23 நவ., 2020

மீண்டும் மேன்மை, மாத இதழ்

மேன்மை - புதிய பொலிவுடன் மீண்டும் மலர்கிறது...                  

2016- ஜனவரியில் மேன்மை இதழ் தன் பயணத்தைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தது. முதல் ஆண்டின் பன்னிரண்டு இதழ்களும் முழுமையாக தொகுக்கப்பட்டு ஒரு களஞ்சியம் வெளியிடப்பட்டது. இதழ் மட்டுமன்றி பதிப்பகமும் மேன்மை என்ற பெயரிலேயே தொடங்கி இதுவரை சுமார் 100 தலைப்புகளுக்கும் மேல் தொடர்ந்து நூல்களை வெளியிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டின் 12 இதழ்கள் முழுவதும் அப்படியே தொகுப்பாகக் கொண்டு வரப்பட்டன. மூன்றாம் ஆண்டில் பத்து இதழ்கள் வெளி வந்தன. அதன் பிறகு எல்லா சிற்றிதழ்களுக்கும் நேரும் சோதனைகள் மேன்மை பத்திரிகைக்கும் நேர்ந்தன. இதழ் தொடர்ந்து வெளி வராமல் தடங்கல் நேர்ந்தது. அடுத்த அடியாக கொரானா தீ நுண்மியின் பெருந்தொற்று கடந்த பத்து மாதங்களுக்கு மேல் எங்களை முடக்கியது. முதல் மூன்று ஆண்டுகளில் மேன்மையின் வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள், படைப்பாளிகள், சந்தாதாரர்கள், சக பத்திரிக்கையாளர்கள்,வாசகர்கள்,பதிப்பக நண்பர்கள் அனைவரும் வேர்களெனத் தாங்கி நின்றனர். நாங்கள் வீழ்ந்து விடாதிருந்தோம். இதோ, மேற்கண்ட அனைவரின் ஒத்துழைப்புடன், உதவியுடன் மேன்மை மீண்டு விட்டது. மீண்டும்  புதிய பொலிவுடன் தன் சிறகை விரித்துப் பறக்கப் போகிறது... டிசம்பர் இதழ் அச்சு மற்றும் மின் இதழ் வடிவில் தயாராகிறது. கடந்த காலத்தில் பங்களித்த புகழ் பூத்த எழுத்தாளர்கள் மறுபடியும் தமது அரிய படைப்புகளை வழங்க முன் வந்துள்ளனர். தங்கள் வாழ்த்துகளுடன் மேன்மை தொடர்ந்து மலரும்

நன்றி 
மேன்மை மாத இதழ்மேன்மை - புதிய பொலிவுடன் மீண்டும் மலர்கிறது...                  2016- ஜனவரியில் மேன்மை இதழ் தன் பயணத்தைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தது. முதல் ஆண்டின் பன்னிரண்டு இதழ்களும் முழுமையாக தொகுக்கப்பட்டு ஒரு களஞ்சியம் வெளியிடப்பட்டது. இதழ் மட்டுமன்றி பதிப்பகமும் மேன்மை என்ற பெயரிலேயே தொடங்கி இதுவரை சுமார் 100 தலைப்புகளுக்கும் மேல் தொடர்ந்து நூல்களை வெளியிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டின் 12 இதழ்கள் முழுவதும் அப்படியே தொகுப்பாகக் கொண்டு வரப்பட்டன. மூன்றாம் ஆண்டில் பத்து இதழ்கள் வெளி வந்தன. அதன் பிறகு எல்லா சிற்றிதழ்களுக்கும் நேரும் சோதனைகள் மேன்மை பத்திரிகைக்கும் நேர்ந்தன. இதழ் தொடர்ந்து வெளி வராமல் தடங்கல் நேர்ந்தது. அடுத்த அடியாக கொரானா தீ நுண்மியின் பெருந்தொற்று கடந்த பத்து மாதங்களுக்கு மேல் எங்களை முடக்கியது. முதல் மூன்று ஆண்டுகளில் மேன்மையின் வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள், படைப்பாளிகள், சந்தாதாரர்கள், சக பத்திரிக்கையாளர்கள்,வாசகர்கள்,பதிப்பக நண்பர்கள் அனைவரும் வேர்களெனத் தாங்கி நின்றனர். நாங்கள் வீழ்ந்து விடாதிருந்தோம். இதோ, மேற்கண்ட அனைவரின் ஒத்துழைப்புடன், உதவியுடன் மேன்மை மீண்டு விட்டது. மீண்டும்  புதிய பொலிவுடன் தன் சிறகை விரித்துப் பறக்கப் போகிறது... டிசம்பர் இதழ் அச்சு மற்றும் மின் இதழ் வடிவில் தயாராகிறது. கடந்த காலத்தில் பங்களித்த புகழ் பூத்த எழுத்தாளர்கள் மறுபடியும் தமது அரிய படைப்புகளை வழங்க முன் வந்துள்ளனர். தங்கள் வாழ்த்துகளுடன் மேன்மை தொடர்ந்து மலரும்

நன்றி 
மேன்மை மாத இதழ்

நன்றி :

கருத்துகள் இல்லை: