கலாச்சாரம் என மிக நுட்பமான மனித உணர்வுகளைப் பேசும் அவரது சிறுகதைகள் - அவை வெளிப்படுத்தும் வெகுஜன ஈர்ப்பும், வசீகரமும் பொய்க் கலப்பில்லாதவை! முதல் கதை ‘பசி ஆறிற்று’ முதல், கடைசி கதை ‘சுளிப்பு’ வரை அற்புதமான படைப்புகள்!

“எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி” - தி.ஜா.

அழகு, நடை, விவரணை, எளிய சின்னச் சின்ன சம்பாஷணைகள், மனம் நோகடிக்காத கேலி, பரிகாசம், பண்பு மீறல்களுக்குப் பின்னால் உள்ள மனிதநேயம் அனைத்தையும் தன் சிறுகதைகளில் கலைநயத்தோடு சொல்லியிருப்பார்!

ரயில், ஸ்டேஷன், ரயிலடி:

அவரது கதைகளில் ரயில், ரயில் நிலையம் எல்லாம், அவற்றின் இயல்புகளோடு ஒன்றிப் போய்விடும். ‘அக்பர் சாஸ்திரி’ - மதுரை வக்கீல் கோவிந்த சாஸ்திரி - தனக்குத் தெரிந்த கைவைத்தியமெல்லாம் சொல்லி, எதிரே இருக்கும் ‘சூப்ரண்டி’ன் குடும்பத்துக்கு ஏராளமாக அறிவுரை சொல்லுவார். மாயவரம் ஜங்க்‌ஷனில் பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டு, வண்டியிலிருந்து கீழே போய் கைஆலம்பிக்கொண்டுவருவார். குத்தாலத்தில் நிற்கும் வண்டி. ஒரு அணாவுக்கு வேர்க்கடலையை வாங்கி மென்றவாறு யோசனையில் ஆழ்ந்திருப்பார். திருவிடைமருதூர் ஸ்டேஷன் வந்தது. “மகிழமாலை விற்குமே இங்கே” என்பார்!.  கும்பகோணம் வரும் முன் இறந்து விடுவார் - நாமும், மாயவரத்திலிருந்து, கும்பகோணம் வரை அவர்களுடன் ரயிலில் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வருவோம்! அவர் எழுதாவிட்டாலும், நம்மால் அந்த ரயில் பயணத்தை அனுபவித்த உணர்வைப் பெற முடியும் - அது தி.ஜா. வின் எழுத்து செய்யும் சித்து வேலை!!

“வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டு வண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது” என ஒரு வாக்கியத்தில் கதையில் வரும் ஆளரவமற்ற ரயில் வண்டி நிலையம், மனதில் தோன்றிவிடும்! 

‘சிலிர்ப்பு’ கதையும் அப்படித்தான் - “திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படும் வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்து விடும்” - ரயிலும் உயிருள்ள பாத்திரம் போல! “ மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பி விட்டுத் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில், பொட்டணம், தூங்குமூஞ்சிகள் - இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரை மணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது  தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று, இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக் காவல் வைத்து எங்கோ போய்விட்டது.  எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம், வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும்போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலிலும் கேடு கெட்ட ஷட்டில். ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது” - தான் சொல்லப்போகும் கதை மாந்தர்கள் இந்த வண்டியில் வரும் மத்திய, கீழ் மட்ட வசதி படைத்தவர்கள் என்பதற்கான முன்னோட்டம் இது!  

திரும்பத் திரும்ப வரும் அலுக்காத விவரனைகள்:

தொடர்ச்சியாக, ஒட்டுமொத்தமாக அவரது படைப்புகளை வாசிக்கும் போது,  சில விவரணைகள், சொற்பிரயோகங்கள் திரும்பத் திரும்ப வருவதைக் காண முடிகிறது. சூழலுக்கு ஏற்றவாறுதான் என்றாலும், தி.ஜா. பாணியில் அவை தவிர்க்கமுடியாதவை என்று தோன்றுகிறது. 

" குழைவு, சரிவு, கழுத்து, காது, திருத்தமான மூக்கு - அப்படி ஒரு அழகு, மஞ்சள் ஆரஞ்சுப் பழ நிறம், சொரக்காய் மாதிரி கால், வெள்ளரிப்பிஞ்சு மூக்கு, நெடு நெடு, பள பள, கிராம வயல், கரிச்சான், வயலின் குருவி, கிழட்டு வெயில், கொஞ்சம் நேரம் போனால் மஞ்சள் பூத்துவிடும் (மாலை வெயிலை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!), ‘ஸில்’ வண்டுகளின் இரைச்சல் " -‘அரச மரத்து இலைகள் சிலு சிலுவென்று என்னமோ சொல்லிக்கொண்டிருந்தன’ ‘ கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி’, கீரைத்தண்டு, மூங்கில், முறுக்கி விட்ட கம்பி, இரண்டாகப் பிளந்த தென்னை மட்டை அடி -  எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத விவரணைகள்!

சிலிர்ப்பு சிறுகதை உருவான விதம் ! தி.ஜா. வின் வார்த்தைகளில்:

ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.

இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின.

எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

என்ன மனிதர் இவர்?

“நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்”. தி.ஜா. வின் இந்த வரிகளைப் படித்தபோது, அவரது, தன்னடக்கம் வியக்க வைத்தது.

மதுர மணி பற்றி … 

இசை ஞானமும், பாடும் திறமும் உடையவர் தி.ஜா. மதுரை மணி அய்யர் பாட்டு அவர் மனதுக்கு மிகவும் இசைந்த ஒன்று. ‘மதுர மணி’ என்றுதான் அவரை, இவர் குறிப்பிடுவார். அவரைப் பற்றி….

“மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது”.

பயணக் கட்டுரைகளில் தி.ஜா வின் பாணி வித்தியாசமானது - சென்ற இடங்களைக் கலை நயத்தோடும், அங்கு சந்தித்தவர்களுடன் உரையாடியதை ஓர் அழகிய கதை போலவும் எழுதியிருப்பார். காவேரிக் கரை கிராமங்களையும், தோப்புகளையும், மனிதர்களையும் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். பெண்ணாகரத்தின் வாரச்சந்தை, இளங்கோவடிகள் மாதவி பாடுவதாக எழுதியுள்ள காவிரி (மருங்கு வண்டு சிறந்தார்ப்ப // மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் // கருங்கயற்கண் விழித் தொல்கி, // நடந்தாய்; வாழி, காவேரி!), ஆற்றில் பாதி மூழ்கிக் கடந்த கார், அமைதியும், பசுமையும் வனப்பும் ஆர்ந்த சுழ்நிலையில் காவேரியைப் பார்க்கக் கூடிய இடம் ‘ஈங்கோய்மலை’  என நிறைய செய்திகள்! உதயசூரியன் - ஜப்பான் பயணக் கட்டுரையில், அங்குள்ள சுறுசுறுப்பு, அமைதி, இனிமை, இயற்கை எழிலுடன் பியூஜி மலைச் சிகரம் என ஏராளமான விவரணைகள்! விமானப் பயணம் குறித்த பயம், குலுங்காமல் செல்லும் விமானம், ஹாங்காங்கில் இறங்கிய, உடன் பயணித்த அமெரிக்க ‘பயல்’ என சுவாரஸ்யம் - தவற விடக் கூடாத பயண அனுபவங்கள்!

 ‘ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கப் புத்தகம் படிக்கிற பழக்கம் வெச்சிருந்தால்கூட அவ்வளவு புத்தகங்கள் படிக்கிறதுக்கு வாய்ப்பில்லை. அப்படிப் படிக்கணும் என்கிற அவசியமும் இல்லை. முக்கியமான புத்தகங்களை நல்லாப் படித்தால் போதும்.  தொடர்ந்து எழுதணும்கிற ஆசை இருக்குது இல்லையா? அது மனசில இருந்துதான் பல விஷயங்களை உருவாக்குது’  தி. ஜா (சுராவிடம் சொன்னது).

எழுத்தாளனின் எழுத்தை விட்டு, எழுத்தாளன் என்ற மனிதனை விமர்சிக்கும் சர்ச்சைகளில் அவர் ஈடுபட்டதில்லை. தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களை அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார்.

“எல்லா விமர்சனங்களுக்கும் ஜானகிராமன் தன் ஒன்றரைக் கண்ணைச் சிமிட்டி, ஒரு நமுட்டுச் சிரிப்போடு தாண்டிப் போய்விடுவார்.” - பாரதிமணி.

ஐம்பது வருடங்களைத் தாண்டியும், தி.ஜா.வின் படைப்புகள் அதே உயிர்ப்புடன் வாழ்கின்றன! தி.ஜா. என்னும் பெருங்கலைஞனின் சிருஷ்டிகளை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது - முடிந்தவரையில் தி.ஜா வின் அதிகம் பேசப்படாத பக்கங்களைத் தொட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஜெ.பாஸ்கரன்.

நன்றி :

திரு.ஜெ.பாஸ்கரன்
மற்றும் 

கருத்து மேடை : தடுப்பூசி - உடைக்கப்படும் உண்மைகள்

தடுப்பூசி, உடைக்கப்படும் உண்மைகள் பகுதி 1. 
நல்முயற்சிக்கு வாழ்த்துகள் தங்கபாண்டியன். 

அவசியம் பாருங்க மக்களே.

https://www.facebook.com/603089796829797/posts/1006548566483916/

https://youtu.be/FL8uUo2__X0

The documentary starts with showing Dr.Tetyana Obukhanych, my greatest inspiration.

Grateful thanks to

இன்றைய சிந்தனைக்கு

வரலாற்றில் இன்று : அக்டோபர் 31

தேசிய ஒற்றுமை தினம்

30 அக்., 2020

மலரும் நினைவுகள்

சிரித்து வாழவேண்டு்ம்!

நலக்குறிப்புகள் : மூட்டுவலி

இன்றைய சிந்தனைக்கு

இன்று ஒரு தகவல்

எனக்குப் பிடித்த பாட்டு : பாட்டு ஒரு பாட்டு....


எனக்குப் பிடித்த பாட்டு : பாட்டு ஒரு பாட்டு

தாய் சொல்லை தட்டாதே

கே.வி.மஹாதேவன்

டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா

PAATTU ORU PAATTU - THAI SOLLAI THATTATHE TAMIL SONG

441,041 views•Jul 12, 2013

RAJSHRI TAMIL

3.24M subscribers

Watch old Tamil song, Paattu Oru Paattu from the super hit classic film, Thai Sollai Thattathe. Starring: MGR, Saroja Devi, S. A. Ashokan, Pandari Bai. Music: KV. Mahadevan. Singers: TM. Sounderarajan, Susheela. Director: M.A.Thirumugam.

 

To watch more videos, Click http://www.youtube.com/rajshritamil

 

Subscribe now for more updates

http://www.youtube.com/subscription_c...

 

Join & Like our Facebook Rajshritamil Fan Page

http://www.facebook.com/rajshritamil

 

Join us on Google+

https://plus.google.com/1011189747649...

 

Subscribe now to Rajshri Tamil for more updates: http://bit.ly/Subscribe-ToRajshriTamil

 

Grateful thanks to RAJSHRI TAMIL and YouTube and all the others who made this video possible 

பக்திப் பாமாலை : சம்பந்தர் தேவாரம் | மங்கையர்க்கரசி | திருஆலவாய்


சம்பந்தர் தேவாரம் | மங்கையர்க்கரசி | திருஆலவாய் |

Sambanthar Thevaram | சம்பந்தர் | Madurai

1,400 views•Jan 2, 2020

ALAYA PAYANAM

9.36K subscribers

 

Grateful thanks to ALAYA PAYANAM and YouTube and all the others who made this video possible 

பக்தி உலா : திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் ஆலயம்


அற்புதமான திருவானைக்காவல் 

ஜம்புகேசுவரர் கோயில்

Jambukeswarar Temple, Thiruvanaikaval

199,657 views•Premiered Jan 23, 2020

GANESH RAGHAV

121K subscribers

 

This Video shows the Jambukeswarar Temple, Thiruvanaikaval , hope you guys like the video

 

for enquiries : ganeshraghav522@gmail.com

if you like to support or sponsor me, you can do it through

 

Google pay upi id : ganeshraghav522@okaxis

 

paypal : https://www.paypal.me/ganeshraghav

 

Grateful thanks to GANESH RAGHAV and YouTube and all the others who made this video possible 

பக்தி மஞ்சரி மனதை மயக்கும் திருவாசகம் | பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்

 


பக்தி மஞ்சரி

மனதை மயக்கும் திருவாசகம் |  

பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்

Thiruvasagam Song | Manickavasagar Padal - History | Part - 1

928,705 views•Apr 23, 2019

TAMIL BOXSHOW

36.4K subscribers

 

https://www.youtube.com/watch?v=QKaha...

 

#thiruvasagam

#thiruvasagamintamik

#sivapuranam

#tamilboxshow

 

Grateful thanks to Prof.So.So.Mi.Sundaram, TAMIL BOXSHOW and YouTube and all the others who made this video possible

பயணம் : ஏலகிரி சுற்றுலா


ஏலகிரி சுற்றுலா வந்தால் 

இந்த அருவிக்கு வர மறக்காதீங்க! I 

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா I Yelagiri

6,133 views•Oct 15, 2020

VILLAGE DATABASE

491K subscribers

 

Map Link: https://goo.gl/maps/zagR3u6SYN5HBmAp6

 

Grateful thanks to VILLAGE DATABASE and YouTube and all the others who made this video possible 

முன்னேற்றப் பாதை : வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் பெற



வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் பெற 

வேண்டுமாஇதை செய்யுங்கள்.!

1,596 views•Oct 27, 2020

BOGAR SITHANTHASABAI

110K subscribers

குருவே சரணம்

 

Grateful thanks to BOGAR SITHANTHASABAI and YouTube and all the others who made this video possible 

ஆன்மீகம் : சன்மார்க்க அனுபவங்கள்

 


சன்மார்க்க அனுபவங்கள்

தயவுதிரு. தியாகராஜன் அய்யா

998 views•Oct 27, 2020

ARUL JOTHI

71.1K subscribers

Help Us Feed the School Kids - Eradicate Hunger

 

Phone: 044 2557 0770 / 99405 03056

Web site: https://aruljothitrust.com/

 

       Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 5000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto-rickshaw which will help us in delivering the meals prepared. Aruljothi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "Educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with hunger ...

 

You can Donate from our website : https://aruljothitrust.com/

OR

Bank transfer to the below-mentioned account:

Account number: 403721163

Account name: Aruljothi Anna Alayam

IFSC code: IDIB000P132

Bank: Indian Bank

Branch: JAWAHAR NAGAR

Thank you.

 

Grateful thanks to ARUL JOTHI and YouTube and all the others who made this video possible


சிந்திக்க விரும்பும் சிலருக்காக : ஊருக்கு நல்லது : பகுதி-1 சுகி சிவம்



ஊருக்கு நல்லது : பகுதி-1 சுகி சிவம்

13,451 views•Oct 19, 2020

SUKI SIVAM EXPRESSIONS

 

#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

 

Grateful thanks to SUKI SIVAM EXPRESSIONS, சுகி சிவம் and YouTube and all the others who made this video possible 

விழிப்புணர்வு பக்கம் : சட்ட ஆலோசனைகள்


விழிப்புணர்வு பக்கம் : சட்ட ஆலோசனைகள்

77 views•Oct 28, 2020

Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

16.1K subscribers

 

Grateful thanks to Dr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் and YouTube and all the others who made this video possible 

சுற்றுச்சூழல் : மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் - அசத்தும் கிராமத்து இளைஞர்கள்


சுற்றுச்சூழல் : 

மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் - 

அசத்தும் கிராமத்து இளைஞர்கள்

#Vellore | #RainwaterHarvesting

9,708 views•Aug 18, 2019

POLIMER NEWS

4.46M subscribers

 

Grateful thanks to POLIMER NEWS and YouTube and all the others who made this video possible


தொழில் சாம்ராஜ்யங்கள் : அமேசானின் கதை


தொழில் சாம்ராஜ்யங்கள்:

அமேசான் சாம்ராஜ்யமான கதை |

அமேசானின் கதை |

THE STORY OF AMAZON | JEFF BEZOS

330,894 views•Nov 18, 2019

News7 Tamil

4.22M subscribers

Subscribe https://bitly.com/SubscribeNews7Tamil

 

Grateful thanks to News7 Tamil, JEFF BEZOS  and YouTube and all the others who made this video possible 

உணவும் மருந்தும் : அல்சர் குணமாக உணவு முறை | மருத்துவர் கு.சிவராமன்


உணவும் மருந்தும் :

அல்சர் குணமாக உணவு முறை

மருத்துவர் கு.சிவராமன்

Ulcer treatment by Dr.Sivaraman

148,966 views•Mar 8, 2020

HEALTHY TAMILNADU

 

Dr.Sivaraman latest speech in tamil

Contact us : Team.healthytamilnadu@gmail.com

Website : https://healthytamilnadu.blogspot.com

 

Grateful thanks to Dr G SIVARAMAN, HEALTHY TAMILNADU and YouTube and all the others who made this video possible 

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் - அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர்


வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் -

அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் கதை..! |

Dr.B.R.Ambedkar Life Story | News7 Tamil

1,289,789 views•Apr 14, 2018

News7 Tamil

4.22M subscribers

 

Grateful thanks to News7 Tamil and YouTube and all the others who made this video possible