திருமந்திரம் - பாடல் #1057: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
விளக்கம்:
பாடல் #1056 இல் உள்ளபடி இன்பத்தை அனுபவிக்கின்ற உயிர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுடன் சேர்ந்து பின்னிப் பிணைந்து இருக்கும் சடை முடியைப் போல நிற்கின்றாள் பராசக்தி. இந்தப் பராசக்தியை தினந்தோறும் தியானித்து சாதகம் செய்யும் அடியவர்களுக்கு அவர்கள் செய்த சாதகத்தின் பலனாக கொடி போல வளர்கின்ற ஞானத்தைக் கொடுத்து அந்த கொடியில் சரிபாதியாக நின்று அதைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாகவும் இருக்கின்றாள்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக