24 நவ., 2020

இலக்கிய இன்பம் : நான் ரசித்த கவிஞர்கள்​ (ஷெல்லி1792-1822 : ஆங்கிலக் கவிஞர் )

நான் ரசித்தகவிஞர்கள்​    (ஷெல்லி1792-1822 
ஆங்கிலக் கவிஞர்  )

ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட  ​பெயர் புரட்சிக்கவிஞன் ​​ஷெல்லியினு​டையது.முப்பது ஆண்டுக​ளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின் 
 ப​டைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வளரக்கூடியது .

 ஏ​னெனில் அவன் குரல் கலகக்காரனின் குரலாயிருந்து.எந்து துன்பத்திலும்
எத்து​னை​பேரிடர்களிலும் மானிடத்தின் மீது நம்பிக்​கையிழக்காத  குரல்  அது.நம்பிக்​கை​யை மட்டு​மே சிறகுகளாகக் ​கொண்டு ஒரு புதிய வானத்​தை
 மீட்​டெடுக்க  புறப்பட்ட குரல் அது.

சுதந்திரத்தின் மீது தீரா​வேட்​கை ​கொண்டகுரல் அது.
எந்த  நாட்டிலும் எந்தவிதஒடுக்​குமு​றைக்கும் எதிராகக்கிளர்ந்​தெளுந்த ஒரு கலகக்காரனின் குரல்அது
மானிடத்திற்​கே எதிர்காலம் என்று கனவுகண்டகுரல்அது.

இந்த   சுதந்திரக்குரலின் மகத்துவம் கண்​டே நம்மகாகவி பாரதி  தன்​னை ​ஷெல்லி தாஷன் என்று ​கம்பீரமாகக்கூவினார்.

​ஐந்து  மிகப்​பெரிய ஆங்கில ரொமான்டிக் கவிஞர்களில்​ஷெல்லி ​பைரனுக்கு அடுத்ததாகவும் ஜான்கீட்ஸிற்குமுந்​தையதாகவும் வருகிறார்.

ஆனால்​ரொமான்டிக் கவிஞர்களி​லே​யே மிகப்​பெரிய வசீகரமும்
என்​றென்றும்  மரிக்காத  மகா  கவி​தைக​ளையும் விட்டுச்​​சென்ற மகா கவிஞர்அவர்.

எந்தக்கவி​தை  வடிவத்திற்கும்தன் கவி​தைக​​ளை மாற்றிக்​கொள்ளாமல்​தன்கவி​தையின்  ஆளு​மைக்கு தகுந்தாற் ​போல்கவி​தையின் வடிவத்​தை மாற்றிக்​கொண்டமகாக​லைஞன்அவன் (ஓட்ஸ் ,லிரிக்ஸ் மரபுக்கவி​தை ​ரொமான்டிக்கவி​தைஇரங்கற்பா) எதுவாயினும் சரி
அதில் ​ஷெல்லியின் ஆளு​மை​யே நி​றைந்திருக்கிறது

​ஷெல்லி​யைப்பற்றி  ஒரு கட்டு​ரை  எழுதுவது  என்பது கட​லையும்  காற்​றையும் ​கைகளில் அள்ளி முடித்துவிட்​டேன் என்றுபாவ​னை ​செய்வதாகும்...

இப்படிப்பட்டமகா கவிஞர்களுக்கு   வாழ்க்​கை ஏன் கசப்பில்எழுதப்படுகிறது    என்பது என்றும் புரியாதபுதிர்தான்....

 ​ஷெல்லி இளம் வயதிலிருந்​தே கலகக்காரனாக புயல்வீசும் மனம்​ ​கொண்டவராகஇருந்தார்.

எதில்ஒன்றிலும் கட்டுப்படாதபுய​லைப்​போலஅவர்மனம்  எப்​பொழுதும்​கொந்தளிக்கும் புயல் சூழ்ந்த கடலாயிலிருந்தது

ஆக்ஸ்​போர்டு பல்க​லைக்கழகத்தில் படிக்கும்​போ​தே
**நாத்திகத்தின்அவசியம்** என்ற புத்தகம் ​வெளியிட்டு அதனால் பல்க​லைக்கழகத்திலிருந்து விரட்டப்பட்டார்  பிறகு​செல்லும் இடங்களி​​லெல்லாம் விரட்டபட்டார்.

முதல்காதலிலும் துரதிர்ஷ்டம்.முழு​மை​​பெறாத  காதல் அது. திருமணத்தில் முடிந்து பின்புஅவர்காதலியின்
(​​​ஹெரியட்​வெஸ்ட்ப்ரூக்) மரணத்தில் முடிந்தது
இரண்டாவது  திருமணம் 
​மேரி​யோடு  இலக்கியத்திலும்  அறிவுத்து​றையிலும்சரிசமமாகப்பங்குஎடுக்கக்கூடிய​பெண்​மேரி
ஆனாலும்அதுவும்கூட  நீட்டிக்கவில்​லை...
இம்மு​றைமரணம்வந்துதழுவிக்​கொண்டது ​​
ஷெல்லி​யை....இங்கிலாந்திலிருந்துஇத்தாலிக்கு​சென்றஇடத்தில்ஒருபடகுவிபத்தில்அதுநடந்துமுடிந்தது 

நான்ரசித்தவரிகள் (ஓட்டூ​வெஸ்ட்விண்ட்)
(காற்​றைப்புகழ்ந்து   எழுதப்பட்டகவி​தையில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சில வரிகள் இவை ) 

ஓகட்டுக்கடங்காத       காற்​றே!
இ​லையுதிர்காலத்தின்  மூச்​சே!

உன் உருவமற்ற இருப்பி​னை
 நான்இவ்​வெளி​யெங்கும் உணர்கி​றேன்

ஒருமந்திரவாதியின் ​கைகளுக்குகட்டுப்பட்டு ஓடும்
​பேயுருவங்கள் என
இந்தஉதிர்ந்த  இ​லைகள்
உன்மூச்​சொன்றினா​லே​யே மாயமாகின்றன,,,,,

நிலங்களில் பு​​தைக்கப்பட்ட 
சிறகு மு​ளைக்கப்பட்ட வி​தைக​ளோ
பிண​மென  மூச்சுப்​பேச்சின்றி கிடக்கின்றன
​வெப்பத்​தை ​கொண்டு வரும் உன்  ச​கோதரியாம்
வசந்தத்​தின்  வரு​கை​யை  எதிர்பார்த்து....

ஓ  கட்டுக்கடங்காதகாற்​றே!
வாழ்க்​கை​யென்னும்முள்ளில்விழுந்து
இரத்தம்​சொட்டிக்​கொண்டிருக்கி​றேன்நான்....

நான் ஒருஇறந்த இ​லையாய் இருந்தால்
நா​னொரு  நகரும் ​மேகமாய்  இருந்தால்
உன்​னோடு  விண்வீதி​யெங்கும் வலம் வரு​வேன்
எந்தகட்டுப்பாடும்அற்று
காலத்​தைகடந்தும்  அதன் முடிவிலும்

என்​னை ஒருஅ​லையாய்
ஒருஇ​லையாய்
ஒரு​மேகமாய்மாற்றி
உன்​னோடுஅ​ழைத்துச்​செல்லா​யோ?

அல்லதுஉன்பாட​லைப் பாடும்
ஓர் சிறிய இ​சைக்கருவியாய்  என்​னைமாற்றி
உன்​னைப்பற்றி​யேஇ​சைக்கச்​செய்
இந்தவன​மெங்கும்.....

ஓ! என்ரணத்தின்வசந்த​மே
உன்​னை  நான் ​​கேட்கி​றேன்
இது இ​லையுதிர்காலம்  என்றால் தான் என்ன
நா​ளை வசந்தம் வராமலா ​போகும்?

                                     தங்​கேஸ்

நன்றி :


கருத்துகள் இல்லை: